நாகநாதன் பாண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகநாதன் பாண்டி
தனித் தகவல்கள்
முழுப் பெயர்நாகநாதன் பாண்டி
தேசியம்இந்தியர்
பிறந்த நாள்(1996-04-23)23 ஏப்ரல் 1996
பிறந்த இடம்சிங்கம்புலியாபட்டி, கமுதி, இராமநாதபுரம், தமிழ்நாடு இந்தியா
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகளம்
அணிஇந்தியா

நாகநாதன் பாண்டி (Naganathan Pandi, பிறப்பு: ஏப்ரல் 23, 1996) என்பவர் இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள சிங்கம்புலியாபட்டி கிராமத்தைச் சேர்ந்த தடகள விளையாட்டு வீரர்.[1] இவர் சப்பான் தலைநகர் டோக்கியோவில் 2021 சூலை 23 முதல் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் கலப்பு இரட்டையர் 4x400 மீட்டர் தொடர் ஓட்டயப்பந்தயத்தில் கலந்து கொள்ளத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.[2]திருச்சியைச் சேர்ந்த ஆரோக்கியராசு, கேரளாவைச் சேர்ந்த முகமது அனாசு, தில்லியைச் சேர்ந்த அமோசு யாக்கப் ஆகியோர் ஓரணியாக இவருடன் கலந்து கொள்ளத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.[3]

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள சிங்கம்புலியாபட்டி கிராமத்தைச் சேர்ந்த பாண்டி என்பவரின் மகனாவார். இவர் தமிழக காவல் துறையில் காவலராக பணிபுரிகிறார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகநாதன்_பாண்டி&oldid=3588596" இருந்து மீள்விக்கப்பட்டது