நாகலாபுரம் ஊராட்சி (தேனி ஊராட்சி ஒன்றியம்)
| நாகலாபுரம் | |||||
| — ஊராட்சி — | |||||
| ஆள்கூறு | |||||
| நாடு | |||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||
| மாவட்டம் | தேனி | ||||
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] | ||||
| முதலமைச்சர் | விஜய்[2] | ||||
| மாவட்ட ஆட்சியர் | மரு. வைத்தீநாதன், இ. ஆ. ப [3] | ||||
| ஊராட்சித் தலைவர் | |||||
| மக்களவைத் தொகுதி | தேனி | ||||
| மக்களவை உறுப்பினர் | |||||
| சட்டமன்றத் தொகுதி | போடிநாயக்கனூர் | ||||
| சட்டமன்ற உறுப்பினர் | |||||
| மக்கள் தொகை | 1,914 | ||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
|
குறியீடுகள்
| |||||
நாகலாபுரம் ஊராட்சி என்பது தேனி மாவட்டம், தேனி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சிகளில் ஒன்றாகும். [4] நாகலாபுரம், கோபாலபுரம், பாலகிருஷ்ணாபுரம், சங்கக்கோனாம்பட்டி, சிவலிங்கநாயக்கன்பட்டி எனும் ஐந்து சிற்றூர்கள் நாகலாபுரம் ஊராட்சியில் இடம் பெற்றுள்ளன.
நாகலாபுரம் ஊராட்சிப் பகுதியிலுள்ள நாகலாபுரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பாரதி வித்தியா மந்திர் பதின்ம மேல்நிலைப்பள்ளி [5] என்று இரு பள்ளிகளும், பாலகிருஷ்ணாபுரத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியும், கோபாலபுரத்தில் என்.ஆர்.டி.நினைவுத் தொடக்கப்பள்ளியும் அமைந்திருக்கின்றன.
தேனி மாவட்டத்தில் இருக்கும் விவசாயிகள், உற்பத்தி செய்யும் காய்கனிகளை விற்பனை செய்வதற்கு வசதியாக நாகலாபுரத்தில் மத்திய காய்கனித் தரகுச் சந்தை அமைக்கப்பட்டிருக்கிறது. [6] இந்த ஊரில் தயாரிக்கப்பட்டு வரும் காராச்சேவு உள்ளூரில் மட்டுமின்றி, உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. [7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம பஞ்சாயத்துக்கள் (தேனி மாவட்ட அரசு வலைத்தளம்)
- ↑ பாரதி வித்யாமந்திர் பள்ளி வலைத்தளம்
- ↑ தேனி நாகலாபுரம் செண்ட்ரல் மார்க்கெட் திறப்பு விழா (தினமலர் நாளிதழ் செய்தி)
- ↑ நாடு முழுவதும் விற்பனையாகும் நாகலாபுரம் கிட்டுச் சேவு..! (விகடன் நேர்காணல்)