உள்ளடக்கத்துக்குச் செல்

நவி மும்பை பன்னாட்டு வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 18°59′31″N 073°03′42″E / 18.99194°N 73.06167°E / 18.99194; 73.06167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவி மும்பை பன்னாட்டு வானூர்தி நிலையம்
படிமம்:NMIAirport Logo.png
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்நகர்புறம் மற்றும் தொழில்கள் மேம்பாட்டு வாரியம் (CIDCO) (26%)
மும்பை பன்னாட்டு வானூர்தி நிலைய நிறுவனம் (MIAL) (74%)
இயக்குனர்நவி மும்பை பன்னாட்டு வானூர்தி நிலயம் நிறுவனம் (NMIAL)
சேவை புரிவதுமும்பை பெருநகரப் பகுதி
அமைவிடம்உல்வே, நவி மும்பை, பன்வேல் தாலுகா, ராய்கட் மாவட்டம், மகாராட்டிரம், இந்தியா
திறக்கப்பட்டது25 திசம்பர் 2025; 55 நாட்கள் முன்னர் (2025-12-25)
உயரம் AMSL26 அடி / 8 m
ஆள்கூறுகள்18°59′31″N 073°03′42″E / 18.99194°N 73.06167°E / 18.99194; 73.06167
இணையத்தளம்navimumbai.adaniairports.com
நிலப்படம்
NMI/VANM is located in Mumbai
NMI/VANM
NMI/VANM
மும்பை பெருநகரப் பகுதியில் நவி மும்பை வானூர்தி நிலையத்தின் அமைவிடம்
NMI/VANM is located in மகாராட்டிரம்
NMI/VANM
NMI/VANM
NMI/VANM (மகாராட்டிரம்)
NMI/VANM is located in இந்தியா
NMI/VANM
NMI/VANM
NMI/VANM (இந்தியா)
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
08/26 3,700 12,140 அசுபால்ட்டு கலந்த கூட்டுப் பொருள்
08R/26L 3,700 12,140 அசுபால்ட்டு

நவி மும்பை பன்னாட்டு வானூர்தி நிலையம் (Navi Mumbai International Airport) (நிலையக் குறியீடு|NMI/VANM), இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலம் ராய்கட் மாவட்டம், பன்வேல் தாலுகா, நவி மும்பையின் புறநகரான உல்வே பகுதியில் அமைந்துள்ளது. இது நவி மும்பைக்கு தெற்கே 9 கிலோமீட்டர் தொலைவிலும், மும்பை சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிற்கு கிழக்கே 35 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இதன் ஓடு தளம் 3700 மீட்டர் நீளம் கொண்டது. நவி மும்பை பன்னாட்டு வானுர்தி நிலையம் 25 டிசம்பர் 2025 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியால் மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.[4]நவி மும்பை பன்னாட்டு வானுர்தி நிலையத்தை அதானி குழுமத்தின் அதானி வானூர்தி நிலைய நிறுவனம் கையாள்கிறது.[5][6] மும்பை பெருநகரப் பகுதியில் அமைந்த இரண்டு பன்னாட்டு வானூர்தி நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். மற்றொன்று சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்த பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் பங்கு முதலீட்டில் மகாராட்டிரா நகர்புறம் மற்றும் தொழில்கள் மேம்பாட்டு வாரியம் (CIDCO) 26% மற்றும் மும்பை பன்னாட்டு வானூர்தி நிலைய நிறுவனம் (MIAL) 74% பங்கையும் கொண்டுள்ளது.

33,000 m2 (360,000 sq ft) பரப்பளவில் தாமரை வடிவில் அமைந்த இவ்வானூர்தி நிலையம் மூன்று முனையங்கள் கொண்டுள்ளது. இது ஆண்டிற்கு 20 மில்லியன் பயணிகளையும், 2.5 மில்லியன் டன் சரக்குகளையும் கையாளும் திறன் கொண்டுள்ளது.

போக்குவரத்து

[தொகு]

தேசிய நெடுஞ்சாலை 48ல் அமைந்த இவ்வானூர்தி நிலையம், மும்பை மெட்ரோ மற்றும் மும்பை புறநகர் ரயில்வே நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "AAI NOTAM LIST Series-G 01 October 2023" (PDF). Airports Authority of India. Retrieved 3 February 2025.
  2. "India ICAO location finder". Federal Aviation Administration. Retrieved 3 February 2025.
  3. Chowdhury, Anirban (19 February 2019). "Three in race to pick stake in GVK's airport holding company". The Economic Times. https://economictimes.indiatimes.com/industry/transportation/airlines-/-aviation/three-in-race-to-pick-stake-in-gvks-airport-holding-company/articleshow/68056419.cms. 
  4. Navi Mumbai Airport opens today!
  5. [https://www.adani.com/businesses/infrastructure/airports Adani Airport Holdings Ltd (AAHL)
  6. Adani to Add BOM & Navi Mumbai to its Fledgling Airport Portfolio

வெளி இணைப்புகள்

[தொகு]