உள்ளடக்கத்துக்குச் செல்

நஸ்ரின் மொகமதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நஸ்ரின் மொகமதி
பிறப்பு1937 (1937)
கராச்சி, பிரித்தானிய இந்தியா (தற்போது பாக்கித்தான்)
இறப்பு1990 (அகவை 52–53)
கிகிம், இந்தியா
தேசியம் இந்தியா
கல்விசெயின்ட் மார்ட்டின் கலைப்பள்ளி இலண்டன், இங்கிலாந்து
அறியப்படுவதுஓவியம், புகைப்படம் எடுத்தல், படத்தொகுப்பு
அரசியல் இயக்கம்சுருக்க வெளிப்பாட்டுவாதம்

நஸ்ரின் மொகமதி (Nasreen Mohamedi:1937–1990) ஓர் இந்தியக் கலைஞர் ஆவார். இவர் தனது கோட்டோவியம் அடிப்படையிலான ஓவியங்களுக்காக நன்கு அறியப்பட்டவர்.[1] இன்று இந்தியாவைச் சேர்ந்த மிக முக்கியமான நவீன கலைஞர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இவரது வாழ்நாளில் இந்தியாவிற்கு வெளியே ஒப்பீட்டளவில் அறியப்படாத போதிலும், மொகமதியின் படைப்புகள் சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க அளவில் கவனத்தைப் பெற்றது. மேலும் கடந்த தசாப்தத்தில் பாராட்டையும் பெற்றுள்ளன.

இவரது படைப்புகள் நியூயார்க்கில் உள்ள நியூயார்க் நவீனக்கலை அருங்காட்சியகம்,[2][3][4] புது தில்லியில் உள்ள கிரண் நாடார் கலை அருங்காட்சியகம்,[5] ஜெர்மனியின் காசலில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சமகால கலை கண்காட்சி மற்றும் தல்வார் கலைக்கூடம் ஆகியவற்றில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது 2003 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வெளியே அவரது படைப்புகளின் முதல் தனி கண்காட்சியை ஏற்பாடு செய்தது.

வாழ்க்கை மற்றும் தொழில்

[தொகு]

1937 ஆம் ஆண்டில் இந்தியாவின் கராச்சியில் [6] ஒரு செல்வ செழிப்பானக் குடும்பத்தில் பிறந்தார்.[7] இவர் இசுலாமிய சுலைமானி போக்ராப் பிரிவைச் சேர்ந்த பத்ருதீன் தியாப்ஜியின் குடும்பத்தில் எட்டு குழந்தைகளில் ஒருவராக இருந்தார்.[8] இவரது இளம் வயதிலேயே இவரது தாயார் இறந்துவிட்டார். இவரின் தந்தை பகுரைனில் மற்ற வணிக முயற்சிகளுடன் ஒரு புகைப்பட உபகரணக் கடையை வைத்திருந்தார். பின்னர், இவரது குடும்பம் 1944 இல் மும்பைக்கு குடிபெயர்ந்தது. பின்னர் மொகமதி 1954 முதல் 1957 வரை இலண்டனில் உள்ள செயின்ட் மார்ட்டின் கலைப்பள்ளியில் பயின்றார்.[9] பகுரைனில் தனது குடும்பத்துடன் சிறிது காலம் வாழ்ந்த பிறகு, மொகமதி 1961 முதல் 1963 வரை பாரிசில் ஒரு உதவித்தொகையில் படித்தார். அங்கு இவர் ஒரு அச்சுத் தயாரிப்பு விடுதியிலும் பணியாற்றினார். இந்தியா திரும்பியதும், மும்பையில் உள்ள பூலாபாய் தேசாய் கலை நிறுவனத்தில் சேர்ந்தார்.[10] இங்கு அவர் வி. எஸ். கெய்டோண்டே, எம். எஃப். ஹுசைன் மற்றும் தயிப் மேத்தா உள்ளிட்ட அந்த நேரத்தில் பணியாற்றிய பிற கலைஞர்களை சந்தித்தார். பூலாபாய் தேசாய் நிறுவனத்தில் சேர்ந்த சிறிது காலத்திற்குப் பிறகு, இவரது முதல் தனி கண்காட்சி நடத்தப்பட்டது. மும்பையில் இவர் சுருக்க கலைப் படைப்புகளை உருவாக்கும் கலைஞர் ஜெராம் படேலை சந்தித்தார். பின்னர், அவர் இவரது நண்பராகவும் சக ஊழியராகவும் ஆனார். அதே நேரத்தில் பத்மசிறீ (1971) விருது பெற்ற கலைஞர்[11][12] கெய்டோண்டே இவரது வழிகாட்டியாக பணியாற்றினார்.[13][14][15]

இவரது படைப்புகள் நியூயார்க்கில் உள்ள நவீனக்கலை அருங்காட்சியகம், புது தில்லியில் உள்ள கிரண் நாடார் கலை அருங்காட்சியகம், ஜெர்மனியின் காசலில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சமகால கலை கண்காட்சி மற்றும் தல்வார் அருங்காட்சியகம் ஆகியவற்றில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Nasreen Mohamedi | The Metropolitan Museum of Art". www.metmuseum.org. Retrieved 2018-03-03.
  2. "Nasreen Mohamedi". The Metropolitan Museum of Art. Retrieved 2023-06-28.
  3. "Nasreen Mohamedi". Museum of Modern Art. Retrieved 2023-04-22.
  4. "Nasreen Mohamedi". Art Institute of Chicago. Retrieved 2023-06-28.
  5. "Nasreen Mohamedi". Kiran Nadar Museum of Art. Retrieved 2023-06-28.
  6. "Nasreen Mohamedi". AWARE Women artists / Femmes artistes. Retrieved 22 April 2023.
  7. Jonathan Griffin, "Nasreen Mohamedi," frieze 127, November–December 2009.
  8. "Of Calligraphic Lines and Radiant Light: Nasreen Mohamedi and Islamic Aesthetics". The Metropolitan Museum of Art. Retrieved 5 May 2023.
  9. Anders Kreuger, "Making the Maximum Out of the Minimum," Afterall, Summer 2009.
  10. Tsjeng, Zing (2018). Forgotten Women, The Artists. Great Britain: An Hachette UK Company. pp. 26. ISBN 978-1-78840-063-3.
  11. "Gaitonde's painting worth 20 crore on display". The Times of India. 24 January 2014. Archived from the original on 2 February 2014. Retrieved 25 January 2014.
  12. Moole, Janhavee (2 November 2024). "Vasudeo Gaitonde: The rebel painter who ushered in a new era of Indian art". பிபிசி (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2 November 2024.
  13. Susette Min, "Fugitive Time: Nasreen Mohamedi's Drawings and Photographs,” Lines among Lines, Drawing Papers 52, New York: The Drawing Center, 2005.
  14. Klauss Kertess, "A Detached Joy: The Drawings of Nasreen Mohamedi," Art on Paper 13.5, May/June 2009.
  15. "Nasreen Mohamedi - Artists - Talwar Gallery". www.talwargallery.com. Retrieved 5 May 2023.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நஸ்ரின்_மொகமதி&oldid=4445404" இலிருந்து மீள்விக்கப்பட்டது