உள்ளடக்கத்துக்குச் செல்

நவநீத் ஆதித்யா வைபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நவ்நீத் ஆதித்யா வைபா (Navneet Aditya Waiba) இவர் ஓர் இந்திய நேபாளி மொழி நாட்டுப்புற பாடகர் ஆவார். இவர் நேபாளி மொழி நாட்டுப்புற பாடகரான மறைந்த ஹிரா தேவி வைபாவின் மகள் ஆவார். ஹிரா தேவி வைபா நேபாளி நாட்டுப்புற பாடல்களின் முன்னோடி என்று புகழப்படுகிறார். [1]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

நவ்நீத் ஆதித்யா வைபா, ஹிரா தேவி வைபா (தாய்) மற்றும் ரத்தன் லால் ஆதித்யா (தந்தை) ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங்கில் உள்ள குர்சேவங் என்ற மலை நகரத்தில் வளர்ந்தார். வைபா தனது தாய் மற்றும் தாத்தா சிறீ சிங் மன் வைபாவின் காரணமாக ஒரு இசை சூழலில் வளர்ந்தார். இவர் தனது தாயின் இசை வழிகாட்டியாகவும், அவரிடம் பயிற்சி பெற்றவராகவும் இருக்கிறார். [2]

கல்வி மற்றும் தொழில்

[தொகு]

நவ்நீத் ஆதித்யா வைபா இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் வட வங்காள பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். [3] [4] இவர் ஒரு முன்னாள் மூத்த விமான உதவியாளர். மேலும், ஆங்காங்கின் கத்தே பசிபிக் விமான நிறுவனத்தில் பணியாற்றினார். [5]

இசை வாழ்க்கை

[தொகு]

அணி

[தொகு]

காத்மாண்டுவிலிருந்து குட்டும்பா இசைக்குழு பாடல்களுக்கு இசையை வழங்கும் அதே வேளையில் இவரது சகோதரர் சத்ய வைபா இசை நிகழ்ச்சிகளையும் தயாரித்து நிர்வகிக்கிறார். [6] [7] [1] [2]

இசைப் பயணம்

[தொகு]

2011 ஆம் ஆண்டில் இவரது தாயார் ஹிரா தேவி வைபாவின் மறைவுக்குப் பிறகு, குடும்பத்தின் இசை மரபுகளை உயிரோடு வைத்திருக்க நவ்நீத் ஆதித்யா வைபா பாடத் தொடங்கினார். இவரது சகோதரர் சத்ய ஆதித்யா வைபா மற்றும் நவ்நீத் ஆகியோர் நேபாள நாட்டுப்புற இசையை புதுப்பிக்கவும், பாதுகாக்கவும், பிரபலப்படுத்தவும் ஒரு குழுவாக பணியாற்றுகிறார்கள். வைபா பெரும்பாலும் நேபாளி சமுதாயத்தில் பெண்கள் பிரச்சினைகள் மற்றும் சிரமங்களைப் பற்றி பாடுகிறார். [2]

இவர்கள் இருவரும் ஹிரா தேவி வைபாவின் பாடல்களை மீண்டும் ஒழுங்கமைத்து மீண்டும் பதிவுசெய்தனர். 2015 ஆம் ஆண்டில் இவர்கள் ஹிரா தேவி வைபாவின் மிகச் சிறந்த மற்றும் பிரபலமான பாடல்களைத் தேர்ந்தெடுத்தனர். இவர்கள் இந்த இசைத் தொகுப்புக்கு ' அம லாய் சிரத்தாஞ்சலி - தாயாருக்கு அஞ்சலி ' என்று பெயரிட்டு, அதை 2017 நவம்பர் 3, அன்று நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள படான் அருங்காட்சியகத்தில் ஒரு வரலாற்று நிகழ்ச்சியாக வெளியிட்டனர். [8]

"நாங்கள் சேர்ந்த வேர்களுக்குச் செல்ல இளைய தலைமுறையினரை ஊக்குவிக்க விரும்புகிறேன். பாடல்கள் அந்த நினைவுகளை மீண்டும் கொண்டு வரும் என்று நான் நினைக்கிறேன். " -நவ்நீத் ஆதித்யா வைபா [2]

ஹிரா தேவி வைபா

[தொகு]

இவரது தயார் ஹிரா தேவி வைபா என்பவர் இந்திய மாநிலமான, மேற்கு வங்காளத்தின், டார்ஜிலிங்கைச் சேர்ந்த ஒரு இந்திய நாட்டுப்புற பாடகர் ஆவார். மேலும் இவர் நேபாளி நாட்டுப்புற பாடல்களின் முன்னோடி என்று புகழப்படுகிறார். இவரது பாடலான 'சூரா தா ஹோய்னா அஸ்துரா' ( நேபாளி : चुरा त होइन अस्तुरा) என்பது இதுவரை பதிவு செய்யப்பட்ட முதல் தமாங் செலோ பாடல் என்று கூறப்படுகிறது. கொல்கத்தாவின் எச்.எம்.வி இசை வெளியீட்டு நிறுவனத்தால் இவரது பாடல்கள் (1974 மற்றும் 1978 இல்) வெளியிடப்பட்டன. இவ்வாறு பாடல்கள் வெளியிடப்பட்ட ஒரே நேபாள நாட்டுப்புற பாடகர் ஹிரா தேவி வைபா ஆவார். [9] அனைத்திந்திய வானொலியின் ஒரே 'அ' தர நேபாளி நாட்டுப்புற பாடகி இவர் ஆவார்.

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Daughter revives Mother's songs". The Telegraph. 26 January 2017. Archived from the original on 2 February 2017.
  2. 2.0 2.1 2.2 2.3 "Songs of Tribute". Archived from the original on 2017-12-12.
  3. Author. "आमाका गीतलाई पुनर्जन्म दिँदै" இம் மூலத்தில் இருந்து 2018-03-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180312083621/http://archive.annapurnapost.com/News.aspx/story/45579?_REQUEST=News.aspx%2Fstory%2F45579. 
  4. "हीरादेवीलाई सम्झाउँदै" இம் மூலத்தில் இருந்து 2017-06-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170620121952/http://saptahik.ekantipur.com/news/2017-01-23/20170122113812.html. 
  5. "हीरादेवीलाई सम्झाउँदै" (in ne) இம் மூலத்தில் இருந்து 2017-06-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170620121952/http://saptahik.ekantipur.com/news/2017-01-23/20170122113812.html. 
  6. "आमाका गीतलाई पुनर्जन्म दिँदै" இம் மூலத்தில் இருந்து 2018-03-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180312083621/http://archive.annapurnapost.com/News.aspx/story/45579?_REQUEST=News.aspx%2Fstory%2F45579. 
  7. "हीरादेवीलाई सम्झाउँदै" (in ne) இம் மூலத்தில் இருந்து 2017-06-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170620121952/http://saptahik.ekantipur.com/news/2017-01-23/20170122113812.html. 
  8. "Tribute to a Mother - Namsadhim". Archived from the original on 2018-02-23.
  9. "चुरा त होइन अस्तुरा - पहिलो तामाङ सेलो गीत ? - Tamang Online" (in en-US). Tamang Online. 2016-12-07 இம் மூலத்தில் இருந்து 4 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180304212229/http://www.tamangonline.com/news/13540. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவநீத்_ஆதித்யா_வைபா&oldid=3708734" இலிருந்து மீள்விக்கப்பட்டது