உள்ளடக்கத்துக்குச் செல்

நாகறக்ச, குறுளுறக்ச நடனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாகறக்ச, குறுளுறக்ச நடனம் எனும்போது முகமூடிகளை அணிந்துகொண்டு ஆடப்படும் நடனமாக காணப்படுகின்றது. நாகறக்ச நடனம், குறுளுறக்ச நடனம் ஆகியன ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரேநேரத்தில் ஆடப்படும். இலங்கையில் தாழ் நிலப் பகுதியில், குறிப்பாக தென் மாகாணத்தில் இன்றும் இந்நடனம் ஒரு முக்கிய பாரம்பரிய கிராமிய நிகழ்ச்சியாக ஆடப்படுகின்றது.

மோதலை சித்தரிப்பது

[தொகு]

இந்நடனமானது பாரம்பரிய கிராமிய நடனமான 'கோலம்' என்பதன் ஒரு பகுதியாக ஆடப்படுகிறது. இந்நடனமானது பொதுவாக இரவு முழுவதும் ஆடப்படுகின்றதொன்றாகும். இந்நடனமானது பறவைகளின் புராணகால அரசனான 'குறுளுறக்ச ' தேவதைக்கும் புராணகால நாகராசனான 'நாகறக்ச ' இற்கும் இடையிலான நடைபெறும் மோதலை சித்தரிப்பதாக உருவகப்படுத்துகிறது. எனவே 'நாகறக்ச ' எனும்போது பயங்கரமான உருவமைப்புடன் கூடியதாக குறிப்பாக நாக பாம்பின் தலையமைப்பை கொண்டு முகமூடி தயாரிக்கப்பட்டிருக்கும். நடனக் கலைஞர் அணியும் அணிகலன்களும் இதனை ஒத்த வகையிலேயே இருக்கும்.

'குறுளுறக்ச' நடனக் கலைஞர்களின் முகமூடி பறவைகளின் வடிவையொத்ததாகவும் அழகிய முறையில் வடிவமைக்கப்பட்டாதாகவும் காணப்படும். 'நாகறக்ச', 'குறுளுறக்ச' இரண்டு நடனக் குழுவினருக்குமிடையில் ஒரு வாதப்பிரதிவாதமாக இந்த நடனம் சோடிக்கப்படுவதால் இந்த இரண்டு நடன வடிவங்களும் ஒரே நேரத்திலேயே இடம்பெறும்.