நாகார்ஜுனா சாகர் விசிறித்தொண்டை ஓணான்
Appearance
நாகார்ஜுனா சாகர் விசிறித்தொண்டை ஓணான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | சீ. தொண்டலு
|
இருசொற் பெயரீடு | |
சீதானா தொண்டலு தீபக் மற்றும் பலர் 2018[2] |
நாகார்ஜுனா சாகர் விசிறித்தொண்டை ஓணான் என்பது சீதானா தொண்டலு (Sitana thondalu), அகாமிடே குடும்ப பல்லிகளின் ஒரு சிற்றினமாகும். இது இந்தியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[3] இது இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம் குண்டூரில் கண்டறியப்பட்ட மாதிரியின் அடிப்படையில் விவரிக்கப்பட்டது.
முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் இச்சிற்றினத்தின் இனப்பெருக்கக் காலம் சூன் மற்றும் ஆகத்து மாதங்கள் ஆகும்.
வாழிடம்
[தொகு]பாறைகள் நிறைந்த, அரிதான தாவரங்கள் முக்கியமாகப் புதர்கள் மற்றும் சில குன்றிய மரங்கள் (முண்டுலியா செரிசியா) உள்ளப் பகுதிகளில் காணப்படும்.
பெயர்க் காரணம்
[தொகு]குறிப்பிட்ட சிற்றினப் பெயரானது ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்காணா மாநிலங்களில் உள்ள அகமிடே பல்லிக்கான தொண்டலு என்ற தெலுங்கு வார்த்தையிலிருந்து பெறப்பட்ட பெயர்ச்சொல்லாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Vyas, R.; Srinivasulu, C.; Mohapatra, P.; Thakur, S. (2021). "Sitana thondalu". IUCN Red List of Threatened Species 2021: e.T149313273A149313279. doi:10.2305/IUCN.UK.2021-3.RLTS.T149313273A149313279.en. https://www.iucnredlist.org/species/149313273/149313279. பார்த்த நாள்: 10 June 2024.
- ↑ DEEPAK, V.; AKSHAY KHANDEKAR, R. CHAITANYA & PRAVEEN KARANTH 2018. Descriptions of two new endemic and cryptic species of Sitana Cuvier, 1829 from peninsular India. Zootaxa 4434 (2): 327–365
- ↑ Ganesh S.R., Bubesh Guptha 2021. Herpetological diversity in the Central Eastern Ghats, Peninsular India. Journal of Animal Diversity 3 (3): 18-44