உள்ளடக்கத்துக்குச் செல்

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
Nalla Perai Vaanga Vendum Pillaigale
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்பிரசாத் இராமர்
தயாரிப்புபிரதீப் குமார்
கதைபிரசாத் இராமர்
இசைபிரதீப் குமார்
நடிப்பு
ஒளிப்பதிவுஉதய் தங்கவேல்
படத்தொகுப்புஇராதாகிருஷ்ணன் தனபால்
கலையகம்பூர்வா புரொடக்சன்சு
விநியோகம்உத்ரா புரொடக்சன்சு
வெளியீடு8 மார்ச்சு 2024 (2024-03-08)[சான்று தேவை]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே (Nalla Perai Vaanga Vendum Pillaigale) என்பது 2024 இல் பிரசாத் இராமர் எழுத்து இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இப்படத்தில் செந்தூர் பாண்டியன், பூர்ணிமா ரவி, பிரீத்தி கரண், சுரேஷ் மதியழகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1] இப்படத்தை பிரதீப் குமார் தயாரித்தார்.[2]

நடிகர்கள்

[தொகு]
  • இரவிச்சந்திரனாக செந்தூர் பாண்டியன்
  • சோபியா பானுவாக பூர்ணிமா இரவி
  • அரசியாக பிரீத்தி கரண்
  • காந்தியாக சுரேசு மதியழகன்
  • சபீனா பானுவாக தமிழ்செல்வி

தயாரிப்பு

[தொகு]

இத்திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகள் 2018 இல் தொடங்கப்பட்டு, மதுரை,மயிலாடுதுறை போன்ற இடங்களில் 42 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.[3][4] இத்திரைப்படம் இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவிடமிருந்து "ஏ" சான்றிதழைப் பெற்றது.[5]

வரவேற்பு

[தொகு]

சினிமா எக்சுபிரசின் பி. ஜெயபுவனேசுவரி. 5 இற்கு 3 என்று மதிப்பிட்டு "எல்லாவற்றிற்கும் மேலாக, தலைப்பே" "ஒரு நல்ல பெயரைத் தேடுகிறது" என்று பொருள் தருவதாகவும் "படத்தின் குழு ஒன்று நல்ல முடிவைத் தருகிறது" என்றும் குறிப்பிட்டார்.[6] டைம்ஸ் நவ் மணிகண்டன் கே. ஆர். திரைப்படத்திற்கு 5இற்கு 2 + 1⁄2 என்று மதிப்பிட்டு "இயக்குநர் பிரசாத் இராமர் தனது கதையை நம்பியதாகத் தெரிகிறது, இது நாம் வாழும் காலத்துடன் ஒத்துப்போகிறது என்றும், அவரது உரையாடல்கள் எல்லாவற்றையும் விட பார்வையாளர்களை கவர்ந்திழுப்பதாக அவர் நம்புகிறார்" என்றும் குறிப்பிட்டார்.[7]2+12 சினிமா விகடனின் விமர்சகர் ஒருவர், "திரைப்படம் தொடங்கி, கதைக்குள் நேராக இழுக்கிறது, இது தலைப்பு அட்டையில் ஒரு வித்தியாசமான முயற்சியாகும். என்று எழுதினார்.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சாலை மார்க்க பயணத்தைப் பேசும் 'நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே..!'". Virakesari.lk (in ஆங்கிலம்). Archived from the original on 2024-02-19. பார்க்கப்பட்ட நாள் 2024-03-05.
  2. Dinamalar (2024-02-19). "புதுமுகங்கள் அறிமுகமாகும் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே | New faces will be introduced in Nalla perai vanga vendum pillaigale". தினமலர் - சினிமா. Archived from the original on 2024-03-02. பார்க்கப்பட்ட நாள் 2024-03-05.
  3. "Prasad Ramar's Nalla Perai Vanga Vendum Pillaigale To Explore Platonic Relationships". News18 (in ஆங்கிலம்). 2024-02-20. Archived from the original on 2024-02-21. பார்க்கப்பட்ட நாள் 2024-03-05.
  4. "Nalla Perai Vaanga Vendum Pillaigale - Official Trailer | Tamil Movie News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Archived from the original on 2024-03-09. பார்க்கப்பட்ட நாள் 2024-03-05.
  5. "இந்தப் படத்துக்கு 'A' சான்றிதழா ? - வியப்பை ஏற்படுத்திய சென்சார்!". News18 தமிழ். 2024-02-29. Archived from the original on 2024-02-29. பார்க்கப்பட்ட நாள் 2024-03-05.
  6. B, Jayabhuvaneshwari (2024-03-08). "Nalla Perai Vaanga Vendum Pillaigale Movie Review: A relatable, non-preachy exploration of modern relationships". Cinema Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-09.
  7. "Nalla Perai Vanga Vendum Pillaigale Review: Witty Dialogues Save The Day for This Film on Dating and Relationships". TimesNow (in ஆங்கிலம்). 2024-03-07. Archived from the original on 2024-03-08. பார்க்கப்பட்ட நாள் 2024-03-09.
  8. டீம், விகடன் (2024-03-08). "நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே விமர்சனம்: அடல்ட் காமெடி தான்; ஆனால், எதனால் கவனம் ஈர்க்கிறது?". ஆனந்த விகடன். Archived from the original on 2024-03-08. பார்க்கப்பட்ட நாள் 2024-03-09.

வெளி இணைப்புகள்

[தொகு]