உள்ளடக்கத்துக்குச் செல்

நாகேந்திர நாத் ஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாகேந்திர நாத் ஜா (Nagendra Nath Jha)(5 ஜனவரி 1935 - 15 ஜூன் 2020)[1] என்பவர் இந்தியத் தூதர் ஆவார்.மற்றும் பாண்டிச்சேரி ஒன்றிய முன்னாள் துணைநிலை ஆளுநர் ஆவார்.

ஜா சனவரி 5, 1935-ல் பிறந்தார். தில்லி பல்கலைக்கழகம் மற்றும் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, 1957-ல் வெளியுறவுத் துறையில் பணியில் சேர்ந்தார். அயர்லாந்து (1977-1979), துருக்கி (1979-1981), குவைத் (1984-1989), யூகோசுலாவியா (1989-1990) மற்றும் இலங்கையில் (1990-1993) இந்திய தூதராக பணியாற்றினார். இவர் பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணை நிலை ஆளுநராகவும் (2001-2004) பாண்டிச்சேரியின் துணைநிலை ஆளுநராகவும் (2004) பதவியை வகித்தார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Giles, Denis (2020-06-15). "Former Lt. Governor, A&N Islands Shri NN Jha Passes Away, LG Condoles Death". andamanchronicle.net. பார்க்கப்பட்ட நாள் 2020-07-11.
  2. Europa Regional Surveys of the World: South Asia. Europa Publications. 2007. p. 551. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85743-393-7.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகேந்திர_நாத்_ஜா&oldid=3369504" இலிருந்து மீள்விக்கப்பட்டது