உள்ளடக்கத்துக்குச் செல்

நவாப்கஞ்சு பறவைகள் சரணாலயம்

ஆள்கூறுகள்: 26°37′09″N 80°39′11″E / 26.6191858°N 80.6531205°E / 26.6191858; 80.6531205
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவாப்கஞ்சு பறவைகள் சரணாலயம்
Nawabganj Bird Sanctuary
சாகித் சந்திர சேக்கர் ஆசாத்து பறவைகள் சரணாலயம்
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி)
பறவைகள் சரணாலய ஈரநிலம்
Map showing the location of நவாப்கஞ்சு பறவைகள் சரணாலயம் Nawabganj Bird Sanctuary
Map showing the location of நவாப்கஞ்சு பறவைகள் சரணாலயம் Nawabganj Bird Sanctuary
Map showing the location of நவாப்கஞ்சு பறவைகள் சரணாலயம் Nawabganj Bird Sanctuary
Map showing the location of நவாப்கஞ்சு பறவைகள் சரணாலயம் Nawabganj Bird Sanctuary
அமைவிடம்நவாப்கஞ்சு, உத்தரப் பிரதேசம், இந்தியா
ஆள்கூறுகள்26°37′09″N 80°39′11″E / 26.6191858°N 80.6531205°E / 26.6191858; 80.6531205
நிருவாக அமைப்புஇந்திய அரசு
Invalid designation
அலுவல் பெயர்நவாப்கஞ்சு பறவைகள் சரணாலயம்
தெரியப்பட்டது19 செப்டம்பர் 2019
உசாவு எண்2412[1]
நவாப்கஞ்சு பறவைகள் சரணாலயத்தில் ஒரு புள்ளிமான்

நவாப்கஞ்சு பறவைகள் சரணாலயம் (Nawabganj Bird Sanctuary) இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள கான்பூர்-இலக்னோ நெடுஞ்சாலையில் உன்னாவு மாவட்டத்தில் அமைந்துள்ளது. சாகித் சந்திர சேக்கர் ஆசாத்து பறவைகள் சரணாலயம் என்று 2015 ஆம் ஆண்டில் மறுபெயரிடப்பட்டது.[2] நவாப்கஞ்சு பறவைகள் சரணாலயம் ஓர் ஏரியும் அதை சுற்றியுள்ள இயற்கைச் சூழலும் கொண்டதாகும். வட இந்தியாவில் காணப்படும் பல ஈரநிலங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த சரணாலயம், பெரும்பாலும் விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயம் (அல்லது முன்னாள் சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம்) நாடுகளிலிருந்து வரும் 250 வகையான புலம்பெயர்ந்த பறவைகளுக்கு பாதுகாப்பை வழங்குகிறது. ஆனால் 1990 ஆம் ஆண்டுகளில் இருந்து இந்த எண்ணிக்கை குறைந்து வருகிறது. பெரும்பாலானவை இமாச்சலப் பிரதேசம் மற்றும் இராசத்தானின் புதிய பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளன. இந்த சரணாலயத்தில் ஒரு மான் பூங்கா, கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் படகுகள் உள்ளன.

பறவைகள்

[தொகு]

நவாப்கஞ்சு பறவைகள் சரணாலயத்தில் தாயகப் பறவைகளும் புலம்பெயர்ந்த பறவைகள் கலவையாக உள்ளன. குளிர்காலத்தில் திபெத்து, சீனா, ஐரோப்பா மற்றும் சைபீரியாவிலிருந்து இமயமலை முழுவதும் பறவைகள் இடம்பெயர்கின்றன. இந்தப் பறவைகளில் சில 5000 கி.மீ.தொலைவுக்கும் மேல் 8500 மீட்டர் உயரத்திற்கு மேல் பறந்து இங்கு வருகின்றன. சாம்பல் நிற வாத்து, ஊசிவால் வாத்து, குள்ளத்தாரா, செங்களியன், கருவால் வாத்து, காட்டு வாத்து, நாமக்கோழி போன்றவை பருவத்தில் இடம்பெயரும் முக்கிய பறவைகளில் சிலவாகும். சாரசு கொக்கு, மயில், இந்திய வெள்ளை அரிவாள் மூக்கன், சிறு முக்குளிப்பான், சிறிய சீழ்க்கைச்சிரவி, நத்தை குத்தி நாரை, வெண்கழுத்து நாரை, நீளவால் தாழைக்கோழி, கருப்புத் தாமரைக்கோழி, ஆலா, பிணந்தின்னிக் கழுகு, புறா, இரட்டைவால் குருவி, பனங்காடை, பஞ்சுருட்டான் (குடும்பம்) போன்றவை இங்குள்ள உள்ளூர் பறவைகளில் சிலவாகும்.

ஊர்வன

[தொகு]

இந்த சரணாலயத்தில் காணப்படும் முக்கிய ஊர்வன விலங்குகள் நாகப்பாம்பு, விரியன் பாம்பு, பங்கராசு, எலிப்பாம்பு மற்றும் நீர்ப்பாம்புகள் ஆகியனவாகும்.

மான் பூங்கா

[தொகு]

சரணாலயத்தின் அருகே மான்களுக்கான ஒரு சிறிய பூங்கா நிறுவப்பட்டுள்ளது. பூங்காவில் புள்ளி மான்கள் மற்றும் குரைக்கும் மான்கள் உள்ளன. இது சரணாலயத்தின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாகும்.

விருந்தோம்பல்

[தொகு]

சரணாலயத்திற்குள் படுக்கை வசதி மற்றும் தங்குமிட வசதியுடன் கூடிய விருந்தினர் மாளிகை, ஓர் உணவகம் மற்றும் குழந்தைகள் பூங்கா ஆகியவை உள்ளன.

படக் காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Nawabganj Bird Sanctuary". Ramsar Sites Information Service. Retrieved 3 February 2020.
  2. "Lucknow zoo, Nawabganj bird sanctuary to be renamed".

வெளி இணைப்புகள்

[தொகு]