உள்ளடக்கத்துக்குச் செல்

நவிக்கட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவிக்கட்
வடிவமைப்புபிறிமியம்சாப்ட்
உருவாக்குனர்பிறிமியம்சாப்ட்
தொடக்க வெளியீடு2002
இயக்கு முறைமைபல் இயங்குதளம்
கிடைக்கும் மொழிMultilingual (8)
மென்பொருள் வகைமைசீக்குவல் database management and development system
உரிமம்Proprietary / Shareware
இணையத்தளம்www.navicat.com

நவிக்கட் வரையறுக்கப்பட்ட பிறிமியம் சைப டெக் நிறுவனத்தால் வழங்கப்படும் வரைகலைச் சூழல் தரவுத் தள முகாமைத்துவ மென்பொருள் ஆகும். இது மையெசுக்யூயெல், ஆரக்கிள், சீக்குவல்லைட், போஸ்ட்கிறீசீக்குவல் ஆகிய தரவுத் தளங்களை ஆதரிக்கிறது. இது எக்ஸ்புளோளரைப் போல அதே கணினியில் உள்ள தரவுத் தளத்திற்கோ அல்லது அதே வலையமைப்பில் உள்ள பிறிதொரு கணினியில் உள்ள தரவுத்தளத்தையோ நிர்வாகிக்க உதவிசெய்கிறது. தரவுத்தள நிர்வாகிகள், நிரலாக்கர்கள் போன்ற பல்வேறுபட்ட பாவனையாளர்களைக் கருத்திற்கொண்டே இம்மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.[1][2]

சரித்திரம்

[தொகு]

2008 ஆம் ஆண்டில் மைசீக்குவலிற்கான நவிக்கட் ஹாங்ஹாங் தகவற் தொழில்நுட்பத்தின் சிறந்த வணிக விருதையும், வணிகரீதியாக சிற்ந்த பொருளுக்கான விருதையும் பெற்றுகொண்டது. [3]

ஆதரவளிக்கும் இயங்குதளங்களும் மொழியும்

[தொகு]

நவிக்கட் மைக்ரோசாப்ட் விண்டோஸ், ஆப்பிள் மாக் ஓஸ் X, லினக்ஸ் இயங்குதளங்களில் இயங்குகிறது. இம்மென்பொருளை வாங்கி ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன், கொரிய, போலிஷ், இலகுவாக்கப்பட்ட சீனம், பாரம்பரிய சீனம் ஆகிய மொழிகளிற் பயனபடுத்த இயலும்.

விருத்தி

[தொகு]

மைசீக்குவலிற்கான நவிக்கட்

[தொகு]

அதிகாரப்பூர்வமாக மார்ச் 2003 இல் வெளிவந்தது. முதலாவது பதிப்பு மைக்ரொசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்திலேயே இயங்கியது. தொடர்ந்து 2003 ஆன் ஆண்டில் சூன் மாதத்தில் ஆப்பிள் கணினிகளுக்காகவும் அக்டோபர் மாதத்தில் லினக்ஸ் கணினிகளுக்காக வெளிவந்தது.[4][5]

போஸ்ட்கிறீசீக்குவலிற்கான நவிக்கட்

[தொகு]

பிறிமியம் சாப்ட் தமது மென்பொருட்களை மையெசுக்யூயெல்லுடன் நிறுத்திக்கொள்ளாது போஸ்ட்கிறீசீக்குவலிற்கும் விரிவுபடுத்திக்கொண்டனர். விண்டோஸ் இயங்குதளத்திற்கான போஸ்ட்கிறீசீக்குவல் அக்டோபர் 2005 இலும் ஆப்பிள் கணினிகளுக்காக சூன் 2006 இலும் வெளியிடப்பட்டது. லினக்ஸ் கணினிகளுக்க்கான போஸ்ட்கிறிசீக்குவல் 3 வருடங்களின் பின்னர் ஆகஸ்டு 2009 இல் வெளியிடப்பட்டது.[6]

ஆரக்கிளுக்கான நவிக்கட்

[தொகு]

ஆகஸ்டு 2008 இல் விண்டோஸ், ஆப்பிள் கணினிகளுக்கான நவிக்கட்டை உருவாக்கியதன் மூலம் நவிக்கட் தன்னைப் பெருப்பித்துக்கொண்டது. இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு ஆகஸ்டு பகுதியில் லினக்ஸ் பணிச்சூழலிற்கான பதிப்பு வெளியிடப்பட்டது.[7]

எஸ்கியூலைட்டிற்கான நவிக்கட்

[தொகு]

விண்டோஸ், மாக் ஓஸ் X பதிப்புகளுக்கான மாக் ஓஎஸ் X ஏப்ரல் 2009 இல் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது. லினக்ஸ் பணிச்சூழலுக்கான பதிப்பு அதே ஆண்டில் இரண்டு மாதத்தில் வெளியிடப்பட்டது. நவிக்கட் பிறிமியம் பதிப்பின் பயன்பாட்டைக்கூட்டுவதற்காக எஸ்கியூலைட் ஐயும் உள்ளிணைத்துக் கொண்டது.</ref> In April 2010, Navicat Premium began including Navicat for SQLite starting from version 9 to expand the usability of Navicat Premium.[8]

நவிக்கட் பிறிமியம்

[தொகு]

2009 ஆம் ஆண்டில் பிறிமியம் சாப்ட் நவிக்கட் பிறிமியம் பதிப்பை வெளியிட்டது. இதன் மூலம் இதன் முந்தைய பதிப்புக்கள் எல்லாவற்றையும் ஒரே பதிப்பாக்குவதுடன் மைசீக்குவல், ஆரக்கிள், போஸ்ட்கிறீசிக்குவல் போன்ற பல்வேறு தரவுத்தளங்களையும் ஒரே நேரத்தில் இணைந்து தரவுகளைக் கையாள வழிசெய்தது. நவிக்கட் பிறிமியம் மைக்ரோசாப்ட் விண்டோஸ், ஆப்பிள் மாக் ஓஎஸ் எக்ஸ், லினக்ஸ் போன்ற ஒன்றிற்கு மேற்பட்ட இயங்குதளங்களில் இருந்து தரவுத்தளங்களைக் கையாள வழிசெய்தது. ஏப்ரல் 2010 இல் நவிக்கட் 9 ஆம் பதிப்பு வெளியிடப்பட்டது இது எக்ஸ்கியூலைட் தரவுத்தளத்திற்கான இணைப்பையும் கொண்டிருந்தது. நவம்பர் 2010 இல் மைக்ரோசாப்ட் சீக்குவல் சர்வருடனும் இணைப்பை ஏற்படுத்தும் வசதி கிடைத்தது. ஜனவரி 2011 இல் சீக்குவல் அஸ்சியூவர் உடனான வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.[8][9]

நவிக்கட் லைட்

[தொகு]

மெல்லிய நவிக்கட் எனப்பொருள்படும் நவிக்கட் லைட் அக்டோபர் 2007 வணிகநோக்கல்லாத பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டது. அதற்குமுன்னதாக நவிக்கட் வணிகரீதியான பயன்பாட்டிற்குமாத்திரமே வெளியிடப்பட்டது. இது பிறிமியம் பதிப்பும் உள்ள பார்வைகள் (வியூ - View), கோப்புக்களை வடிக்கட்டுதல் (Record Filtering), வினவுதலை வரைகலைஇடைமுகம் ஊடாக உருவாக்குதல் (visual query building), தரவுத்தளத்தின் ஆவணப்படுத்தலை ஏற்றுமதி செய்யவோ அல்லது இறக்குமதி செய்யவோ உதவுகிறது.[10]

சீக்குவல் சர்வரிற்கான நவிக்கட்

[தொகு]

நவிக்கட்டின் ஆகப்பிந்தைய சேர்க்கையான மைக்ரோசாப்ட்டின் யெசுக்யூயெல் சர்வரே ஆகும். நவிக்கட் விண்டோஸ், ஆப்பிள் கணினிகளில் மைக்ரோசாப்ட் யெசுக்யூயெல் சர்வரை ஆதரிக்கிறது. ஜனவரி 2011 இல் சீக்குவர் அசியூவர் இன் ஆதரவும் சேர்க்கப்பட்டது.[11]

வசதிகள்

[தொகு]

இதிலுள்ள குறிப்பிட்ட சில வசதிகள். :[12]

  • வரைகலை இடைமுகம் ஊடாக வினவலை உருவாக்கல் (Visual query builder).
    • SSH, HTTP சுரங்கமுறையில் பாதுக்காப்பாகத் தொடர்பாடல்[2]
  • தரவையும் அதன் கட்டமைப்பையும் ஏற்றுமதி செய்வதுடன் தரவை synchronization செய்ய உதவுதல்
  • தரவுத்தளத்தின் ஆவணப்படுத்தலை சேமிக்கவோ அல்லது சேமிக்கப்பட்ட ஆவணப்படுத்தலில் இருந்து தரவுத் தளத்தை மீள்விக்கவோ இயலும்.
  • அறிக்கை தயாரித்தல்
  • பணிகளை நேரசூசிகைக்கேற்ப இயக்கச் செய்தலும் மேதவித்தனமான கருவிகள் மூலம் இலகுவாகப் பணிகளைப் புரிதலும்.

இயங்குதளங்களிற்கு ஏற்ப நவிக்கட்டின் வசதிகள் மாறுபடும்.[10]

நவிக்கட் மைசீக்குவலின் மாற்றுப்பதிப்புக்களையும் ஆதரிக்கும்.

வெளியீட்டுச் சரித்திரம்

[தொகு]

கீழுள்ள அட்டவணை நவிக்கட் வெளியீட்டின் பதிப்புகளையும் வசதிகளையும் காட்டுகிறது.

பதிப்பு இயங்குதளம் வெளியீட்டுத் தேதி குறிப்பிடத்தக்க வசதிகள்
மைசீக்குவல் போஸ்ட்கிறீசிக்குவல் ஆரக்கிள் எக்ஸ்கியூலைட் சீக்குவல் சர்வர் பிறிமியம்
4.x
  • விண்டோஸ்: மார்ச் 2002
  • மாக் ஓஎஸ் எக்ஸ்: சூன் 2003
  • லினக்ஸ்: வெளியிடப்படவில்லை
N/A N/A N/A N/A N/A
  • அட்டவணைகளை ஆராந்து, சரிபார்த்து பழுபார்க்க உதவியது.
  • வரைகலை இடைமுகம் மூலமாகப் பயனர்களையும் அவர்களுக்கு வழங்கப்பட்ட வசதிகளையும் நிர்வாகிக்க உதவியது.
  • நேரசூசிகைமூலம் தரவுத்தளத்தை ஆவணப்படுத்தும் வழி.
  • மைக்ரோசாப்ட் எக்ஸ்செல், ஆக்ஸ்சஸ் ஊடாகத் தரவை பெற்றுக்கொள்ளவும் தரவை சேர்த்துக் கொள்ளுவதற்குமான வசதி.
5.x
  • விண்டோஸ்: ஜனவரி 2003
  • மாக் ஓஎஸ் எக்ஸ்: ஜனவரி 2004
  • லினக்ஸ்: செப்டபர் 2004
N/A N/A N/A N/A N/A
  • சீகுவல் ஸ்கிர்ப்ட் ஊடாக தரவுத்தளத்தை ஆவணப்படுத்தும் வசதி
  • சீக்குவல் ஸ்கிரிப்ட் ஐ இயக்கும் வசதி.
  • ஒன்றுக்கு மேலதிகமான சீக்குவல் எடிட்டருடன் இலக்கணங்களை மாற்றுநிறங்களூடாக வேறுபடுத்திக் காண்பிக்கும் வசதி
6.x
  • விண்டோஸ்: ஏப்ரல் 2004
  • மாக் ஓஎஸ் எக்ஸ்: நவம்பர் 2005
  • லினக்ஸ்: அக்டோபர் 2005
  • மாக் ஓஎஸ் எக்ஸ்: சூன் 2006
N/A N/A N/A N/A
  • திறந்த தரவுத்தள இணைப்பு (ODBC) முறைமூலம் தரவுகளைச் சேர்க்கும் வசதி
  • SSH முறையில் மைசீக்குவல் தரவுத்தளங்களை அணுகுவம் வசதி
  • Profiles களை நேரசூசிகைக்கு உட்படுத்தும் வசதி.
7.x
  • விண்டோஸ்: நவம்பர் 2005
  • மாக் ஓஎஸ் எக்ஸ்: நவம்பர் 2007
  • விண்டோஸ்: அக்டோபர் 2005
  • மாக் ஓஎஸ் எக்ஸ்: டிசெம்பர் 2007
  • மாக் ஓஎஸ் எக்ஸ்: ஆகஸ்டு 2008
N/A N/A N/A
  • தரவும் தரவுத்தள கட்டமைப்பும் Synchronization பண்ணும் வசதி
  • அட்டவணைகளை இழுதுக் கொணடுபோய்ப் போடும் வசதி
  • Create parameter queries
8.x
  • விண்டோஸ்: ஜனவரி 2008
  • மாக் ஒஎஸ் எக்ஸ்: பெப்ரவரி 2009
  • லினக்ஸ்: ஜனவரி 2008
  • விண்டோஸ்: ஜனவரி 2008
  • மாக் ஓஎஸ் எக்ஸ்: ஏப்ரல் 2009
  • லினக்ஸ்: ஆகஸ்டு 2009
  • விண்டோஸ்: ஆகஸ்டு 2008
  • மாக் ஓஎஸ் எக்ஸ்: ஏப்ரல்l 2009
  • லினக்ஸ்: ஆகஸ்டு 2009
N/A N/A
  • விண்டோஸ்: சூன் 2009
  • மாக் ஓஎஸ் எக்ஸ்: சூன் 2009
  • லினக்ஸ்: ஆகஸ்டு 2009
  • Virtual grouping
  • Server Monitor to change system variables
  • Allows form view
  • Able to preview SQL before execution
9.x
  • விண்டோஸ்: ஏப்ரல் 2010
  • மாக் ஓஎஸ் எக்ஸ்: ஏப்ரல் 2010
  • லினக்ஸ்: சூன் 2010
  • விண்டோஸ்: ஏப்ரல் 2010
  • மாக் ஓஎஸ் எக்ஸ்: ஏப்ரல் 2010
  • லினக்ஸ்: சூன் 2010
  • விண்டோஸ்: ஏப்ரல் 2010
  • மாக் ஓஎஸ் எக்ஸ்: ஏப்ரல் 2010
  • லினக்ஸ்: சூன் 2010
  • விண்டோஸ்: ஏப்ரல் 2010
  • மாக் ஓஎஸ் எக்ஸ்: ஏப்ரல் 2010
  • லினக்ஸ்: சூன் 2010
  • விண்டோஸ்: நவம்பர் 2010
  • மாக் ஓஎஸ் எக்ஸ்: நவம்பர் 2010
  • லினக்ஸ்: N/A
  • விண்டோஸ்: ஏப்ரல் 2010
  • மாக் ஓஎஸ் எக்ஸ்: ஏப்ரல் 2010
  • லினக்ஸ்: June 2010
  • History log viewer
  • ஒருங்குறி ஆதரவான அறிக்கைகள்.
  • Import and export connections
  • சீக்குவல் நிரலாக்கத்தின் தட்டச்சுச் செய்யும்பொழுதே அதனுடன் பொருத்தமான சொற்களைத் தேடிக்கொண்டுவருகிறது.
10.x
  • விண்டோஸ்: 2012
  • விண்டோஸ்: 2012
  • விண்டோஸ்: 2012
  • விண்டோஸ்: 2012
  • விண்டோஸ்: 2012
  • விண்டோஸ்: 2012
11.x
  • விண்டோஸ்: 2013
  • விண்டோஸ்: 2013
  • விண்டோஸ்: 2013
  • விண்டோஸ்: 2013
  • விண்டோஸ்: 2013
  • விண்டோஸ்: 2013

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-04-13. பார்க்கப்பட்ட நாள் 2011-07-28.
  2. 2.0 2.1 http://www.lasplash.com/publish/Software_Reviews_and_News_130/navicat_mysql_gui_review.php
  3. "Winner of the HKICT Awards 2008: Best Business Grand Award selected winner of HKICT Award of the Year". Archived from the original on 2016-12-30. பார்க்கப்பட்ட நாள் 2016-12-30.
  4. Navicat for MySQL release notes
  5. http://www.techmixer.com/navicat-mysql-mysql-database-management-tools-for-windows
  6. Navicat for PostgreSQL release notes
  7. Navicat for Oracle release notes
  8. 8.0 8.1 Navicat Premium release notes
  9. http://www.techmixer.com/navicat-premium-cross-database-administrator-management-tool
  10. 10.0 10.1 Navicat Feature Matrix, for MySQL, PostegreSQL, Oracle. Retrieved on 14 December 2008.
  11. Navicat for SQL server overview
  12. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-07-16. பார்க்கப்பட்ட நாள் 2011-07-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவிக்கட்&oldid=3870727" இலிருந்து மீள்விக்கப்பட்டது