நாகப்பட்டினம் மெய்கண்டமூர்த்தி சுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாகப்பட்டினம் மெய்கண்டமூர்த்தி சுவாமி கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரிலுள்ள முருகன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

நாகப்பட்டினத்திலுள்ள நீலாயதாட்சி தெற்கு வீதியில் நாகப்பட்டினம் காயாரோகணர் நீலாயதாட்சி அம்மன் கோயிலின் தென் பகுதியில் இக்கோயில் உள்ளது. குமரக்கோயில் என்றும் இக்கோயிலை அழைக்கின்றனர். [1]

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள மூலவர் சட்டைநாதர். பைரவர் மிக உக்கிரமாகக் காணப்பட்டதால் அவருக்கு இடப்புறமாக அமுதவல்லி அம்மன் சன்னதி அமைக்கப்பட்டு, பைரவர் சாந்த மூர்த்தியானதாகக் கூறுகின்றனர். [1]

வரலாறு[தொகு]

நாகப்பட்டினத்திருந்த 12 சிவன் கோயில்களில் உப்பனாற்றக்ரையில் இருந்த கோயிலான கார்முகீசுவரர் கோயில் காலவெள்ளத்தில் சிதிலமடைந்தது. பின்னர் அக்கோயில் பூமிக்குள் புதையுண்டுபோனது. அக்கோயிலில் முருகன் சன்னதி ஒன்று இருந்தது. புதையுண்ட அந்த சூழலில் இக்கோயிலில் இருந்த முருகன், அவருடைய பக்தரான புதுவை துபாஷி ஆனந்தரங்கம்பிள்ளையின் கனவில் தோன்றியதாகவும், தான் மறைந்திருந்த இடத்தை அவருக்கு உணரவைத்ததாகவும், தனக்காக கோயில் அமைக்கக் கூறியதாகவும் கூறுவர். ஆனந்தரங்கம்பிள்ளையின் நாட்குறிப்பில் இச்செய்தி உள்ளதாகச் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. [1]

அமைப்பு[தொகு]

மூலவர் சன்னதியில் மெய்கண்டமூர்த்தி சுவாமி எனப்படுகின்ற முருகன் உள்ளார். இந்திரன் முருகனுக்கு தன்னுடைய ஐராவதம் என்கின்ற யானையைப் பரிசாகத் தந்ததை நினைவூட்டும் வகையில் முருகன் எதிரில் மயிலுக்குப் பதிலாக யானையைக் காணமுடியும். இந்திரனை அமைத்த குபேரன் இங்கு உள்ளார். துர்க்கையம்மன் சன்னதி தெற்கு நோக்கிய நிலையில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014