நவாலி கதிர்காம முருகன் ஆலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயம்.

அமைவிடம்[தொகு]

      சோமசுந்தரப்புலவர் முதலாம் பல புண்ணியம்ச் சான்றோர் வாழ்ந்து புகழ் பரப்பிய இடம் நவாலியம்பதி வலி.தென்மேற்கு உதவி அரசாங்க பிரிவைச் சேர்ந்தது. கிராம சேவையாளர் பிரிவு துஃ135. புழமையான வரலாற்றுச்; சிறப்பு மிக்க சிந்தாமணி விநாயகர் ஆலயம், அந்திரான் முருகமூர்த்தி கோவில் ஆகிய இரண்டுக்கும் நடுவனாக அமைந்துள்ள கதிர்காம முருகன் ஆலயம், காலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் நடுநாயகமாக விளங்குகின்றது. யாழ் நகரிலிருந்து 7 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது.  

நவாலி – வட்டுக்கோட்டைப் பிரிதான வீதியில் அமைந்துள்ளமையால், காரைநகர் - யாழ்ப்பாணம் -786 இலக்கப்பேரூந்து, பருத்தித்துறை – நவாலி மானிப்பாய் -767 இலக்கப்பேரூந்து ஆகிய இரண்டும் பயணிக்கும் நடு எல்லையாததால் போக்குவரத்து மிகவும் திருப்தியாகவுள்ளது. பல அடியார்கள் தத்தம் பயணத்தை மேற்கொள்ளும் போது இங்குவந்து தரிசித்து செல்வதும், எக்கருமத்துக்காகவும் இவ் வீதியைப் பயன்படுத்துபவர்களும் கதிர்காம முருகனைச் சிந்தையால் தரிசித்து செல்வதும், உள்ளத்தைத் தொடும் காட்சியாகும்.

இக்கோயிலை ஸ்தாபித்தவர்கள் இராசமணி அம்மையார் திரு. சண்முகம் என்பவரின் கரம்பற்றி இல்லத்தரசியாக, மக்கள் நால்வரின் தாயாக இருந்தார். கடும்நோயினால் வருந்தி பெரும் உள்ளத் தாக்கத்துடன் செல்வச்சந்நிதி சென்று அங்கிருந்து கதிர்காம யாத்திரை மேற்கொள்ள உத்தேசித்தார். 1956 ஆம் ஆண்டு நாட்டில் இனக்கலவரம், வீட்டவர்களுக்கு மனக்கிலேசம். 'கடற்கரையோரத்திலே, கையில் வேலுடன் சிறுவனாக வந்து தன்கரம் பற்றி கதிர்காமம் அழைத்துச் செல்வது போல் ஒரு காட்சியும் கண்டேன். துணைவருவேன், ஒன்றுக்கும் அஞ்ச வேண்டாம் என்ற வாக்கும் கேட்டேன்.' யாத்திரையைத் தடுக்க முனைந்த உறவுகள் இதைக்கேட்டு மௌனமாக இருந்தனர். 'கைலைக் காட்சி கண்டல்லால் மாளும் உடல் கொண்டு மீளேன் என்ற அப்பரடிகளின் வைராக்கியத்தோடு சென்றார். அவரது பாதை சோதனையாயிற்று. இறுதியில் சத்தியம் வென்றது.

இவ்வாறாக யாத்திரை மேற்கொண்ட வழிகளில் உண்டான அனுபவங்களில் ஓர், இரண்டையேனும் குறிப்பிடுதல் இங்கு பொருத்தமானதாகும். காட்டிலே யானைக்கூட்டமொன்று எதிர்ப்பட்டது. இவருடன் சென்ற குழுவினர் கதிகலங்கினர். பிராணபயத்திலே நடுங்கி நின்ற வேளை, எல்லோரும் 'அரோகரா கோஷம் செய்வோம் என்று சொல்லித்தானே தொடங்கினார். அடியார்களின் கோஷம் யானைகளை விரட்டியதும் எல்லாம் தம்வழி சென்று விட்டன.

நட்டநடுக் காட்டுக்கிடையே சென்றுகொண்டிருக்கையில் எல்லோருக்கும் தண்ணீர்த் தாகம் உண்டாயிற்று. சிறிது தொலைவில் குளம் ஒன்று தெரிந்தது. சென்று பார்த்தால் முதலைகளின் இருப்பிடமாகத் தெரிந்தது. எவரும் குளத்தை நெருங்கப் பயந்தனர். இவர் துணிந்து சென்று நீர்கொண்டு யாவர்க்கும் கொடுத்தமை பெரிய அற்புதம் அல்லவா? இவ்வாறாக இவர்கள் கதிர்காமத்தைச் சென்றடைந்தனர்.

குருமுருகன் மாணிக்க கங்கையில் நீராடி, விபூதி தரித்து, 'அரோகரா' நாமஜெபத்துடன், 'எனக்கு ஏதாவது உறுதி சொல்லும் என்று ஓரிடத்தில் தியானத்தில் அமர்ந்தார். பக்தியின் மொழி கண்ணீர் தானே. கண்ணீர் பெருக, மெய் மறந்த நிலையிலே' சின்னம் வரும்; கொண்டு நவாலிக்குச் செல்க் நான் அங்கு வருகின்றேன். என்ற அசரீரி கேட்டது. அதற்கிணங்க மறுநாள், ஒருநாளும் அறிமுகமில்லாத முதியவர் ஒருவர் அதைக்கொடுத்து மறைந்து விட்டார்.

சின்னத்தைப் பெற்றார், இரும்பு பொன்னாகும் இரசவாதம் நடந்தது. பேருவகையுடன் நவாலிக்கு வந்து சேர்ந்தார். குருகுலத்தைச் சார்ந்தவர்கள், எனினும் விபூதியை எடும், கொடுப்பது நான் என்று முருகப்பெருமான் அருளிய பலம் மாபெரும் சக்தியாயிற்று. தீராத நோய்கள் தீர்ந்தன. பெல்லி, சூன்யம் செய்வினைகளால் தாக்குண்டார் சுகம் கண்டனர். அம்மையாரின் தோற்றம் 'குனித்தபுருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்..........' என்றபடி இருந்தது.


அதிசியம்[தொகு]

நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலே நடைபெற்ற ஒரு ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதாகும். சேரமான் பெருமான் நாயனார்க்குத் தனிப்பட்ட அவரது பூசை முடிவிலே நடராஜப்பெருமானது பாதச்சிலம்பொலி கேட்பது சமயம் நிறுவிய உண்மை. இவ்வாலயத்திலும் அன்று பூசை நேரங்களில் சுவாமிக்கு அண்மையிலுள்ள இரண்டு விளக்குகள் அசைந்தாடுவது உண்மை. மேலும், பூசை நேரங்களில் குருமுருகன் ஒரு பக்கம் தியானத்தில் அமர்வார். அவ்விடத்தில் மணல் மீது சின்னக் குழந்தையின் செல்வச் சேவடி பதிந்திருக்கும். செல்வச்சந்நிதியானின் பாதமுத்திரையான இதனை நிலையாகப்பதிக்க விரும்பி, விண்ணப்பித்து வக்குப்போல செய்த ஓரிடத்தில் சீமெந்து கரைத்து வைத்து பாதத்தறை என்று குறிப்பிட்டு இன்றும் பூசை செய்வதைக் காணலாம்.

1982 ஆம் ஆண்டு வைகாசி மாதம் திருவாதிரை அன்று இவரின் மகாசமாதி நிகழ்ந்தது. சமாதியன்று புல்லாங்குழலுடன் கண்ணன் நிற்பார் என்று சொன்ன தீர்க்க தரிசன மொழியின்படி, அன்பர் ஒருவர் இவரின் சமாதியன்று நினையாப்பிரகாரம் கண்ணன் சிலையுடன் வந்தமை அதிசயமல்லவா? முன்பு பாதம் பதிந்த இடத்தில் சமாதி எழுப்பப்பெற்றது அற்புதம் தானே. இவரது புத்திரர் உயர் திரு சண்முகம் பாலசுப்பிரமணியம் சமாதிக்குரிய கிரியைகளை ஆத்மீகம் தந்த அன்பின் ஆர்வத்துடன் நிகழ்த்தினார். 1984 இல் வெளிநாடு செல்லும் வரை அவரே பூசகராக இருந்தார். இவரது சகதர்மினி பிச்சைத்தம்பி அன்னம் தம்பதிகளின் மகள் ருக்மணி தேவியாகும். இவரது சகோதரி பவளமணி ஆலய திருப்பணிகளில் மிகவும் ஈடுபாடுடையவர் பாலசுப்பிரமணியம் அவர்களின் சகோதரி மகன் பகீரதன் சிறு உதவிகள் கொடுக்கச் 'சிவம்' 1995.08.09 ம் திகதி புக்கார் குண்டு வீச்சுவரை பூசை நிகழ்த்தினார். கதிர்காம முருகன் ஆலயத் தொண்டுகள் செய்துவந்த பவளமணியைச் சிறிது காலத்திற்குப் பின் திருமணம் செய்தார். திரு. மு. சுந்தரமூர்த்தி அவர்கள் இவரும், சிவமும், பகீரதனும் குண்டு வீச்சு அனர்த்தம் வரை பூசை நிகழ்த்தினர்.

நாடளாவிய அனர்த்தங்கள் நிகழ்ந்த போது விக்கிரங்கள் இருந்த இடம் ஒழிந்து ஏனைய பகுதிகள் தரைமட்டமாயின. அயலில் சில வீடுகளும் தரைமட்டமாகியது. புனித சஞ்சாரமற்ற இடமாக பல உயிர்கள் சேதமுற சூன்யப் பிரதேசமாக (பிரதேசம் இருந்த இடம் மீண்டு அருள் நிலையம் ஆயிற்று. 1995 – 1996 ஆண்டுப் பகுதியில் மக்கள் இடம்பெயர்ந்தனர். தற்போதய பூசகர் திரு. மா. பத்மநாதன் இரண்டாவது மகள் பிரியதர்சினியுடன் கொழும்பு சென்றார். திருமதி. மா. பத்மநாதன் செல்வி ப. அநிந்திதா செல்வன் ப.பத்மகுமார் ஆகியோர் நவாலிக்குத் திரும்ப வந்தனர். இங்கு ஆலயபூசைக்கு எவரும் அற்றநிலை. நீறு பூத்த நெருப்புப்போல் தொண்டுள்ளத்துடன் வாழ்ந்த இவர்கள் ஆலய அலுவலகளில் முழுமூச்சுடன் செயற்பட்டனர். குருமுருகனின் இளைய சகோதரர் அமரர் திரு. சிவகுரு அவர்கள் 'குருபாமா' என்று அழைக்கப்பெற்றவர். விளங்குமாறும் கையுமாக எந்நேரமும் சுத்திகரிப்புத் தொண்டைச் செய்தாhர். அவரது தொண்டும், அவரது அன்னையான 'குஞ்சரம்' என்பவரின் அம்மன்கலையும் வாக்குகளும் ஆலயத்தில் அழியாத பதிவேடுகளாகும். 'அடியார் ஆலயத்தில் அல்லல் சொன்னக்கால், வானாது இருப்பீர்' என்ற தோழமை பூண்ட சுந்தரர் சிவனைக் கேட்டது போல் இக்காலப் பகுதியில் திரு. பத்மநாதனின் பிள்ளைகள் இருவரினதும் பூசையை முருகன் அங்கீகரித்தமையால் ஒருவித தடையுமின்றிப் பூசைகள் நடந்தன. 1998 ஆம் ஆண்டு பாலஸ்தாபனம் செய்து 1999 பங்குனி மாதம் 22ஆம் தேதி அனுஸ்ட சேத்திர நன்னாளில் அடுத்த கும்பாபிசேகம் நிகழ்ந்ததது. இவ்வாலயத்துக்கு அமரர் கலாபூசணம் வீரமணி ஐயரவர்கள் ஊஞ்சற்பாட்டு பாடி உபகரித்தமை பேருட்செயலாகும்.

தற்போது இவ்வாலய வரலாற்றில் விழாக்கள் செய்யவும், வேறு கைக்காரியங்களுக்குமாக அடியவர்கள் பலர் பொருளாலும் சரீரத்தொண்டினாலும் பங்களிப்புச் செய்கின்றார்கள். விரிவஞ்சிப் பெரியவர்கள் குறிப்பிடவில்லை எனினும் ஓரிரு புதுமைகளையேனும் குறிப்பிடுவது பொருத்தமானதாகும். புகழ் விரும்பாமை, உள்ளத்தூய்மை, பொறுமை, அர்ப்பணிப்பு போன்ற குணங்கள் கொண்டமையாற்போலும் கும்பாபிசேகப்பணி பத்மநாதத்தம்பதியர்க்குக்கிட்டியது. மேலும் 14.03.2006 ஆம் ஆண்டு கதிர்காமத்திலே அந்தணர் இல்லாதவருக்குரிய கருத்தரங்கில் பங்குகொண்டனர். இங்குதான் திரு. மா. பத்மநாதனுக்கு சிவத்திரு. புத்மநாதன் என்ற பட்டம் வழங்கப்பெற்றது. முருகன் சமாதியடைந்த வைகாசி மாத திருவாதிரை குரு தினமாக திருவுருவப்படம் கிளி வாகனத்தில் வீதி வலம் வருவதும், மாதந்தோறும் திருவாதிரை தினம் விசேட பூசையாகவும் கொண்டாடப்படுகின்றது. திருவெம்பாவை காலத்துடன் நின்றுவிடாது, காலையில் நித்திய பூசையின்பின் சிகபுராண நாதகீதம் ஒலிப்பது அற்புதம், ஆடம்பரமும், பகட்டும் இன்றிப் பூசைகள், திருவிழாக்கள் நிகழும் போது மன ஒருமைப்பாட்டுக்குரிய சூழல் அமைந்ததும், காவடிகள் ஆடிவரும் போது தம்மை மறந்த நிலையில் பக்தர்கள் காணப்படுவது புதுமையல்லவா?

பூர்வ புண்ணிய பலனாக பல அடியவர்கள் இவரிடம் வந்து, உணர்ச்சி மேலீட்டால் 'அம்பன்' என்றும் 'குருமுருகன்' என்றும் நாவாரத் துதித்துக்கொண்டு இங்கு பலர் தொண்டர்களாயினர். சிலர் அவரைச் சந்தேகிக்கவும் செய்தனர். பல்வேறு சோதனைகள் நிகழ்த்தியும் பார்த்தனர். இங்கு ஒன்றை மட்டும் குறிப்பிடுகின்றோம். ஆக்காலகட்டத்திலே கொழும்புத்துறையிலே யோகர்சுவாமிகள் ஞானஒளி பரப்பிக்கொண்டிருந்தனர். அவரைத் தரிசிக்க வருமாறு கட்டாயப்படுத்திக் குருமுருகனை அழைத்துச்சென்றனர். இவரைக் கண்ட மாத்திரத்தே யோகர் சுவாமிகள் ஆனந்த மேலீட்டால் 'அப்பா வருக, முருகா வருக' என்று கூறிக்கொண்டமையைக் கண்டவர்கள் கூறிக்கூறி மகிழ்ந்தனர். பக்தர் மருகலிங்கனார் கண்ட தெய்வக் காட்சி கோயில் அமைய உந்துசக்தி. குருமுருகனும் ஆச்சிரமம் அமைப்போம் என்று தான் முதலிற் கொண்ட எண்ணத்தை மாற்றிக் கோயில் அமைக்கத் திருவுளம் கொண்டார். தமது குடும்பச்சொத்தாகக் குடியிருந்த காணியிலே ஆலயம் அமைக்கப்பெற்றது. தொண்டர்களது பக்குவத்திற்கும், படித்தரத்திற்கும் அமைய அற்புதங்கள் பல அவரவர் வாழ்க்கையில் நிகழ்ந்தது. இத்தகையோரிற் சிலர் இன்னும வாழ்ந்து தம் அநுபவத்தைச் சொல்லி வாயூறுகின்றனர். 1956 ஆம் ஆண்டு ஆடி மாதம் சிறிய குடிலாகக் கோயில் அமைந்தது. 1960 ஆம் ஆண்டு வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று தற்போதுள்ள அமைப்பில் கோயில் பூர்த்தியாகி முதலாவது கும்பாபிசேகம் நடைபெற்றது. மூலஸ்தானத்தில் முருகன் வேலுண்டு விநாயகர், வள்ளியம்மன், தெய்வானை அம்மன் ஆறுமுகசாமி, நாராயணர் என்ற பதிவார மூர்த்தங்கள் உண்டு. ஊதார குணங்கொண்ட அன்பர்கள் பலரின் பங்களிப்பால் மடப்பள்ளி, தீர்த்தக்கேணி யாவும் சிறப்பாக அமைந்துள்ளது. கதிர்காமம் செல்வச்சந்நிதி போன்ற ஆலயங்கள் போல் இங்கும் ஆகமத்துக்குப் புறம்பான மௌன பூசை நிகழ்கின்றது. வாய்கட்டிப் பூசை நிகழ்ந்த பின் குருமுருகன் விபூதிப்பிரசாதம் அளிப்பார். அவரது கணவராயிருந்த அமரர் திரு. சுவாமி சண்முகம் முதலில் பூசகராயிருந்தார் இங்கு மூன்று காலப்பூசை நித்தியம் நிகழும் சனிக்கிழமைகளில் காலைப்பூசை நிகழாது. முழுக்குப்பூசை என்ற பெயரில் மத்தியானம் பூசை ஆரம்பமாகும். சுpவராத்திரி கந்தசஷ;டி நவராத்தி என்ற பல விழாக்கள் கொண்டாடப்படுவதுண்டு. ஸ்தலவிருட்சமாக வேப்பமரம் உள்ளது. கதிர்காமமத் திருவிழா ஆடிமாதம் தொடங்கும் போது இங்கும் இவ்விழாக்கள் கொண்டாப்படும். திருமுருகன் நெருங்கிய தொண்டர்களோடு பொருள் பொதிந்த தத்துவானந்த சிந்தனைகளப் பகிர்வதுண்டு. சில எழுத்துவடிவம் பெற்றன. அதில் ஒன்று 'Pin ய அயடந ளயரட' என்பது. ஆண் ஆத்தாலை இணக்கவும் என்ற தொடர் பல காலம் விளங்காத புதிராக இருந்தது. பல நாட்களின் பின் புதிர் விளங்கிற்று.

நவாலி தெற்கை வசிப்பிடமாகக் கொண்ட சரவணமுத்து தங்கம்மா தம்பதிகளின் மகன் திரு. சிவராசா என்பவர். இவர் அரசாங்க உத்தியோகத்திலிருந்தவர். தாயார் மூலம் இக் கோயில் பற்றி அறிந்தார். இக்கோயில் பூசகர் திரு. சுவாமி சண்முகம் இவருடன் அளவளாவுவார். மெல்ல மெல்ல பக்திவளர்ந்தது. உத்தியோகத்தைத் துறந்துவட்டு இங்கு முழுநேரத் தொண்டரானார். தனது காணியை குரு காணிக்கையாக்கினார். 1964 ஆம் ஆண்டு மார்கழி முதலாம் தேதி அஸ்வினி நட்சத்திர நன்னாளில் குருமுருகன் செல்லப்பிள்ளையார் ஆலயத்தைச்சேர்ந்த ஸ்தாபிதம் செய்தார்கள். தந்தையார் காலத்திற்குப்பின் புத்திரரான திரு. சண்முகம் பாலசுப்பிரமணியம் செல்லப்பிள்ளையார் கதிர்காம முருகன் ஆகிய இரு ஆலயங்களுக்கும் பூசை நிகழ்த்தினார். யானை வாகனத்தில் உற்சவகாலங்களில் சுவாமி ஊர்வலம் நிகழும். கோயிலுக்கு மயில், கிளி வாகனங்களும் உண்டு. இவை அடியவர்களின் அன்பளிப்பாகும்.