உள்ளடக்கத்துக்குச் செல்

நளினி பாக்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நளினிகாந்த பாக்சி
নলিনীকান্ত বাগচী
தாய்மொழியில் பெயர்নলিনীকান্ত বাগচী
பிறப்பு1897 (1897)
முர்சிதாபாத்
இறப்புசூன் 16, 1918(1918-06-16) (அகவை Expression error: Unrecognized punctuation character "–".–20–21)
மிட்போர்ட் மருத்துவமனை, டாக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்கிருசிணாத் கல்லூரி, பாங்கிபூர் கல்லூரி, பாகல்பூர் கல்லூரி
அரசியல் கட்சிசூகன்டர்
அரசியல் இயக்கம்இந்திய சுதந்திர இயக்கம்
தந்தைபுவன்மோகன் பாக்சி

நளினிகாந்த பாக்சி(Nalinikanta Bagchi) இந்திய நாட்டின் சுதந்திர இயக்கத்தில் பங்கேற்ற ஒரு புரட்சியாளர் ஆவார். 1896 ஆம் ஆண்டு பிறந்தார். பாக்சியின் பூர்வீக வீடு நதியா மாவட்டத்தில் உள்ள சிகர்பூரில் உள்ளது.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

பாக்சி இந்திய நாட்டின் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள முர்சிதாபாத் மாவட்டத்தில் உள்ள காஞ்சனதலாவில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் புவன்மோகன் பாக்சி ஆகும். பகிராம்பூரில் உள்ள கிருட்டிணநாத் கல்லூரியில் படித்தார். பின்னர், பாங்கிபூர் கல்லூரி மற்றும் பாட்னாவில் உள்ள பாகல்பூர் கல்லூரியிலும் படித்தார். பெர்கம்பூரில் உள்ள கிருட்டிணநாத் கல்லூரியில் படிக்கும்போது, சூகந்தரின் புரட்சிகரக் கட்சியில் சேர்ந்தார். பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக பாட்னாவில் உள்ள பாங்கிபூர் கல்லூரி மற்றும் பாகல்பூர் கல்லூரிக்குச் சென்றார். தனாபூர் சிப்பாய்களிடையே சுந்திரப் போராட்டத்தின் கருத்துக்களைத் தூண்ட முயன்றார்.


கட்சியின் வழிகாட்டுதலின் கீழ் அசாம் மாநிலத்தில் குவகாத்தி மாவட்டத்தில் உள்ள அத்கானில் தஞ்சம் புகுந்தார். பிறகு 1918 ஆம் ஆண்டு சனவரி மாதம் 12 ஆம் தேதியன்று, காவல்துறையினருடன் ஆயுதப் போருக்குப் பிறகு, இவரும் சதீசு சந்திர பக்ரசியும் போலீசு வளையத்தைக் கடந்து காட்டிற்குச் சென்றனர். நவகிரக மலையின் மீது மற்றொரு தாக்குதலையும் இவர் முறியடித்தார். ஏழு நாட்கள் பட்டினி மற்றும் தூக்கமின்மைக்கு பிறகு, ஒரு இசுலாமியன் என்ற போர்வையில், நடந்து லும்டிங் நிலையத்தை அடைந்தார். பின்னர் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டு கல்கத்தா வந்தார். இவரது தோழர்களில் ஒருவர், இவர் தரையில் கிடப்பதைக் கண்டு கவனித்துக் கொண்டார்.  

சந்திப்பும் மரணமும்

[தொகு]

பின்னர் டாக்கா சென்றார். ஆனால் 1917 ஆம் ஆண்டு சூன் மாதம் 15 ஆம் தேதியன்று டாக்காவின் கல்டாபசார் என்னும் இடத்தில் மீண்டும் காவல்துறையினரால் சூழப்பட்டார். நளினிக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஆயுதப் போர் தொடங்கியது. துப்பாக்கிச் சண்டையில் பலத்த காயமடைந்தார். பின்னர் கைது செய்யப்பட்டார். இவருடன் இருந்த இவரது தோழர் தரிணிப்பிரசன்னா மசூம்தார் சுட்டுக் கொல்லப்பட்டார். அதே நாளில் டாக்காவின் மிட்ஃபோர்ட் மருத்துவமனையில் 1918 ஆம் ஆண்டு சூன் மாதம் 16 ஆம் தேதியன்று இறந்தார்.

இறப்பதற்கு முன்பு காவல்துறை சித்திரவதை செய்யப்பட்ட போதிலும், தனது பெயரை கூட இவர் குறிப்பிடவில்லை. இந்த சண்டையில் ஒரு காவல்துறையினர் கொல்லப்பட்டார். மேலும் பலர் காயமடைந்தனர். இவரது புரவலர் சைதன்யா டே (அசுவின் குமார் டே) பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.[1][2] முர்சிதாபாத்தில் உள்ள பெர்ஹாம்பூர் நகரில் ஒரு சாலையும், பெர்காம்போர்-சலங்கி மாநில சாலையின் மீது ஒரு பாலமும் இவரது நினைவாக பெயரிடப்பட்டுள்ளன.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. জেলে ত্রিশ বছর [Thirty years in prison] (in Bengali). Calcutta: Alpha-Beta Publications. 1963. கணினி நூலகம் 7969453.
  2. Saṃsada Bāṅāli caritābhidhāna. Prathama khaṇḍa : prāẏa cāra sahasrādhika jībanī-saṃbalita ākara grantha (in Bengali). Añjali Basu, S. C. Sen Gupta, অঞ্জলি বসু, এস. সি., ১৯০৩-১৯৯৮ সেন গুপ্ত (Saṃśodhita paṅcama saṃskaraṇa Volume I ed.). Kalakātā (published November 2013). 2010. p. 346. ISBN 978-81-7955-135-6. கணினி நூலகம் 972910133.{{cite book}}: CS1 maint: location missing publisher (link) CS1 maint: others (link)
  3. The Roll of Honour Anecdotes of Indian Martyrs. Calcutta: Vidhya Bharathi. 1960. கணினி நூலகம் 53070870.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நளினி_பாக்சி&oldid=4173298" இலிருந்து மீள்விக்கப்பட்டது