நவ்யுக் விரைவு தொடருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவ்யுக் விரைவு தொடருந்து
கண்ணோட்டம்
வகைஅதிவிரைவு
நிகழ்நிலைஇயக்கத்தில் உள்ளது
நிகழ்வு இயலிடம்ஜம்மு மற்றும் காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்திரப்பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, புதுச்சேரி (மாகி), தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா
முதல் சேவை31 ஆகத்து 2015; 8 ஆண்டுகள் முன்னர் (2015-08-31)[1](extended to Shri Mata Vaishno Devi Katra)
நடத்துனர்(கள்)இந்திய ரயில்வே
வழி
தொடக்கம்கட்ரா (SVDK)
இடைநிறுத்தங்கள்61
முடிவுமங்களூரு சென்ட்ரல் (MAQ) & திருநெல்வேலி சந்திப்பு '"(TEN)'"
ஓடும் தூரம்3,685 km (2,290 mi)
சராசரி பயண நேரம்68 மணி 20 நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுவாரமொருமுறை
தொடருந்தின் இலக்கம்16687/16688
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)ஈரடுக்கு மற்றும் மூன்று அடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், சரக்கு பெட்டிகள், சமையலறை பெட்டி
இருக்கை வசதிவசதி உண்டு
படுக்கை வசதிவசதி உண்டு
உணவு வசதிகள்வசதி உண்டு
சுமைதாங்கி வசதிகள்வசதி உண்டு
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புLoco: WAP-4
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
மின்சாரமயமாக்கல்Yes
வேகம்50.4 km/h (31.3 mph)

காஷ்மீர் மாநிலத்தின்ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கட்ரா தொடருந்து நிலையம் முதல் மங்களூரு சென்ட்ரல் நிலையம், திருநெல்வேலி சந்திப்பு நிலையம் வரை இந்திய ரயில்வே துறையினரால் இயக்கப்படும் தொடருந்து நவ்யுக் அதிவிரைவு தொடருந்து ஆகும். இது இந்திய ரயில்வே துறையினரால் இயக்கப்படும் ஐந்தாவது மிக நீண்ட தொலைவு செல்லும் தொடருந்தாகும். இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் வழியாக பயணிக்கும் இந்த தொடருந்து, கிட்டத்தட்ட மூவாயிரத்து 3685 கிலோ மீட்டர்களை 68 மணி நேரங்கள் பயணித்து இறுதி நிலையத்தை அடைகிறது.

பெயர்க்காரணம்[தொகு]

இந்தியாவின் இரு முனைகளையும் இணைக்கும் வகையில் காஷ்மீர் மாநிலம் முதல் தமிழகத்தின் திருநெல்வேலி வரை இயக்கப்படுவதால் இந்த தொடருந்து "புதிய சகாப்தம்" என்று பொருள்படும் வகையில் நவ்யுக் அதிவிரைவு தொடருந்து என பெயரிடப்பட்டது.

நிறுத்தங்களும் வழித்தடமும்[தொகு]

கேரள மாநிலத்தின் கண்ணூர், கோழிக்கோடு, ஷொறணூர் சந்திப்பு, பாலக்காடு சந்திப்பு, தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூர் சந்திப்பு, திருப்பூர், காட்பாடி , தெலுங்கானா மாநிலத்தின் திருப்பதி, கூடூர், நெல்லூர், விஜயவாடா, வரங்கல், ராமகுண்டம், நாக்பூர் இட்டர்சி சந்திப்பு, உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் போபால் சந்திப்பு, ஜான்சி சந்திப்பு, பஞ்சாப் மாநிலத்தின் குவாலியர், ஆக்ரா, புது டெல்லி என இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களின் வழியாக பயணித்து காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கட்ரா தொடருந்து நிலையத்தை அடைகிறது. இந்தியாவின் ஜம்மு மற்றும் காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தரப் பிரதேசம், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களின் வழியாக இயக்கப்படும் இந்த விரைவு தொடருந்து திருநெல்வேலி சந்திப்பு நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு ஈரோடு சந்திப்பு நிலையத்தில் மேலும் பல பயண பெட்டிகள் இணைக்கப்பட்டு இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது.

இழுவை இயந்திரங்கள்[தொகு]

கட்ரா நிலையம் முதல் புதுடெல்லி வரை துக்ளகாபாத் நிலையத்தால் பராமரிக்கப்படும் WDP-4D என்ற இழுவை எந்திரத்தின் மூலம் இயக்கப்படுகிறது. அதன்பின் 2016ம் ஆண்டு முதல் மின்சார மயமாக்கப்பட்ட இருப்புப் பாதை வசதி இருப்பதால் புதுடெல்லி முதல் மங்களூர் சென்ட்ரல் வரை ஈரோடு நிலையத்தால் பராமரிக்கப்படும் Erode(ED) WAP-4 என்ற இழுவை இயந்திரத்தின் மூலம் இயக்கப்படுகிறது.[2] அங்கிருந்து திருச்சிராப்பள்ளி சந்திப்பு, நிலையம் மதுரை சந்திப்பு நிலையம் வழியாக திருநெல்வேலி சந்திப்பு வரை இயக்கப்படும் இந்த தொடருந்து ஈரோடு நிலையத்தால் பராமரிக்கப்படும் Erode WAP-4 என்ற இழுவை இயந்திரத்தின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த இருப்பு பாதையும் முழுவதும் மின் மயமாக்கப்பட்டது மயமாக்கப்பட்டது ஆகும்.[3]


அட்டவணை[தொகு]

வண்டி எண் நிலைய குறியீடு நிலையத்தின் பெயர் புறப்படும் நேரம் புறப்படும் நாள் சேரும் நிலையம் சேரும் நேரம் சேரும் நாள்
16687 MAQ மங்களூரு சென்ட்ரல் 5:05 PM திங்கள் கிழமை கட்ரா 3:40 PM வியாழக்கிழமை
16688 SVDK கட்ரா 9:55 PM வியாழக்கிழமை மங்களூரு சென்ட்ரல் 11:00 PM ஞாயிற்றுக்கிழமை
16688 இணைப்பு SVDK கட்ரா 9:55 PM வியாழக்கிழமை திருநெல்வேலி 12:55 AM திங்கள் கிழமை

வண்டி எண் 16688[தொகு]

'நவ்யுக் விரைவு தொடருந்து வண்டியானது ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கட்ரா தொடருந்து நிலையத்தில் இருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலை 09.55 மணிக்கு இயக்கப்பட்டு உதம்பூர், ஜம்முதாவி, பதான்கோட், ஜலந்தர் கண்டோன்மென்ட் சந்திப்பு, லூதியானா, புதுடெல்லி, ஹஸ்ரத் நிஜாமுதீன், ஆக்ரா கண்டோன்மென்ட், குவாலியர் சந்திப்பு, ஜான்சி சந்திப்பு, போபால் சந்திப்பு, இட்டர்சி சந்திப்பு, நாக்பூர் சந்திப்பு, பல்கர்ஷா சந்திப்பு, வாராங்கல் சந்திப்பு, விஜயவாடா சந்திப்பு, ஓங்கோல், நெல்லூர், ரேணிகுண்டா சந்திப்பு, திருப்பதி, சித்தூர், காட்பாடி, சேலம், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் சந்திப்பு, பாலக்காடு, கோழிக்கோடு சந்திப்பு, தலச்சேரி சந்திப்பு, கண்ணூர், காசர்கோடு என 66 நிறுத்தங்களை கடக்க மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 74 மணி 5 நிமிடங்கள் பயணித்து மங்களூரூ சென்ட்ரல் நிலையத்தை மூன்றாம் நாள் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.00 மணிக்கு சென்றடைகிறது. இதன் மொத்த பயண தூரம் 3686 கிலோ மீட்டர் ஆகும். இந்த தொடருந்து தனது பயணத்தில் சில நிலையங்களுக்கு இடையிலான வழித்தடத்தில் அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. இந்த தொடருந்திற்கு 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி இந்திய ரெயில்வேயினால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டியானது அகல இரயில் பாதைகளில் இயக்கப்படக்கூடியதாகும்.[4]

மங்களூர் சென்ட்ரல் நிலையத்திலிருந்து நிலையத்திலிருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு ஈரோடு நிலையத்தில் பெட்டிகள் இணைக்கப்பட்டு கரூர் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, திண்டுக்கல், மதுரை சந்திப்பு, விருதுநகர், கோவில்பட்டி வழியாக திருநெல்வேலி சந்திப்பு நிலையத்தை அடுத்த நாள் திங்கள் கிழமை கிழமை திங்கள் கிழமை கிழமை அதிகாலை 00.55 மணிக்கு வந்தடைகிறது. [5]

வண்டி எண் 16687[தொகு]

மறுமார்க்கமாக 16687 என்ற எண்ணைக் கொண்ட இந்த தொடருந்து வண்டியானது மங்களூரூ சென்ட்ரல் நிலையத்திலிருந்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலை 05.05 மணிக்கு இயக்கப்பட்டு 61 நிறுத்தங்களையும் கடக்க மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 70 மணி 5 நிமிடங்களில் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கட்ரா தொடருந்து நிலையத்தை மூன்றாம் நாள் (வியாழக்கிழமை) மாலை 03.10 மணிக்கு சென்றடைகிறது. இதன் மொத்த பயண தூரம் 3686 கிலோ மீட்டர் ஆகும். அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோமீட்டர் வரை இதன் பயணத்தின் போது இயக்கப்படுகிறது. இந்த தொடருந்திற்கு 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி தென்னிந்திய ரெயில்வேயினால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டியானது அகல இரயில் பாதைகளில் இயக்கப்படக்கூடியதாகும்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of the trains announced in the Railway Budget 2014-15 which would serve the State of Jammu & Kashmir and status of implementation". இந்திய அரசு. Press Information Bureau. 4 September 2015.
  2. https://indiarailinfo.com/train/timetable/navyug-express-16688/1171/81/664
  3. https://indiarailinfo.com/train/navyug-express-slip-16688-slip/6839
  4. https://indiarailinfo.com/train/-train-navyug-express-16688/1171/10091/1470. {{cite web}}: Missing or empty |title= (help)
  5. https://m.etrain.info/in-SCH?TRAIN=16688. {{cite web}}: Missing or empty |title= (help)
  6. https://indiarailinfo.com/train/-train-navyug-express-16687/1170/1470/10091. {{cite web}}: Missing or empty |title= (help)