நல்லூர் விசுவேசுவரசுவாமி கோயில்
தோற்றம்
நல்லூர் விசுவேசுவரசுவாமி கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 11°06′07″N 77°23′32″E / 11.1019°N 77.3923°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருப்பூர் மாவட்டம் |
அமைவிடம்: | நல்லூர், திருப்பூர் |
ஏற்றம்: | 338 m (1,109 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | விசுவேசுவரசுவாமி |
தாயார்: | விசாலாட்சி |
சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை |
வரலாறு | |
அமைத்தவர்: | சுந்தர பாண்டியன்[1] |
விசுவேசுவரசுவாமி கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் திருப்பூர் மாவட்டத்தின் நல்லூர் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 338 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள விசுவேசுவரசுவாமி கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 11°06′07″N 77°23′32″E / 11.1019°N 77.3923°E ஆகும்.
இக்கோயிலின் மூலவர் விசுவேசுவரசுவாமி மற்றும் தாயார் விசாலாட்சி ஆவர். இவர்களது சன்னதிகளுடன் பட்டி விநாயகர், சுப்பிரமணியர், நந்தீசுவரர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், கங்காதேவி மற்றும் சரபேசுவரர் ஆகியோர் சன்னதிகளும் இக்கோயிலில் அமையப் பெற்றுள்ளன. இக்கோயிலின் கும்பாபிசேகம் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் நாள் நடைபெற்றது.[2][3]
இக்கோயில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Visveswara Swami Temple : Visveswara Swami Visveswara Swami Temple Details". temple.dinamalar.com. Retrieved 2023-08-06.
- ↑ தினத்தந்தி (2023-02-01). "திருப்பூர் நல்லூரில் உள்ள விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வரசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தகர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்". www.dailythanthi.com. Retrieved 2023-08-06.
- ↑ மாலை மலர் (2023-01-24). "நல்லூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா29-ந்தேதி தொடங்குகிறது". www.maalaimalar.com. Retrieved 2023-08-06.
- ↑ "Arulmigu Visuveshwarasamy Visalakshi Amman Subramaniyasamy Temple, Nallur - 641606, Tiruppur District [TM010100].,periya koil,visweswarar". hrce.tn.gov.in. Retrieved 2023-08-06.