நலியா தொடருந்து நிலையம்
நலியா தொடருந்து நிலையம் | |||||
|---|---|---|---|---|---|
| இந்திய இரயில்வே நிலையம் | |||||
| பொது தகவல்கள் | |||||
| அமைவிடம் | பர்ஜாவ் சாலை, நலியா, கட்ச் மாவட்டம், குசராத்து இந்தியா | ||||
| ஆள்கூறுகள் | 23°14′32″N 68°49′35″E / 23.242107°N 68.826368°E | ||||
| ஏற்றம் | 26 மீட்டர்கள் (85 அடி) | ||||
| உரிமம் | இந்திய இரயில்வே | ||||
| இயக்குபவர் | மேற்கு இரயில்வே | ||||
| தடங்கள் | காந்திதாம்–நலியா வழித்தடம் | ||||
| நடைமேடை | 1 | ||||
| இருப்புப் பாதைகள் | 2 | ||||
| இணைப்புக்கள் | ஆட்டோ நிறுத்தம் | ||||
| கட்டமைப்பு | |||||
| கட்டமைப்பு வகை | நிலையானது (தரைத்தளம்) | ||||
| தரிப்பிடம் | உள்ளது | ||||
| துவிச்சக்கர வண்டி வசதிகள் | உள்ளது | ||||
| மற்ற தகவல்கள் | |||||
| நிலை | செயல்படுகிறது | ||||
| நிலையக் குறியீடு | NLY | ||||
| மண்டலம்(கள்) | மேற்கு இரயில்வே | ||||
| கோட்டம்(கள்) | அகமதாபாது | ||||
| வரலாறு | |||||
| மின்சாரமயம் | ஆம் | ||||
| |||||
நலியா தொடருந்து நிலையம் (Naliya railway station), குசராத்து மாநிலத்தின் கச்சு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய தொடருந்து நிலையம் ஆகும். இதன் குறியீடு NLY . இது நலியா கன்டோன்மென்ட்டுக்குப் பிறகு 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளதுடன், நலியா கிராமத்திற்குச் சேவை செய்கிறது. இந்த நிலையத்தில் ஒரு நடைமேடை உள்ளது. இது இந்தியாவின் இறுதிநிலை மற்றும் மேற்கு எல்லையில் உள்ள தொடருந்து நிலையம் ஆகும்.
புஜ் நகருடன் இணைப்பதற்காக, இந்த நிலையத்தில் 1980-ஆம் ஆண்டில் ஒரு மீட்டர் கேஜ் ரயில் பாதை அமைக்கப்பட்டது. பின்னர், காந்திதாம்–புஜ் பிரிவு அகலப் பாதையாக மாற்றப்பட்டதால், 101.24 கி.மீ. நீளமுள்ள இந்தப் பாதை தனிமைப்படுத்தப்பட்டது. எனவே, இப்பாதை பின்னர் கைவிடப்பட்டது.சமீபத்தில், ஜூன் 2016-ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் அகலப் பாதையாக மாற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, இதனால் இது பொது, இராணுவ அல்லது சரக்கு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம். [1] [2] [3] [4] [5] 2018-ஆம் ஆண்டில், புஜ் மற்றும் தேசல்பூர் கிராமத்திற்கு இடையிலான (28 கி.மீ) இரயில் பாதைப்பகுதி பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. தேசல்பூர்–நலியா பகுதி (74 கி.மீ) மட்டும் அகலப்பாதை மாற்றப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் உள்ளது.
புஜ்-நலியா இரயில் பாதை, பாகித்தானுடனான எல்லை மற்றும் நலியா விமானப்படை நிலையத்திற்கு அருகாமையில் இருப்பதால், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. [6]
நலியாவிற்கு வடமேற்கே 25 கி.மீ. தொலைவில் உள்ள வயோர் கிராமம் வரை பாதையை நீட்டிப்பதற்கான ஒரு திட்டம் உள்ளது. [7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "NLY/Naliya". India Rail Info.
- ↑ "Suresh Prabhu lays foundation stone for 8 rail projects in Gujarat". dnaindia.com. Retrieved 2019-12-23.
- ↑ "Surge by 300 per cent in allocation for Gujarat railways in 2 years, says Suresh Prabhu | India News". The Indian Express. Retrieved 2019-12-23.
- ↑ "Rs 17,073 crore worth Railway projects in progress in state". The Indian Express. Retrieved 2019-12-23.
- ↑ "Bhuj–Naliya Broad Gauge rail line sanctioned". DeshGujarat. Retrieved 2019-12-23.
- ↑ "STRUCTURE OF RAILWAY ACCOUNTS" (PDF). Indian Railways.
- ↑ "Bhuj-Naliya Railway Track on Ahmedabad Division under final Testing Phase". RailNews.in.
