நாகபுரி மொழி
நாகபுரி | |
---|---|
சத்திரி | |
சதானி | |
![]() தேவநாகரி எழுத்து முறையில் எழுதப்பட்ட நாகபுரி எனும் சொல் | |
நாடு(கள்) | இந்தியா |
பிராந்தியம் | சோட்ட நாக்பூர் மேட்டு நிலப்பகுதிகள் (ஜார்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா) |
இனம் | நாகபுரியா மக்கள்[1] |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | தாய் மொழியாக 5.1 மில்லியன் (2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பு)[2][3][4] (date missing) இரண்டாம் மொழியாக 7 மில்லியன் (2007) |
இந்திய-ஐரோப்பிய மொழி
| |
தேவநாகரி கைதி | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | ![]()
|
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | Either: sck — சத்திரி sdr — ஓரோன் சத்திரி |
மொழிக் குறிப்பு | sada1242[5] |
![]() இந்தியாவில் நாகபுரி மொழி பேசும் நிலப்பகுதிகள் |
நாகபுரி மொழி அல்லது சத்திரி மொழி (Nagpuri (also known as Sadri), இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த இம்மொழியை சோட்ட நாக்பூர் மேட்டுப் நிலப்பகுதியில் அமைந்த ஜார்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவின் மேற்குப் பகுதிகளில் பேசப்படுகிறது.[6] இம்மொழி சோட்ட நாக்பூர் மேட்டுப் நிலப்பகுதிகளில் வாழும் நாகபுரி மக்களின் தாய் மொழி ஆகும். நாகபுரி மொழியின் எழுத்து முறைக்கு தேவநாகரியைப் பயன்படுத்துகின்றனர்.
மேலும் சோட்டா நாக்பூர் மேட்டுநிலப் பகுதிகளில் வாழும் திராவிட மொழிக் குடும்ப மொழிகளைப் பேசும் பல இனக் குழுவினர்கள், குறிப்பாக முண்டா மக்கள், காரியா மக்கள்[7] குரூக் மக்கள்[8]மற்றும் ஆசுத்ரோ-ஆசிய மொழிகள் பேசும் மக்கள், இந்தோ-ஆரிய மொழி குடும்பத்தவர்களுடன் தொடர்பு மொழியாக நாகபுரி மொழியைப் பேசுகின்றனர். சோட்டா நாக்பூர் மேட்டுநிலப் பகுதிகளில் வாழும் திராவிட மொழிகள் பேசும் சில பழங்குடி மக்கள் நாகபுரி மொழியை தாய் மொழியாகவும் பேசுகின்றனர்.[9]மேலும் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது, அசாம் மாநிலத்தில் குடியேறி, தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் மேற்கு வங்காளம் மற்றும் வங்காள தேசத்தவர்களில் சில சமூகத்தினர்[10]தொடர்பு மொழியாக நாகபுரி மொழியைப் பேசுகின்றனர்.[11] 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாகபுரி மொழியை தாய் மொழியாகப் பேசும் மக்கள் தொகை 5.1 மில்லியன் எனக்கணக்கிடப்பட்டுள்ளது.மேலும் 7 மில்லியன் மக்கள் நாகபுரி மொழியை தொடர்பு மொழியாக பேசுகின்றனர் என 2007ஆம் ஆண்டின் ஆய்வில் தெரியவந்துள்ளது.[3]
சொற்பிறப்பியல்
[தொகு]இலக்கிய மரபில் இம்மொழியை நாகபுரி, நாகபுரியா, சதானி மற்றும் சத்திரி என்றும் அழைக்கின்றனர்.செம்மைப்படுத்தப்பட்ட நாகபுரி மொழியை இலக்கியங்களில் பயிலப்படுகிறது. மேலும் நகரங்களில் வாழும் பெரும்பாலான இந்து சமய இனக்குழுவினர்நாகபுரி மொழியைப் பேசுகின்றனர். நாட்டுப்புறங்களில் வாழும் பழங்குடி மக்கள் நாகபுரி மொழியின் இலக்கியமற்ற வடிவமாகவும் மற்றும் பேச்சு மொழியாகவும் சத்திரி மொழி பேசுகின்றனர்.[12][13]
சோட்டா நாக்பூரின் நாகவன்ஷிகள், சோட்ட நாக்பூர் மேட்டுப் நிலத்தை ஆண்டனர். பின்னர் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது, மகாராட்டிராவில் உள்ள நாக்பூரை, சோட்டா நாகபுரி மொழியிலிருந்து வேறுபடுத்தி அறிவதற்கு சோட்டா நாக்பூர் கோட்டம் நிறுவப்பட்டது.[14]அதே போன்று சோட்டா நாகபுரி பகுதிகளில் வாழும் சதான் மக்கள் பேசும் மொழியை சதானி மொழி என்று அழைத்தனர். மேலும் சோட்டா நாகபுரி மேட்டு நிலப்பகுதிகளில் பேசப்படும் குருமாலி மொழி மற்றும் கோர்த்தா மொழிகளும், நாகபுரி மொழி போன்று இந்தோ-ஆரிய மொழிகள் ஆகும். [9] பிரித்தானியா இந்தியாவின் ஆட்சியின் போது, 1906ஆம் ஆண்டில் நாகபுரி மொழிக்கு இலக்கணம் எழுதப்பட்டது. சார்க்கண்டு மாநிலத்தின் அலுவல் மொழியாக நாகபுரி மொழி அறிவிக்கப்பட்டது.[13][15][16]அண்மைய ஆய்வுகளின்படி, சோட்டா நாகபுரி மேட்டு நிலப்பகுதிகளில் பேசப்படும் இந்தோ-ஆரிய மொழிகளான நாகபுரி மொழி, கோர்த்தா மொழி, பஞ்ச்பர்கனியா மொழி, குருமாலி மொழிகள் தனித்துவமாக இருப்பினும், அவைகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருப்பதால் இம்மொழிகளை சதானி மொழி என்று அழைக்கப்படுகிறது.[12]
புவியியல் பரம்பல்
[தொகு]இந்திய மாநிலங்களில் நாகபுரி மொழி பேசுபவர்களின் வாழிடங்கள் (2011 கணக்கெடுப்பு)[17]
நாகபுரி மொழி சோட்ட நாக்பூர் மேட்டு நிலங்களின் மேற்குப் பகுதிகளில் குறிப்பாக சார்க்கண்டு, சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா மாநிலத்தின் மேற்கு பகுதிகளில் அதிகம் பேசப்படுகிறது.
மாநிலம் | சார்க்கண்டு | சத்தீஸ்கர் | ஒடிசா |
---|---|---|---|
மாவட்டங்கள் | ராஞ்சி | ஜஸ்பூர் | சுந்தர்கர் |
கும்லா | பலராம்பூர் | ||
லோகர்தக்கா | சுர்குஜா | ||
லாத்தேகார் | |||
சிம்தேகா | |||
குந்தி | |||
ஹசாரிபாக் | |||
காட்வா | |||
மேற்கு சிங்பூம் |
மேலும் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது அசாம் தேயிலைத் தோட்டங்களில் வேலைக்கு சென்ற, மேற்கு வங்கத்தினர், வங்காளதேசத்தினர் மற்றும் நேபாள சமூகத்தவர்கள் நாகபுரி மொழியை தொடர்பு மொழியாக பேசுகின்றனர்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nagpuria people
- ↑ "Statement 1: Abstract of speakers' strength of languages and mother tongues – 2011". www.censusindia.gov.in. Office of the Registrar General & Census Commissioner, India. Archived from the original on 21 July 2018. Retrieved 7 July 2018.
- ↑ 3.0 3.1 "Sadri". Ethnologue. Retrieved 21 July 2022.
- ↑ 4.0 4.1 "Sadri - the Language of Jharkhand". Archived from the original on 27 November 2016. Retrieved 26 November 2016.
- ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "[[சாதன் மக்கள்|சாதனி]]". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
{{cite book}}
: URL–wikilink conflict (help) - ↑ Sadani / Sadri
- ↑ {https://en.wikipedia.org/wiki/Kharia_people Kharia people]
- ↑ Kurukh people
- ↑ 9.0 9.1 பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;auto
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Tea-garden community
- ↑ Diksha Verma (2022). "THE SYLLABLE STRUCTURE IN NAGPURI (SADRI)" (PDF). Veda Publications. p. 2. Retrieved 4 November 2022.
- ↑ 12.0 12.1 Paudyal, Netra P.; Peterson, John (1 September 2020). "How one language became four: the impact of different contact-scenarios between "Sadani" and the tribal languages of Jharkhand" (in en). Journal of South Asian Languages and Linguistics 7 (2): 275–306. doi:10.1515/jsall-2021-2028. பன்னாட்டுத் தர தொடர் எண்:2196-078X.
- ↑ 13.0 13.1 "नागपुरी भाषा को दो अलग कोड देने पर नाराजगी". liveHindustan. 11 July 2021. https://www.livehindustan.com/jharkhand/ranchi/story-displeasure-over-giving-two-separate-codes-to-nagpuri-language-4211377.html.
- ↑ Sir John Houlton, Bihar, the Heart of India, pp. 127–128, Orient Longmans, 1949.
- ↑ "भाषाई जनगणना में नागपुरी को बांटने की साजिश का विरोध". Hindustan. 29 August 2021. https://www.livehindustan.com/jharkhand/ranchi/story-opposition-to-conspiracy-to-divide-nagpuri-in-linguistic-census-4467320.amp.html.
- ↑ "झारखंड में नागपुरी के साथ जुल्म हो रहा है : मधु मंसुरी". Dainik Jagran. 15 May 2022. https://www.jagran.com/jharkhand/gumla-d-22715444.html.
- ↑ "C-16: Population by mother tongue, India - 2011". Office of the Registrar General & Census Commissioner, India. Retrieved 20 March 2024.
உசாத்துணை
[தொகு]- Srivastava, S.P.; Pattanaik, Ranjita (2021). "Nagpuria". Linguistic Survey of India – Jharkhand (PDF). Language division, Office of the Registrar General, India. pp. 432–565.
- Ghosh, Tapati; Pattanaik, Ranjita (2021). "Sadan/Sadri". Linguistic Survey of India – Jharkhand (PDF). Language division, Office of the Registrar General, India. pp. 645–691.
அகராதி
[தொகு]- Blain, Edgar (1975). English-Sadri Dictionary. Jharsuguda, Orissa: The Society of the Divine Word. கணினி நூலகம் 17730482.
- Oram, Sushant; Oram, Mangaraj; Kispatta, Fakir; Minj, Saroj Kumar (2018). Odia-Sadri Sabdakosh (PDF) (in ஒடியா). Special Development Council, Sundargarh, Planning & Convergence Department, Govt. of Odisha. Archived (PDF) from the original on 15 August 2022.