நாங்கெல்லாம் அப்பவே அப்படி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாங்கெல்லாம் அப்பவே அப்படி
நாங்கெல்லாம் அப்பவே அப்படி
நாங்கெல்லாம் அப்பவே அப்படி
இயக்கம்நாகேசுவர ரெட்டி
தயாரிப்புசுந்தர லட்சுமி
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புவிஷ்ணு மஞ்சு
ஹன்சிகா மோட்வானி
பிரபு
ஒளிப்பதிவுஎசு. .ராதாகிருஷ்ணன்
வெளியீடுமார்ச்சு 21, 2014
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நாங்கெல்லாம் அப்பவே அப்படி 2014 மார்ச்சில் வெளிவந்த திரைப்படமாகும். இது தெலுங்கில் வந்த தேனிகா நானா ரெடி என்ற படத்தின் மொழிமாற்று[1]. இதை நாகேசுவர ரெட்டி இயக்கியுள்ளார்[2]. விஷ்ணு மஞ்சு, ஹன்சிகா மோட்வானி, பிரபு, கோட்டா சீனிவாச ராவ், பிரம்மானந்தம் போன்றோர் நடித்துள்ளனர்.

கதைச்சுருக்கம்[தொகு]

மதுரையில் ஜமீன்தாரான பிரபுவின் தங்கை சீதா 20 வருடத்துக்கு முன், முசுலீமான சுமனை காதல் திருமணம் செய்து கொள்கிறார். இதனால் கோபமடையும் பிரபு, சுமனின் காலை வெட்டி விடுகிறார். இதனால், பிரபுவை பழிவாங்க நினைக்கும் சுமன் தன் மனைவிக்கு சேரவேண்டிய சொத்தை தரும்படி பிரபு மீது வழக்கு தொடர்ந்து 20 வருடங்கள் கழித்து அந்த வழக்கில் வெற்றி பெறுகிறார். அதன்படி சீதாவுக்கு சேரவேண்டிய சொத்துக்களை பிரபு அவரிடம் ஒப்படைக்கிறார். தங்கள் இருவர் குடும்பமும் ஒன்று சேர்ந்துவிடும் என்று எண்ணி வாழ்ந்து வந்த சீதாவுக்கு, இந்த வழக்கின் வெற்றி வேதனையைத் தருகிறது.

சீதா தன்னுடைய மகனான விஷ்ணு மஞ்சுவிடம் இதுபற்றி சொல்லி வருத்தப்படுகிறார். தனது ஆசையே அண்ணன் குடும்பத்தோடு சேர்ந்து வாழவேண்டும் என்றும் சொல்கிறார். இதனால் நாயகன் விஷ்ணு மஞ்சு, தன்னுடைய இரு குடும்பங்களையும் சேர்த்து வைக்க முயல்கிறார்.

வழக்கு தோல்வியடைந்த வருத்தத்தில் இருக்கும் பிரபுவுக்கு வீட்டில் யாகம் வளர்த்தால் நன்மை கூடும் என்று அறிவுரை கூறுகின்றனர். அதற்கு ஏற்பாடு செய்யும்படி பிரபு தன்னுடைய மேலாளரான பிரம்மானந்தத்திடம் கட்டளையிடுகிறார். இவரோ முஸ்லீமான விஷ்ணு மஞ்சுவை தவறுதலாக புரோகிதர் என்று வீட்டுக்கு வரவழைக்கிறார். தனது மாமா வீட்டுக்குள் நுழைய இது ஒரு நல்ல வாய்ப்பாக எண்ணி, விஷ்ணு, பிரபுவின் வீட்டுக்குள் நுழைகிறார்.

அங்கு பிரபுவின் மகளான ஹன்சிகா, விஷ்ணு மஞ்சுவைப் பார்த்ததும் காதல் வயப்படுகிறார். இருந்தும் தன் காதலை அவரிடம் சொல்லாமல் இருந்து வருகிறார். ஹன்சிகாவுக்கு விஷ்ணு தனது முறைமாமன் என்று தெரியாமலேயே அவருடன் நெருங்கி பழகி வருகிறார். ஒருகட்டத்தில் புரோகிதரான விஷ்ணு மஞ்சுவை காதலிப்பதாகவும் அவரை தனக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும் எனவும் பிரபுவிடம் ஹன்சிகா கேட்கிறார்.

பிரபு ஹன்சிகா-விஷ்ணு மஞ்சு காதலுக்கு பச்சைக்கொடி காட்டினாரா?விஷ்ணு மஞ்சு தனது தங்கை மகன் என்பதை அறிந்தாரா? தன் தாயின் ஆசையை விஷ்ணு மஞ்சு நிறைவேற்றினாரா? என்பதை சுவையாக இயக்குநர் சொல்லியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.tamilcinetalk.com/march-7-release-movies/
  2. http://cinema.maalaimalar.com/2014/03/07191717/Nangellam-Appave-Appadi-movie.html