நாகா நாட்டுப்புறக் கதைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாகா நாட்டுப்புறக் கதைகள் என்பது இந்தியாவின் வடகிழக்கு பகுதி மற்றும் மியான்மரின் வடமேற்கு பகுதிகளில் வாழும் நாகாக்களின் உள்ளூர் கதைகள், கொண்டாட்டங்கள் மற்றும் பழக்கவழக்கங்களின் தொகுப்பை விவரிக்கிறது. நாகர்கள் அங்காமி, ஏஓ, லோதா, சுமி மற்றும் பலர் உட்பட தனித்துவமான கலாச்சாரங்களால் ஆனவர்கள். நாகாலாந்தில் உள்ள ஒவ்வொரு பழங்குடியினருக்கும் அதன் சொந்த நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் உள்ளன [1] அவை அவர்களுக்கு மட்டுமே பிரத்யேகமானவை என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு பழங்குடியினரும் தங்கள் பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள், இதன் விளைவாக, நாகலாந்து பண்டிகைகளின் பூமி என்று அழைக்கப்படுகிறது. கிழக்கில் மியான்மர், மேற்கில் அசாம், வடக்கில் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அசாமின் ஒரு பகுதி மற்றும் தெற்கில் மணிப்பூர் ஆகியவற்றால் சூழப்பட்ட நாகாலாந்து, பல தலைமுறைகளாக தங்களுக்குள் பரிமாறிக்கொண்ட பல்வேறு கதைகளின் காரணமாக திருவிழாக்கள் பூமி என்று மட்டுமல்லாமல் நாட்டுப்புறக் கதைகளின் பூமி என்றும் அழைக்கப்படுகிறது. அங்கு வாழும் மக்கள் மற்றும் பழங்குடியினரின் பன்முகத்தன்மை, ஒவ்வொருவரும் தங்கள் சொந்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டிருப்பதால், அம்மாநிலத்தில் ஆண்டு முழுவதுமே கொண்டாட்டங்களின் சூழலை உருவாக்குகிறது.

நாட்டுப்புற கதைகள்[தொகு]

ஜினா மற்றும் எடிபென்[தொகு]

"'ஜினா மற்றும் எடிபென்'", என்பது மோபுங்சுகேட் கிராமத்தை சேர்ந்த இரண்டு காதலர்களைப் பற்றிய ஒரு ஆவோ நாகா இனத்தின் நாட்டுப்புறக் கதையாகும், அவர்கள் தங்கள் சமூக அந்தஸ்தில் உள்ள வேறுபாடுகள் மற்றும் ஏற்ற தாழ்வுகள் காரணமாக பிரிக்கப்பட்டதைப் பற்றிய கதையாகும். இந்த நாட்டுப்புறக் கதை நபீனா தாஸின் கவிதையை தழுவி நாகாலாந்து முழுவதும் உள்ள பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது. மொபுங்சுகெட்டின் சூழலியல் பூங்காவில் இரண்டு காதலர்களுக்கும் கோபுரங்களும் கூடுதல் சிற்பங்களுடன் நினைவுகூரப்பட்டுள்ளனர்.[2]

சோப்ஃபுனுவோ[தொகு]

சோப்னுவோ, என்பது ருசோமாவில் உள்ள தங்கள் சொந்த கிராமத்திற்குத் திரும்பும் வழியில் ஒரு பெண் மற்றும் அவரது குழந்தையைப் பற்றிய ஒரு அங்காமி நாகா பழங்குடிகளின் நாட்டுப்புறக் கதையாகும். அவர்கள் ருசோமாவில் உள்ள தங்கள் சொந்த கிராமத்திற்குத் திரும்பும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nagaland: Land of festivals and folklore". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 31 October 2019. பார்க்கப்பட்ட நாள் 27 November 2022.
  2. "History revisited: The romance of Etiben and Jina, a folk tale of Ao tribes". india360.theindianadventure.com. 15 May 2020. பார்க்கப்பட்ட நாள் 27 November 2022.
  3. Joshi, Vibha (2012). A Matter of Belief: Christian Conversion and Healing in North-East India. Berghahn Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780857456731. https://books.google.com/books?id=PWZjsBvrQCMC&q=Sopf%C3%BCnuo&pg=PA63. பார்த்த நாள்: 27 November 2022.