உள்ளடக்கத்துக்குச் செல்

நவாப் மாலிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவாப் மாலிக்
தொகுதிஅணுசக்தி நகர் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1959
துஸ்வா (உத்திரப்பிரதேசம்)
அரசியல் கட்சிதேசியவாத காங்கிரசு கட்சி
வாழிடம்மும்பை
இணையத்தளம்www.nawabmalik.in

நவாப் மாலிக் (Nawab Malik)(பிறப்பு 20 ஜூன் 1959) இந்திய அரசியல்வாதி, தேசியவாத காங்கிரசு கட்சி அரசியல்வாதி ஆவார்.மகாராஷ்டிராவின் சிறுபான்மையினர் வளர்ச்சி, வக்ப் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சராக பதவி வகிக்து வருகிறார். கோண்டியா நகரின் பாதுகாவலர் எனவும் அழைக்கப்படுகின்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மற்றும் மும்பை தலைவராகவும், மகாராஷ்டிராவின் முன்னாள் வீட்டுவசதி அமைச்சரும் ஆவார்.[1][2]

பிறப்பு

[தொகு]

நவாப் மாலிக் 20 ஜூன் 1959 இல் துஸ்வாவில் (உத்திரப்பிரதேசம்) பிறந்தவர், 1970 ஆண்டு பம்பாய்க்கு (தற்போதைய மும்பைக்கு) குடிபெயர்ந்தவர்.

கல்வி

[தொகு]

அஞ்சுமன் இஸ்லாம் உயர்நிலைப் பள்ளி - எஸ்எஸ்சி (1976) புர்ஹானி கல்லூரி - இன்டர் (1978) எஃப்.ஒய். (பி.ஏ.) புர்ஹானி கல்லூரி (1979)

குடும்பம்

[தொகு]

நவாப் மாலிக்கிற்க்கு மெஹாஜபின் எனும் மனைவியும், ஃபராஸ், அமீர் என்ற மகன்களும், நிலோஃபர், சனா மாலிக் ஷேக் என்ற மகள்களும் உள்ளனர்

சட்டமன்றத்தில்

[தொகு]

மாலிக், 1996, 1999, 2004-ல் நேரு நகர் சட்டமன்றத் தொகுதி மற்றும் 2009,2019-ல் மும்பையில் உள்ள அணுசக்தி நகர் சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றிலிருந்து மகாராட்டிரா சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

அமலாக்கத்துறையின் வழக்கும், கைதும்

[தொகு]

11 பிப்ரவரி 2022 அன்று நவாப் மாலிக் மற்றும் தாவூத் இப்ராகிம் மீது தேசியப் புலனாய்வு முகமை தொடர்ந்த பணமோசடி வழக்கில், 23 பிப்ரவரி 2022 அன்று அமலாக்க இயக்குநரகத்தால் நவாப் மாலிக் கைது செய்யப்பட்டார். நவாப் மாலிக் நீதிமன்ற காவலின் போது, உடல்நிலை மோசமடைந்தை ஒட்டி 17 மே 2022 அன்று அன்று தானே கிரிட்டிகேர் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்திய உச்ச நீதிமன்றம் 11 ஆகஸ்டு 2023 அன்று நவாப் மாலிக்கிற்கு மருத்துவ காரணங்களுக்காக இரண்டு மாத கால இடைக்கால பிணை வழங்கியது.[4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "NCP Leader Nawab Malik Targets Anna Hazare, Gets Sued For Defamation". NDTV.com.
  2. "Nawab Malik is second NCP minister to quit". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 11 March 2005. https://timesofindia.indiatimes.com/city/mumbai/Nawab-Malik-is-second-NCP-minister-to-quit/articleshow/1049486.cms. 
  3. "அனுசக்தி நகர்சட்டசபைத் தேர்தல் முடிவு (2009)". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original (PDF) on 9 ஏப்பிரல் 2011. பார்க்கப்பட்ட நாள் 3 November 2010.
  4. Nawab Malik walks out of hospital after court grants cash bail
  5. Back Maharashtra news: NCP leader Nawab Malik gets interim bail from Supreme Court
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவாப்_மாலிக்&oldid=4148549" இலிருந்து மீள்விக்கப்பட்டது