நவகானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவகானி
Nawakhani
வகைபிராந்திய திருவிழா
முக்கியத்துவம்அறுவடைத் திருவிழா
அனுசரிப்புகள்சார்க்கண்டு, சத்தீசுகர், ஒடிசா
நாள்செபட்ம்பர், அக்டோபர்
நிகழ்வுவருடாந்திர பண்டிகை
தொடர்புடையனநுவாகானி, நபன்னா, நாவாய்

நவகானி (Nawakhani) என்பது சார்க்கண்ட்டு, சத்தீசுகர் மற்றும் ஒடிசா மாநிலங்களில் நடைபெற்றும் அறுவடைத் திருவிழா ஆகும். இப்பண்டிகையில் மக்கள் அறுவடைக்குப் பின் புதிய அரிசியில் தயாரித்த உணவினை உண்பார்கள்.[1]

சொற்பிறப்பியல்[தொகு]

நவகானி என்றால் புதிதாக உண்பது என்று பொருள்படும். நவா என்றால் புதியது மற்றும் கானி என்றால் சாப்பிடுதல் என்பது பொருள். இது அறுவடைக்குப் பின் புதிய தானியங்களை உண்பதைக் குறிக்கிறது.[2]

கொண்டாட்டம்[தொகு]

இது சார்கண்டு, சத்தீசுகர் மற்றும் ஒடிசாவின் சோட்டா நாக்பூர் மேட்டுநிலப் பகுதியின் அறுவடை திருவிழா ஆகும். மக்கள் விரதம் மேற்கொண்டு சூரஜ் (சூரியன்) மற்றும் முன்னோர்களுக்கு புதிய தானியங்களை வழங்குவதன் மூலம் வணங்குகிறார்கள். இப்பண்டிகை வீட்டின் முற்றத்தில் கொண்டாடப்படுகிறது. குடும்பத் தலைவர் சூரியனுக்கும் முன்னோர்களுக்கும் விலங்குகளை (குறிப்பாகக் கோழி) பலி கொடுப்பார். இதன் பின்னர் சமைத்த இறைச்சி மற்றும் தபன் எனப்படும் புளிக்கவைக்கப்பட்ட அரிசி பானங்களை குடும்ப உறுப்பினர்களிடையே வழங்குவார். இத்திருவிழாவில், கோடாதான் எனப்படும் சமவெளியில் விளையும் புதிய அரிசியிலிருந்து ரொட்டி, சுடாவை மக்கள் தயார் செய்கிறார்கள். இது அறுவடைக்குப் பிறகு புதிய தானியங்களை உணவாக உண்பது குறித்துக் கொண்டாடப்படுகிறது.[1][3]

இது சார்க்கண்டின் சதான் மக்களாலும் குருக் மக்களாலும் கொண்டாடப்படுகிறது.[4][5]

இந்தியாவின் பிற பகுதிகளில் கொண்டாட்டம்[தொகு]

இந்த விழா சத்தீசுகரிலும் கொண்டாடப்படுகிறது. மேற்கு ஒடிசாவில் இப்பண்டிகை நுகாய் என்று அழைக்கப்படுகிறது.[6] மத்தியப் பிரதேசத்தில், இது நவாய் என்று பில் மக்களால் கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்கத்தில் புதிய தானிய உண்ணும் திருவிழா நபன்னா என்று அழைக்கப்படுகிறது.[7]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நவகானி&oldid=3649347" இருந்து மீள்விக்கப்பட்டது