நவிண்டில் சிவகாமி அம்மன் கோவில்

ஆள்கூறுகள்: 9°48′23″N 80°11′13″E / 9.806366°N 80.186849°E / 9.806366; 80.186849
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவிண்டில் சிவகாமி அம்மன் ஆலயம்
நவிண்டில் சிவகாமி அம்மன் ஆலயம் is located in இலங்கை
நவிண்டில் சிவகாமி அம்மன் ஆலயம்
நவிண்டில் சிவகாமி அம்மன் ஆலயம்
இலங்கையில் கோவிலின் அமைவிடம்
ஆள்கூறுகள்:9°48′23″N 80°11′13″E / 9.806366°N 80.186849°E / 9.806366; 80.186849
பெயர்
பெயர்:நவிண்டில் சிவகாமி அம்மன் ஆலயம்
அமைவிடம்
நாடு:இலங்கை
மாகாணம்:வட மாகாணம்
மாவட்டம்:யாழ்ப்பாணம்
கோயில் தகவல்கள்
மூலவர்:அம்மன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை

பொருளடக்கம்[தொகு]

  1. அமைவிடம்
  2. ஆலய வரலாறு
  3. திருவிழாக்கள்

நவிண்டில் சிவகாமி அம்மன் ஆலயம் இலங்கையின் யாழ் மாவட்டத்தில் வடமராட்சி எனும் பிரதேசத்தில் நவிண்டில் எனும் ஊரில் உள்ள பிரபலமான ஓர் அம்மன் ஆலயம் ஆகும்.இவ் ஆலயத்தின் மூல மூர்த்தியாக அம்மன் உள்ளது.

அமைவிடம்[தொகு]

யாழ்ப்பாணத்தின் வடமராட்சி பகுதியில் நவிண்டில் எனும் சிறிய கிராமத்தில் சிவகாமி அம்மன் கோவில் அமைந்துள்ளது. சிறிய கிராமத்தில் அமைந்திருந்தாலும் அம்மனின் அற்புதங்கள் அனைவராலும் அறியப்படடவை. பருத்தித்துறையில் இருந்து உடுப்பிட்டியிணை அடையும் வழியில் நவிண்டில் எனும் ஊரில் அற்புதங்கள் புரிந்தவண்ணம் அம்மன் அருள்பாலித்துள்ளார்.

ஆலய வரலாறு[தொகு]

நவிண்டில் கிராமத்தை சுற்றியுள்ள மக்களுக்கு உள்ள ஒரு ஆலயம் சிவகாமி அம்மன் ஆலயம் ஆகும். ஆரம்பகாலத்தில் சிறிய கொட்டகையில் அம்மனின் சூலம் வைத்து வாய் கட்டி பூஜைகள் இடம்பெற்றது. முருகப்பா என்பவர் ஆரம்ப காலத்தில் ஆலய பணிகளை செய்து வந்தார். அந்த சூலம் அமையப்பெற்ற இடம் ஆனது ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில் அல்ல. ஆலயத்திற்கு என்று சொந்தமான காணி ஆரம்ப காலத்தில் வாங்கப்படவில்லை. அந்த இடத்தில் வைத்து ஊர் மக்கள் வழிபாடு செய்து வந்தனர். 1960 ஆம் ஆண்டில் இளையதம்பி அவர்கள் தலைவராக பொறுப்பேற்று ஆலய பணிகளை சிறப்பாக செய்து வந்தார். ஆலய தலைவர் அந்த காணியை வாங்குவதற்கு காணி உரிமையாளர்களிடம் சென்று கேட்ட போது அவர்கள் முதலில் மறுப்பு தெரிவிர்த்தார்கள். பின்னர் பல இன்னல்களுக்கு மத்தியில் அந்த காணியை ஆலயத்திற்கு என்று சொந்தமாக வாங்கி ஆலய வழிபாடுகள் இடம்பெற்று வந்தது. தென்மராட்சியில் எழுதுமட்டுவாள் எனும் கிராமத்தில் மண் அகழ்வு செய்த போது அங்கே ஒரு அம்மன் சிலை கண்டெடுக்க[ப்பட்ட்து. அங்கிருந்து அந்த சிலையை எடுத்து வந்து மக்கள் வழிபாடு செய்து வந்தனர். அனைவராலும் தாயார் கோவில் என அழைக்கப்பட்டு அந்த தாயார் அருள்புரிந்தார். பின்னர் கோவிலில் கட்டட வேலைகள் இடம்பெறத்தொடங்கின.ஆலய திருப்பணி வேலைகளுக்கு அந்த ஊர் மக்களும், ஊரிலிருந்து வெளிநாடுகளில் வசிக்கும் மக்களும் உதவிகளை செய்து வந்தனர். 1999 ஆம் ஆண்டு முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னரும் ஆலயத்தில் நிர்மாண வேலைகள் நடைபெற்று வந்தன. 14 ஆண்டுகளின் பின் 2013 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று திருவிழாவும் நடைபெற்றது. ஆலயத்தில் திருத்த பணிகள் இன்றும் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.ஒவ்வொரு வருட தைப்பூச நாளில் சங்காபிஷேக நிகழ்வு இடம்பெற்று வருகிறது. 2016 ஆம் ஆண்டு வெளிநாட்டில் வசிக்கும் இளைஞர்களினால் அம்மனின் பாடல்கள் அடங்கிய இறுவட்டு ஒன்று வெளியிடப்பட்ட்து.

திருவிழாக்கள்[தொகு]

ஆடி மாதத்தில் அம்மனுக்கே உரித்தான நாளான ஆடிப்பூர நாளில் தீர்த்த உற்சவம் நிகழக்கூடிய வகையில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். ஆடிப்பூர நாளில் அம்மனுக்கு விசேட பூஜைகள் அம்மன் ஆலயங்களில் இடம்பெறும்.அம்மனுக்கென்றே உரித்தான கேதாரகெளரி, வரலட்சுமி விரதங்கள் விசேடமாக இடம்பெறும்.நவராத்திரி, திருவெம்பாவை பூஜைகளும் இடம்பெறும்

வெளியிணைப்புக்கள்[தொகு]

https://m.facebook.com/sivakaamiamman

முகப்பு

படங்கள்[தொகு]