நவீன இலிகுரிய மொழி
இலிகுரியம் | |
---|---|
Lìgure, Zeneize | |
நாடு(கள்) | இத்தாலி (இலிகுரியா, பியத்மாந்து, தசுக்கனி, லோம்பார்டி, எமிலியா-ரோமாஞா, சார்தீனியா) பிரான்சு (ஆல்ப்சு கடல்சார் பகுதி மற்றும் கோர்சிகா) மொனாகோ அர்கெந்தீனா (புவெனசு ஐரிசில் லா போக்கா பகுதி). |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 1,925,100[1] (date missing) |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | இத்தாலியிலும் (சட்டம் 482/1999) மொனாக்கோவிலும் அரச ஏற்புப் பெற்றது. |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | roa |
ISO 639-3 | lij |
நவீன இலிகுரிய மொழி ஒரு கால்லோ உரோமான்சு மொழி. இது வடக்கு இத்தாலியில் உள்ள இலிகுரியா, பிரான்சின் நடுநிலக்கடல் கரையோரத்தின் பகுதிகள், மொனாக்கோ, சார்டினியாவில் உள்ள ஊர்களான கார்லோபோர்ட்டே, காலாசேத்தா ஆகிய இடங்களில் பேசப்படுகிறது. இது மேற்கு உரோமான்சு கிளைமொழித் தொகுதியின் ஒரு பகுதியாகும். இலிகுரியாவின் தலைநகரமான செனோவாவில் பேசப்படுகின்ற செனோவியம் என்னும் கிளைமொழியே மிகவும் முக்கியமானது.
இலிகுரிய மொழி ஏறத்தாழ 500,000 மக்களால் பேசப்படுகிறது. பரவலாகப் பேசப்பட்டுவரும் இம்மொழியை செனோவாவிலும், இப்பகுதியில் உள்ள பல சிறிய நகரங்களிலும் ஊர்களிலும் பலர் பேசுகின்றனர். இம்மொழியைப் பாதுகாப்பதற்காகப் பல அமைப்புக்களும் இயங்கி வருகின்றன. இவற்றுட் சில இம்மொழியைக் கற்பதற்கான பாடநெறிகளையும் வழங்குகின்றன.
இதற்கும் பண்டைய இலிகுரிய மொழிக்கும் இடையில் தொடர்பு கிடையாது. இதற்கான மொழியியல் சான்றுகள் எதுவும் இல்லை. ஆனாலும், பண்டை லிகுரிய மொழியிலிருந்து சில இடப்பெயர்கள் பயன்பாட்டில் உள்ளன.
எழுத்துக்கள்
[தொகு]இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதுகின்றனர். இலிகுரிய எழுத்துக்களில் 7 உயிரெழுத்துக்களும், 18 மெய்யெழுத்துக்களும் அடங்குகின்றன.
- உயிரெழுத்துக்கள்: a, e, i, ò (IPA: [ɔ]), o [u], u [y], æ [ɛ], அத்துடன் eu [ø].
- மெய்யெழுத்துக்கள்: b, c, ç, d, f, g, h, l, m, n, p, q, r, s, t, v, x, z.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ethnologue (2009). "Ligurian". Ethnologue: Languages of the World (16th ed.). Ethnolouge.
{{cite web}}
: Text "Ligurian: a language of Italy" ignored (help)