நல்லமாங்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நல்லமாங்குடி (Nallamangudi) என்னும் ஊர் தமிழ்நாட்டில், திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இந்த ஊர் நன்னிலத்தில் இருந்து 1.5 கி.மீ. தொலைவிலும், மாவட்டத் தலைநகரான திருவாரூரில் இருந்து 18 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்த கிராமம் 251.86 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது, ஊரின் மக்கள் தொகை 2011 மக்கள் கணக்கெடுப்பின்படி ஊரின் மக்கள் தொகை 258, இதில் ஆண்களின் எண்ணிக்கை 122, பெண்களின் எண்ணிக்கை 136 ஆகும். ஊரில் உள்ள வீடுகளின் எண்ணிக்கை 61 ஆகும்.[1]

இந்த ஊரில்தான் திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தர் பிறந்தார். அவரது சொந்தவீடு இந்த ஊரில்தான் இருந்தது. இந்நிலையில் அவரது குடும்பத்தினர் சென்னை சென்றுவிட்ட நிலையில், அவர்கள் வசித்த வீட்டை விற்றுவிட்ட நிலையில், அந்த வீடு இருந்த இடத்தில் தற்போது தனியார் பள்ளி இயங்கி வருகிறது. 2017 சூலை 9 அன்று பாலசந்தரின் 87 வது பிறந்த நாளையொட்டி, அந்த பள்ளி வளாகத்தில் பாலச்சந்தரின் சிலை திறந்து வைக்கப்பட்டது. [2]

வழிபாட்டுத் தலங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்லமாங்குடி&oldid=2363027" இருந்து மீள்விக்கப்பட்டது