உள்ளடக்கத்துக்குச் செல்

நவீல்ட் பாடசாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நவீல்ட் செவிப்புலன் விழிப்புலன் இழந்தோர் பாடசாலை (Naffield school for the deaf and blind) இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் கைதடி என்னும் கிராமத்தில் இயங்கிவரும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு பாடசாலையாகும். இலங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளுள் இது முதன்மையானது ஆகும். அரசு ஆதரவு பெற்ற தனியார் பாடசாலையான இது 1956ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.[1]

கல்வி

[தொகு]

இங்கு இருவகையாகக் கல்வி பயிற்றப்படுகிறது. முற்றிலும் வாய்பேசாத, காதுகேளாதவர்களுக்காக சைகை மொழியில் இங்கு கல்வி போதிக்கப்படுகிறது. மேலும் பிரெயில் எழுத்து முறையில் கண் தெரியாதவர்களுக்கு கல்வி போதிக்கப்படுகிறது.

மேற்கோள்

[தொகு]
  1. பூத்திடும் பனந்தோப்பு நூல், சிவகாமி பதிப்பகம்

வெளியிணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவீல்ட்_பாடசாலை&oldid=3218102" இலிருந்து மீள்விக்கப்பட்டது