நாகம் ஜனார்தன் ரெட்டி
நாகம் ஜனார்தன் ரெட்டி | |
---|---|
சுகாதாரத் துறை அமைச்சர், ஆந்திர அரசு | |
பதவியில் 1995–2004 | |
முதலமைச்சர் | நா. சந்திரபாபு நாயுடு |
ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1985–1989 | |
முதலமைச்சர் | என். டி. ராமராவ் |
தொகுதி | நாகர்கர்னூல் |
ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1994–2014 | |
முதலமைச்சர் | என். டி. ராமராவ் நா. சந்திரபாபு நாயுடு எ. சா. ராஜசேகர் கொனியேட்டி ரோசையா நல்லாரி கிரண் குமார் ரெட்டி |
தொகுதி | நாகர்கர்னூல் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மே 22, 1948 நாகர்கர்னூல், மகபூப்நகர் மாவட்டம் தெலங்காணா |
அரசியல் கட்சி | பாரத் இராட்டிர சமிதி |
பிற அரசியல் தொடர்புகள் | பாரதிய ஜனதா கட்சி (2013 - 2018) தெலுங்கு தேசம் கட்சி (1982 - 2012) இந்திய தேசிய காங்கிரசு (2018 - 2023) |
வாழிடம்(s) | 19-65, நாகர்கர்னூல்,மகபூப்நகர் |
நாகம் ஜனார்தன் ரெட்டி (Nagam Janardhan Reddy) (பிறப்பு மே 22, 1948) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் நாகர்கர்னூல் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆந்திர பிரதேச சட்டப் பேரவையில் ஐந்து முறை உறுப்பினராக இருந்துள்ளார். [1]
அரசியல் வாழ்க்கை
[தொகு]நாகம் ஜனார்தன் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். இவர் நாகர்கர்னூல் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். 1995 முதல் 2004 வரை ஐக்கிய ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார்.
2011-ம் ஆண்டு கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் தனி தெலங்காணா மாநிலம் அமைக்க வலியுறுத்தி சட்டசபையில் இருந்து உடனடியாக வெளியேறினார். பின்னர் இவர் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்த 'தெலங்காணா நகர சமிதி' என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். 2012ல் மீண்டும் அதே தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2013ல் ரெட்டி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். [2] 2018 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இணைந்தார். [3] அக்டோபர் 31, 2023 அன்று, இவர் மீண்டும் க. சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத் இராட்டிர சமிதி கட்சிக்கு மாறினார்.[4] [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Last Election Results in Nagarkurnool, Telangana". பார்க்கப்பட்ட நாள் 2017-09-13.
- ↑ "Nagam Janardhan Reddy quits BJP to join Congress". March 23, 2018. பார்க்கப்பட்ட நாள் 2022-10-29.
- ↑ Reddy, Ravi (2018-04-25). "Nagam Janardhan Reddy joins Congress" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/telangana/nagam-janardhan-reddy-joins-congress/article23670750.ece.
- ↑ "కేసీఆర్ సమక్షంలో బీఆర్ఎస్లో చేరిన నాగం, విష్ణువర్ధన్ రెడ్డి" (in te). 31 October 2023. https://www.sakshi.com/telugu-news/telangana/nagam-janardhan-reddy-vishnu-vardhan-reddy-joins-brs-1831011.
- ↑ "Former Minister Nagam Janardhan Reddy, Ex-MLA Vishnu Vardhan Join BRS" (in en). 31 October 2023. https://news.abplive.com/telangana/telangana-assembly-elections-former-minister-nagam-janardhan-reddy-ex-mla-vishnu-vardhan-join-brs-1639491.