நவீன் செல்வதுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
2011-ஆம் ஆண்டில் நவீன் செல்வதுரை

தமிழ்நாட்டில் பிறந்த நவீன் செல்வதுரை ஓர் இணையத்தள தொழிலதிபர் மற்றும் ஃபோர்சுகுவயர் எனும் இருப்பிடம் சார்ந்த சமூக பிணையதளத்தின் துணை நிறுவனர்.

தொழில்கள்[தொகு]

டென்னிஸ் க்ரோவ்லே என்பவருடன் ஃபோர்சுகுவயர் எனும் கைபேசி-சமூகப் பிணையத்தளத்தை உருவாக்குவதற்கு முன் நவீன் அவர்கள் சண் மைக்ரோசிஸ்டம்ஸ்,நோக்கியா,சோனி மற்றும் லூசென்ட் போன்ற நிறுவனங்களில் வேலை செய்தார். மேலும் அவர் வட அமெரிக்காவில் உள்ள வோர்செச்ட்டர் பல்கலைக்கழகத்திலும் , ஐக்கிய ராச்சியத்தில் உள்ள கிங்'ஸ் கல்லூரி லண்டனிலும் பட்டம் பெற்றவர். இவரது கூட்டு முயற்சிகளின் மதிப்பீட்டு அளவு அறுபது கோடி டாலர்கள் ஆகும்.எஒஎல் சிறிய வணிகங்கள் வெளியிட்ட 'உலகின் புதிய மற்றும் இளைய கோடீஸ்வரர்கள்' பட்டியலில் இவர் இடம்பெற்றுள்ளார்.

இவர் ஃபாக்ஸ் வணிக இணைப்பு தொலைக்காட்சி மற்றும் பரீத் சகரியா வழங்கிய சிஎன்என் சிறப்பு நிகழ்ச்சியான "அமெரிக்கனை முதல் இடத்திற்கு திரும்ப அழைத்து வருதல்" போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றி தான் இப்பொழுது உள்ள நிலைக்கு எவ்வாறு வந்தேன் என உரையாற்றினார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நவீன்_செல்வதுரை&oldid=2302778" இருந்து மீள்விக்கப்பட்டது