நாக்பூர் மாகாணம்

ஆள்கூறுகள்: 21°09′N 79°05′E / 21.15°N 79.09°E / 21.15; 79.09
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Warning: Value not specified for "common_name"
நாக்பூர் மாகாணம்
பிரித்தானிய இந்தியாவின் மாகாணம்

1853–1861 [[மத்திய மாகாணம்|]]

Flag of

இந்தியக் கொடி

Location of
Location of
பிரித்தானிய இந்தியாவின் மத்திய மாகாண வரைபடம்
வரலாறு
 •  நாக்பூர் இராச்சியத்தை கைப்பற்றுதல் 1853
 •  நாக்பூர் மாகாணத்தை, புதிய மத்திய மாகாணத்துடன் இணைத்தல் 1861

நாக்பூர் மாகாணம் (Nagpur Province) இந்தியாவில் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியின் போது நிறுவப்பட்ட மாகாணங்களில் ஒன்றாகும். இம்மாகாணம் நாக்பூர் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கியது.

வரலாறு[தொகு]

மராத்தியர்கள் ஆண்ட நாக்பூர் இராச்சியம், மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போருக்குப் பின்னர் 1818ல் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியினர் விதித்த துணைப்படைத் திட்டத்தை ஏற்று, கம்பெனி ஆட்சிக்கு அடங்கிய சுதேச சமஸ்தானமாக விளங்கியது.

நாக்பூர் இராச்சியத்தின் மன்னர் மூன்றாம் ராகோஜி காலத்திற்கு பின், நாக்பூர் இராச்சியம் வாரிசுரிமையற்று இருந்ததால், அவகாசியிலிக் கொள்கையின் படி, நாக்பூர் இராச்சியப்பகுதிகளுடன், அண்மைப் பகுதிகளை இணைத்து, 11 டிசம்பர் 1853 அன்று நாக்பூர் மாகாணம் நிறுவப்பட்டது.[1]

பின்னர் 1861-ஆம் ஆண்டில் நாக்பூர் மாகாணத்தை மத்திய மாகாணத்துடன் இணக்கப்பட்டது. 1903-ஆம் ஆண்டில் மத்திய மாகாணப் பகுதிகள் மத்திய மாகாணம் மற்றும் பேரர் பகுதிகளுடன் இணைக்கப்பட்டது. 1950-ஆம் ஆண்டில் மத்திய மாகாணம் மற்றும் பேரர் பகுதிகள் மும்பை மாகாணம் மற்றும் விந்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுடன் இணக்கப்பட்டது. நாக்பூர் மாகாணத்தில் இருந்த சிந்த்வாரா மாவட்டம், நாக்பூர் மாவட்டம், பண்டாரா மாவட்டம், சந்திரபூர் மாவட்டம், வர்தா மாவட்டம் மற்றும் பாலாகாட் மாவட்டங்கள் மகாராட்டிரா மாநிலத்தில் விதர்பா பிரதேசத்தில் உள்ளது. துர்க் மாவட்டம், ராய்ப்பூர் மாவட்டம் மற்றும் பிலாஸ்பூர் மாவட்டங்கள் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளது

நாக்பூர் மாகாணத்தில் இருந்த மாவட்டங்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Hunter, William Wilson, Sir, et al. (1908). Imperial Gazetteer of India, 1908-1931; Clarendon Press, Oxford
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாக்பூர்_மாகாணம்&oldid=3386587" இலிருந்து மீள்விக்கப்பட்டது