நாகபூசணம் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நாகபூசணம்
Nagabhushanam actor.jpg
கல்யாண மண்டபம் என்ற படத்தில் நாகபூசணம் (1971)
பிறப்பு1922
இறப்பு5 மே 1995[1]
பணிநடிகர்
பிள்ளைகள்சுண்டி இராகவ ராவ்

நாகபூசணம் (Nagabhushanam ) (1922 - 5 மே 1995) தெலுங்குத் திரையுலகின் நகைச்சுவை நடிகரும், குணச்சித்திர நடிகருமாவார். [2] தத்தினேனி பிரகாஷ் ராவ் இயக்கிய பலேதூரு (1951) இவரது முதல் படமாகும்.. 1950களிலிருந்து 1980கள் வரை சுமார் 395 படங்களில் நடித்திருந்தார்.

1954ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமான ரத்தக்கண்ணீர் படத்தின் தெலுங்கு பதிப்பான ரத்த கண்ணீருவில் ரத்தகண்ணீரு நாகபூசணம் என்ற வேடத்தில் நடித்து பிரபலமானார். இவர் இப்படத்தை தயாரித்தும் இருந்தார். வேமவரபு கவுதம் குமாருடன் இணைந்து நடித்திருந்தார். இவர், 2,000 க்கும் மேற்பட்ட நாடக நிகழ்ச்சிகளை வழங்கினார். வேமவரபு கவுதம் குமாருடன் ஐதராபாத்தில் 100க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளை வழங்கினார்.

சுந்தரம் பாலச்சந்தர் இயக்கிய எதி நிஜம் (1956) திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இது தமிழுக்கும் மொழிமாற்றம் செய்யப்பட்டது.[3][4] இத்தாலியத் திரைப்படமான புசிட்டர் என்ற படத்தின் கதையைத் தழுவி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இப்படத்தை, கண்டசாலா கிருட்டிணமூர்த்தி தயாரித்திருந்தார். [5]

இவர், நாடகலா ராயுடு, ஓகே குடும்பம் உள்ளிட்ட ஒரு சில படங்களைத் தயாரித்தார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

நாகபூசணம் ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம், கோண்டபி மண்டலம், அனகர்லாபுடி கிராமத்தில் பிறந்தார். இவருக்கு மூன்று மகன்களும், இரண்டு மகள்களும் என ஐந்து குழந்தைகள் இருக்கின்றர். இவர்கள் யாரும் திரைத்துறையில் இல்லை

இறப்பு[தொகு]

நாகபூசணம் 5 மே 1995 இல் இறந்தார். .

மேற்கோள்கள்[தொகு]

  1. "Important people of Nellore- Nagabhushanam". மூல முகவரியிலிருந்து 11 April 2013 அன்று பரணிடப்பட்டது.
  2. "Nagabhushanam biography at Early Tollywood.com". மூல முகவரியிலிருந்து 2 January 2013 அன்று பரணிடப்பட்டது.
  3. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://www.lakshmansruthi.com/cineprofiles/1956.asp. 
  4. Edi Nijam in Naati 101 Chitralu, S. V. Rama Rao, Kinnera Publications, Hyderabad, 2006; pp: 134-5.
  5. Edi Nijam in Naati 101 Chitralu, S. V. Rama Rao, Kinnera Publications, Hyderabad, 2006; pp: 134-5.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகபூசணம்_(நடிகர்)&oldid=3104903" இருந்து மீள்விக்கப்பட்டது