நாகப்பட்டினம் அகத்தீசுவரசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாகப்பட்டினம் அகத்தீசுவரசுவாமி கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் நாகப்பட்டினம் நகரில் வெளிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி[தொகு]

அகத்தியர் வழிபட்ட இக்கோயிலில் அவர் உருவாக்கிய குளத்தின் முன்பாக அகத்தியர் சன்னதி உள்ளது. அகத்தியர் வழிபட்டதற்குச் சான்றாக இச்சன்னதி அமைந்துள்ளதாகக் கூறுவர். இங்குள்ள இறைவி ஆனந்தவல்லி ஆவார். அகத்தியரால் ஆணையிடப்பட்ட குபேரன் இக்கோயிலில் வந்து வழிபட்டதாகக் கூறுவர்.[1]

அமைப்பு[தொகு]

மூன்று நிலை ராஜகோபுரத்தையும், திருச்சுற்றையும் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயிலில் ஜுரகேஸ்வர, செல்வகணபதி உள்ளிட்ட சன்னதிகள் காணப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014