நாகாலாந்து மாநில அருங்காட்சியகம்

ஆள்கூறுகள்: 25°41′06″N 94°06′18″E / 25.6850°N 94.1049°E / 25.6850; 94.1049
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகாலாந்து மாநில அருங்காட்சியகம்
Nagaland State Museum
நுழைவாயில்
Map
நிறுவப்பட்டதுநவம்பர் 25, 1970; 53 ஆண்டுகள் முன்னர் (1970-11-25)
அமைவிடம்பயாவு மலை, கோகிமா, நாகாலாந்து, இந்தியா
ஆள்கூற்று25°41′06″N 94°06′18″E / 25.6850°N 94.1049°E / 25.6850; 94.1049
வருனர்களின் எண்ணிக்கை20,539 (2019)
இயக்குனர்உரோங்சென் பொங்கனர்
வலைத்தளம்artandculture.nagaland.gov.in

நாகாலாந்து மாநில அருங்காட்சியகம் (Nagaland State Museum) இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தின் தலைநகரமான கோகிமாவில் உள்ள பயாவு மலையில் அமைந்துள்ளது. நாகாலாந்தின் கலை மற்றும் பண்பாட்டுத் துறையால் அருங்காட்சியகம் இயக்கப்படுகிறது. இந்த அருங்காட்சியகம் நாகாலாந்து முழுவதிலும் உள்ள பழங்கால சிற்பங்கள், பாரம்பரிய உடைகள், கல்வெட்டுகள் உள்ளிட்ட கலைப்பொருட்களின் விரிவான தொகுப்பை சேகரித்து, பாதுகாத்து, காட்சிப்படுத்துகிறது. [1] அருங்காட்சியகம் முதன்முதலில் 1970 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதியன்று பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது [2] [3]

நாகாலாந்தின் கலை மற்றும் பண்பாட்டு இயக்குநரகத்தால் இயக்கப்படும் இரண்டு அருங்காட்சியகங்களில் இதுவும் ஒன்றாகும்.

வரலாறு[தொகு]

கலை மற்றும் பண்பாட்டு இயக்குநரகம் (முன்னர் நாகா பண்பாட்டு நிறுவனம்) 1964 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தேதியன்று உருவாக்கப்பட்டது. இதன் முக்கிய கவனம் நாகா மக்களின் வாழ்க்கை மற்றும் பண்பாட்டு ஆராய்ச்சிக்கான ஓர் ஆராய்ச்சி நூலகம் ஆகும். [2]

1970 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், நாகாலாந்து மாநில அருங்காட்சியக கட்டிடம் கட்டப்பட்டது. இதில் இயக்குனரகமும் இருந்தது. 1970 [2] ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி, இனவரைவியல் காட்சியகம் கொண்ட இந்த அருங்காட்சியகம் பொதுமக்களுக்கு முறையாகத் திறக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nagaland State Museum : A window to the material and socio-cultural world of the Naga tribes". பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
  2. 2.0 2.1 2.2 "Department of Art and Culture, Nagaland". Department of Art and Culture, Nagaland. Archived from the original on 26 அக்டோபர் 2021. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
  3. "The State Museum". Incredible India. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.