நாகம்பாள் ஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாகம்பாள் டி. சுவர்ணா ஷா (Nagambal Shah) என்பவர் அமெரிக்கக் கணிதவியலாளர் மற்றும் புள்ளியியல் நிபுணர் ஆவார். இவர் அமெரிக்கப் புள்ளியியல் சங்கத்தின் வருடாந்திர இசுடேட்பீசுடு நிறுவனர் மற்றும் சங்கத்தின் பன்முகத்தன்மை வழிகாட்டுதல் திட்டத்தின் தலைவர் ஆவார்.[1]:{{{3}}} இவர் புள்ளியியல் சிறுபான்மையினர் சங்கத்தின் குழுவின் முன்னாள் தலைவர்.[2]:{{{3}}}

கல்வி மற்றும் தொழில்[தொகு]

ஷா இந்தியாவைச் சேர்ந்தவர். இங்கு இவர் கணிதத்தில் இளநிலைப் படிப்பை முடித்தார். புள்ளியியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.[2]:{{{3}}} ஷா முனைவர் பட்டத்தினை புள்ளியியலில் கனடாவில் உள்ள விண்ட்சர் பல்கலைக்கழகத்தில் 1970-ல் முடித்தார்.[3]:{{{3}}}

இவர் 1972-ல் ஸ்பெல்மேன் கல்லூரி கணிதத் துறையில் சேர்ந்தார்.[4]:{{{3}}} 2014-ல் தகைசால் பேராசிரியராக ஓய்வு பெற்றார்.[5]:{{{3}}}

அங்கீகாரம்[தொகு]

2001-ல், எமரி பல்கலைக்கழகத்தின் ரோலின்ஸ் பொதுச் சுகாதார பள்ளி ஷாவிற்கு மார்ட்டின் லூதர் கிங் இளையோர் சமூக சேவை விருதை வழங்கியது.[6]:{{{3}}} ஷா 2010-ல்[1]:{{{3}}} அமெரிக்கப் புள்ளியியல் சங்கத்தின் உறுப்பினராகச் சேர்ந்தார். இவர் கணிதவியலாளர்களின் தேசிய சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதை 2017-ல் பெற்றார்.[7]:{{{3}}}

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Coles, Adrian; Chittams, Jesse; Swift, Dionne (October 1, 2017), "Reflections on Diversity Mentoring Program, Contagious Excellence", StatTrak, American Statistical Association, பார்க்கப்பட்ட நாள் 2020-06-19
  2. 2.0 2.1 Nagambal Shah: Biosketch, Math Alliance, archived from the original on 2020-06-22, பார்க்கப்பட்ட நாள் 2020-06-19
  3. Hlynka, Myron (February 2016), reasons for choosing the U. of Windsor to study mathematics and statistics, University of Windsor, பார்க்கப்பட்ட நாள் 2020-06-19
  4. Nagambal Shah, Ph.D., Professor Emerita, Spelman College, பார்க்கப்பட்ட நாள் 2020-06-19
  5. "Nagambal "Swarna" Shah", Grandma Got STEM, May 4, 2014, பார்க்கப்பட்ட நாள் 2020-06-19
  6. "2001 Individual Award Recipient: Nagambal Shah, Ph.D.", Martin Luther King Jr. Community Service Awards, Rollins School of Public Health, பார்க்கப்பட்ட நாள் 2020-06-19
  7. Lifetime Achievement Award, National Association of Mathematicians, archived from the original on 2020-06-04, பார்க்கப்பட்ட நாள் 2020-06-19
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகம்பாள்_ஷா&oldid=3699312" இலிருந்து மீள்விக்கப்பட்டது