உள்ளடக்கத்துக்குச் செல்

நாசா-இஸ்ரோ தொகுவில்லை வீவாணி (நிசார்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாசா-இஸ்ரோ தொகுவில்லை வீவாணி (நிசார்-NISAR)
நாசா-இஸ்ரோ தொகுவில்லை வீவாணி செயற்கைக்கோள் - ஓவியரின் கருத்தாக்கத்தில்
திட்ட வகைதொலையுணர்வி படிமமாக்கல்
இயக்குபவர்தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா) / இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்
இணையதளம்nisar.jpl.nasa.gov
www.isro.gov.in/NISARSatellite.html
திட்டக் காலம்3 ஆண்டுகள் (திட்டமிட்டுள்ளபடி)[1][2]
விண்கலத்தின் பண்புகள்
விண்கலம்NISAR
செயற்கைக்கோள் பேருந்துஐ-3கே[3]
தயாரிப்புநாசா / ஐஎஸ்ஆர்ஓ
ஏவல் திணிவு2,800 kg (6,200 lb)[4]
திறன்6,500 வாட்டுகள்
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்June 2025 (planned)[5]
ஏவுகலன்ஜி. எஸ். எல். வி எம்கே II
(4 மீட்டர் fairing)[3]
ஏவலிடம்சதீஸ் தவான் விண்வெளி மையம்
ஒப்பந்தக்காரர்ஐஎஸ்ஆர்ஓ
சுற்றுப்பாதை அளபுருக்கள்
Reference systemபுவி மைய வட்டப்பாதை[1]
சுற்றுவெளிசூரிய ஒத்தியங்கும் வட்டணை[6]
அண்மைgee747 km (464 mi)
கவர்ச்சிgee747 km (464 mi)
சாய்வு98.5°
Transponders
Bandஅலைக்கற்றை எஸ். பாண்ட்
எல். பாண்ட் அலைக்கற்றை
கருவிகள்
எல்-பாண்ட்(24-செமீ அலைநீளம்) முனைவாக்கப் பகுப்பாய்வு தொகுவில்லை வீவாணி
எஸ்-பாண்ட் (12-செமீ அலைநீளம்) முனைவாக்கப் பகுப்பாய்வு தொகுவில்லை வீவாணி

NISAR mission logo

நாசா-இஸ்ரோ தொகுவில்லை வீவாணி (NASA-ISRO Synthetic Aperture Radar - NISAR) திட்டம் என்பது நாசா மற்றும் இஸ்ரோ இடையேயான ஒரு கூட்டுத் திட்டமாகும், இது 2025 ஆம் ஆண்டில் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளில் இரட்டை அதிர்வெண் தொகுவில்லை வீவாணியைஉருவாக்கி ஏவுகிறது. இரட்டை அதிர்வெண்களைப் பயன்படுத்தும் முதல் தொலையுணர்வுக் கருவி மற்றும் படிமமாக்கல் வசதியைக் கொண்ட செயற்கைக்கோள் இந்த செயற்கைக்கோள் ஆகும். இது தொலையுணர்வு முறையில், பூமியில் இயற்கையான செயல்முறைகளைக் கவனிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் பயன்படுத்தப்படும். எடுத்துக்காட்டாக, அதன் இடது நோக்கிய கருவிகள் அண்டார்டிக்கின் தாழ்வெப்பநிலைக் கோளத்தை ஆய்வு செய்யும்.[7] இத்திட்டத்தின் மொத்த செலவு $1.5 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது, NISAR உலகின் மிக விலையுயர்ந்த புவி-படமாக்கல் செயற்கைக்கோளாக இருக்கக்கூடும்.[8]

கண்ணோட்டம்

[தொகு]

நாசா-இஸ்ரோ தொகுவில்லை வீவாணி அல்லது தொலையுணர்வி அல்லது நிஸார் செயற்கைக்கோள், மேம்பட்ட தொலையுணர்வி படிமமாக்கலைப் பயன்படுத்தி பூமியின் நிலம் மற்றும் பனித்திரள்களின் உயரத்தை மாதத்திற்கு நான்கு முதல் ஆறு முறை 5 முதல் 10 மீட்டர் தெளிவுத்திறன்களில் வரைபடமாக்கும்.[9] சுற்றுச்சூழல் இடையூறுகள், பனிப்படலச் சரிவு, நிலநடுக்கங்கள், சுனாமி, எரிமலை வெடிப்பு, நிலச்சரிவுகள் போன்ற இயற்கைப் பேரிடர்கள் உள்ளிட்ட புவிக்கோளின் மிகவும் சிக்கலான இயற்கை செயல்முறைகளை அவதானித்து அளவிட வடிவமைக்கப்பட்டுள்ளது.[10][11]

இந்தத் தொலைநோக்குப் பணி நாசா மற்றும் இஸ்ரோ இடையேயான கூட்டாண்மைப் பணி ஆகும்.[12] ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ், நாசா இந்தப் பணியின் எல்-பேண்ட் தொகுவில்லை வீவாணி (அறிவியல் தரவு புவியிடங்காட்டி பெறுநர்களுக்கான உயர் விகிதத் தொலைத்தொடர்புத் துணை அமைப்பு, ஒரு திட-நிலை பதிவுக்கருவி மற்றும் ஏற்புச்சுமை தரவு துணை அமைப்பு) வழங்கும். செயற்கைக்கோள் பேருந்து, அலைக்கற்றை எஸ்-பேண்ட் தொகுவில்லை வாணி (எஸ்ஏஆர்) ஏவுகணை வாகனம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏவுதல் சேவைகளை இஸ்ரோ வழங்கும்.[13]

நிசார் (NISAR) இன் அனைத்துத் தரவுகளும் கண்காணிப்புக்குப் பிறகு ஒன்று முதல் இரண்டு நாட்களுக்குள் மற்றும் இயற்கை பேரழிவுகள் போன்ற அவசர காலங்களில் சில மணிநேரங்களுக்குள் இலவசமாகக் கிடைக்கும்.[14] நிசார் (NISAR) இலிருந்து சேகரிக்கப்பட்ட தரவு புவியின் மேற்பரப்பின் பரிணாமம் மற்றும் நிலை பற்றிய தகவல்களை வெளிப்படுத்தும், அறிவியலாளர்கள் நமது கிரகத்தின் இயற்கையான செயல்முறைகளையும் மாறிவரும் காலநிலையையும் நன்கு புரிந்துகொள்ள உதவும், மேலும் எதிர்கால வளங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை நிர்வாகத்திற்கு உதவும்.[15]

இந்தச் செயற்கைக்கோளானது மூன்று அச்சு நிலைத்தன்மை கொண்டதாக இருக்கும். இது 12 மீ (39 அடி ) வரிசைப்படுத்தக்கூடிய வலையமைப்பு கொண்ட வானலை வாங்கியைப் பயன்படுத்துவதோடு எல்-மற்றும் எஸ்-நுண்ணலை அலைவரிசைக் கற்றைகள் இரண்டிலும் செயல்படும்.[16] இடைவெளி கொண்ட வலையமைப்பு வானலைவாங்கி (ஆன்டென்டா) ஆஸ்ட்ரோ ஏ 1 ஏரோஸ்பேஸ் மூலம் வழங்கப்படும்.[17]

திட்டச் செலவில் இஸ்ரோவின் பங்கு சுமார் 788 கோடி ரூபாய் (93 அமெரிக்க டாலர்கள்) ஆகவும் நாசாவின் பங்கு சுமார் 1,118 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருக்கும்.[18][19][20]

ஏவுதல்

[தொகு]

இந்த செயற்கைக்கோள் முதலில் மார்ச் 30, 2024 அன்று GSLV மார்க் II ஏவூர்தி மூலம் இந்தியாவில் இருந்து ஏவத் திட்டமிடப்பட்டது, ஆனால் தேவையான வன்பொருள் புதுப்பிப்பு காரணமாக அது மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டது.[21] இந்த சுற்றுப்பாதை சூரியனுக்கு ஒத்திசைவான, விடியல் முதல் அந்தி வரை இருக்கும் வகையிலானது. இத்திட்டத்தின் திட்டமிடப்பட்ட பணி ஆயுள் மூன்று ஆண்டுகள். இந்தச் செயற்கைக்கோள் ஜனவரி 2024 இல் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டு, ஏவுதலுக்கான தயாரிப்பில் அதன் இறுதி சோதனை மற்றும் பகுப்பாய்வைச் செய்து கொண்டிருந்தது.[22] இருப்பினும், டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், இஸ்ரோ தலைவர் ஸ்ரீதர பணிக்கர் சோமநாத், NISAR-க்கான GSLV மார்ச்-ஏப்ரல் மாதத்திற்குள் கட்டமைக்கப்படும் என்றாலும், செயற்கைக்கோள் இன்னும் சோதனைகளுக்கு உட்பட்டு வருவதாகவும், ஏவுதல் சிறிது தாமதமாகலாம் என எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.[23] ஏவூர்தியின் பயணத்தின் போது பிரதிபலிப்பான் எதிர்பார்த்ததை விட அதிக வெப்பநிலையை எதிர்கொள்ளக்கூடும் என்று சோதனைகள் கண்டறிந்தன, எனவே, அதிக வெப்பமடைவதற்கான அபாயத்தைக் குறைக்க பிரதிபலிப்புப் பூச்சு பூசுவதற்காக கலிபோர்னியாவில் உள்ள உற்பத்தியாளரிடம் அது திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.[24][25]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Satellite: NISAR". World Meteorological Organization (WMO). 4 January 2020. Retrieved 16 March 2021.
  2. "Optimization of Debris Shields on the NISAR Mission's L-Band Radar Instrument" (PDF). conference.sdo.esoc.esa.int. ESA Space Debris Office. 18–21 April 2017. Retrieved 16 March 2021.{{cite web}}: CS1 maint: date format (link)
  3. 3.0 3.1 "Overview of NISAR Mission and Airborne L- and S- SAR" (PDF). sac.gov.in. Space Applications Centre, ISRO. August 2018. Retrieved 16 March 2021.
  4. Neeck, Steven. "The NASA Earth Science Program and Small Satellites" (PDF). dlr.de. DLR. Archived from the original (PDF) on 23 November 2018. Retrieved 23 November 2018.
  5. Foust, Jeff (14 December 2024). "NISAR planned to launch in March 2025 after antenna repairs". SpaceNews. Retrieved 14 December 2024.
  6. "NISAR Mission". ISRO. 19–20 November 2015. Archived from the original on 4 August 2020. Retrieved 16 March 2021.{{cite web}}: CS1 maint: date format (link)
  7. Witze, Alexandra (4 February 2019). "Arctic scientists iced out by U.S.–India radar mission". Nature 566 (7742): 18. doi:10.1038/d41586-019-00278-8. பப்மெட்:30723349. Bibcode: 2019Natur.566...18W. 
  8. Error on call to வார்ப்புரு:cite press release: Parameter title must be specified
  9. "Landslide Hazards to Infrastructure" (PDF). nisar.jpl.nasa.gov. NASA (JPL). 2017. Archived from the original (PDF) on 21 March 2019. Retrieved 16 March 2021.
  10. "NASA-ISRO SAR Mission (NISAR)". Jet Propulsion Laboratory. Retrieved 16 March 2021.
  11. "NASA-ISRO SAR (NISAR) Mission Science Users' Handbook" (PDF). NASA. Retrieved 27 May 2021.
  12. "NASA-ISRO SAR Mission (NISAR)". Jet Propulsion Laboratory. Retrieved 16 March 2021.
  13. "U.S., India to Collaborate on Mars Exploration, Earth-Observing Mission". NASA. 30 September 2014. Retrieved 16 March 2021.
  14. "Landslide Hazards to Infrastructure" (PDF). nisar.jpl.nasa.gov. NASA (JPL). 2017. Archived from the original (PDF) on 21 March 2019. Retrieved 16 March 2021.
  15. "NASA-ISRO SAR Mission (NISAR)". Jet Propulsion Laboratory. Retrieved 16 March 2021.
  16. "NASA-ISRO SAR Mission (NISAR)". Jet Propulsion Laboratory. Retrieved 16 March 2021.
  17. Error on call to வார்ப்புரு:cite press release: Parameter title must be specified
  18. "Rajya Sabha Q. No.2223, Session:243 "JOINT PROJECT BETWEEN NASA AND ISRO"" (PDF). Department of Space. 3 August 2017. Archived from the original (PDF) on 3 August 2017. Retrieved 16 March 2021.
  19. "Joint Project between NASA and ISRO". Press Information Bureau, Government of India. http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=169570. 
  20. "United States Government Accountability Office Report to Congressional Committees: NASA Assessments of Major Projects GAO-24-106767" (PDF). June 2024. p. 81.
  21. Foust, Jeff (24 March 2024). "Antenna work delays NISAR launch". SpaceNews. Retrieved 2 April 2024.
  22. "ISRO's instrument design passes Nasa review". The Times of India. 31 July 2014. Retrieved 16 March 2021.
  23. "Nisar only in 2nd half of 2024; Trishna gets nod". The Times of India. 2024-03-19. https://timesofindia.indiatimes.com/india/nisar-only-in-2nd-half-of-2024-trishna-gets-nod/articleshow/108620945.cms. 
  24. "Isro's Nisar mission launch delayed, key component sent back to NASA". India Today (in ஆங்கிலம்). 23 March 2024. Retrieved 2024-03-23.
  25. "Work Continues on NISAR Satellite as Mission Looks Toward Launch – NASA-ISRO SAR Mission (NISAR)". blogs.nasa.gov (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-03-22. Retrieved 2024-03-23.

தனது முதல் புகைப்படத்தை வெளியிட்ட நிசார் செயற்கைக்கோள்' இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோள் கடந்த ஜூலை 30 ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்ட இச் செயற்கைக்கோள் முதன் முறையாக பூமியைப் படம் பிடித்து அனுப்பியுள்ளது. இப்படத்தில் அமெரிக்க காடுகள் , ஈரநிலங்கள் , மிகச் சிறிய தீவுகள் விரிவாகப் பதிவாகியுள்ளன.