நவஜீவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நவஜீவனம்
இயக்கம்கே. பி. நாகபூசனம்
தயாரிப்புகே. பி. நாகபூசனம்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பிலிம் கம்பனி
இசைஎஸ். வி. வெங்கட்ராமன்
நடிப்புவி. நாகையா
ஸ்ரீராம்
எல். நாராயணராவ்
டி. ஆர். ராமச்சந்திரன்
பி. கண்ணாம்பா
டி. ஏ. ஜெயலட்சுமி
எஸ். வரலட்சுமி
துளசி
வெளியீடுமே 28, 1949
நீளம்15494 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நவஜீவனம்1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பி. நாகபூசனம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. நாகையா, ஸ்ரீராம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். முதன்முறையாகத் திரைப்படங்களுக்கான விருதுகளை வழங்க சென்னை மாகாண அரசு முடிவு செய்தபோது 1949 இல் சிறந்த திரைப்படமாக நவஜீவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது.[1]

கதை[தொகு]

எளிய தொழிலாளி நாகையாவும். அவருடைய மனைவி கண்ணாம்பாவும், பெற்றோரை இழந்த தன் தம்பி ஸ்ரீராமைச் சிறுவனாக இருக்கும்போதிருந்து வளர்க்கிறார்கள். வளர்ந்து கல்லூரிக்கு செல்லும் ஸ்ரீராம் உடன் பயிலும் மாணவி வரலட்மியைக் காதலிக்கிறார்.

வரலட்சுமி மில் முதலாளியின் மகள். பணக்கார சம்பந்தம் நமக்கு வேண்டாம் என்று அண்ணனும் அண்ணியும் ஸ்ரீராமை எச்சரிக்கிறார்கள். ஆனால், அவர்களின் சொல் கேளாமல் வரலட்சுமியைத் திருமணம் செய்து கொள்ள்கிறார். மாமனாரின் மரணத்துக்குப் பின் ஸ்ரீராம் முதலாளி ஆகிறார்.

அண்ணன், அண்ணியைத் தன்னுடன் வற்புறுத்தித் தங்கவைத்துக்கொள்ளும் ஸ்ரீராம், தன் பழைய வாழ்க்கையை மறந்து ஆடம்பரத்தில் திளைக்கிறார். மனைவியைக் கடிந்துகொள்ளும் அண்ணியை ஸ்ரீராம் அடித்துவிட, அண்ணனும் அண்ணியும் வீட்டைவிட்டு வெளியேறுகின்றனர். பிறகு ஸ்ரீராம் மனம் திருந்துகிறார். பிரிந்த குடும்பம் மீண்டும் இணைகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. பிரதீப் மாதவன் (2017 அக்டோபர் 6). "குறைவான படங்கள், நிறைவான நடிப்பு". கட்டுரை. தி இந்து தமிழ். 6 அக்டோபர் 2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)"https://ta.wikipedia.org/w/index.php?title=நவஜீவனம்&oldid=2705769" இருந்து மீள்விக்கப்பட்டது