உள்ளடக்கத்துக்குச் செல்

நலியா கன்டோன்மென்ட் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நலியா கன்டோன்மென்ட் தொடருந்து நிலையம்
இந்திய இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்நலியா, கச்சு மாவட்டம், குசராத்து
இந்தியா
ஆள்கூறுகள்23°12′18″N 68°52′05″E / 23.205040°N 68.867983°E / 23.205040; 68.867983
ஏற்றம்37 மீட்டர்கள் (121 அடி)
உரிமம்இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே
இயக்குபவர்மேற்கு இரயில்வே
தடங்கள்காந்திதாம்–நலியா வழித்தடம்
நடைமேடை1
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்ஆட்டோ நிறுத்தம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைநிலையானது (தரைத்தளம்)
தரிப்பிடம்உள்ளது
துவிச்சக்கர வண்டி வசதிகள்உள்ளது
மற்ற தகவல்கள்
நிலைகிடைக்கும்
நிலையக் குறியீடுNLC
மண்டலம்(கள்) மேற்கு இரயில்வே
கோட்டம்(கள்) அகமதாபாது
வரலாறு
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
நலியா கன்டோன்மென்ட் தொடருந்து நிலையம் is located in குசராத்து
நலியா கன்டோன்மென்ட் தொடருந்து நிலையம்
நலியா கன்டோன்மென்ட் தொடருந்து நிலையம்
குசராத்து இல் அமைவிடம்

நலியா கன்டோன்மென்ட் தொடருந்து நிலையம் (Naliya Cantonment railway station) , குசராத்தின் கச்சு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய தொடருந்து நிலையம் ஆகும். இதன் குறியீடு NLC . இது நலியா கிராமத்திலிருந்து தெற்கே 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நலியா விமானப்படை நிலையத்திற்குச் சேவை செய்கிறது. இந்த நிலையத்தில் ஒரு நடைமேடை உள்ளது. இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ள கடைசி நிலையத்திற்கு முந்தைய நிலையம் இதுவாகும். கடைசி நிலையம் நலியா தொடருந்து நிலையம் ஆகும்.

ஏப்பிரல் 2016-ஆம் ஆண்டில், நலியாவிற்கு அருகே கைவிடப்பட்ட மீட்டர்கேஜ் இரயில் பாதை.

புஜ் நகருடன் இணைப்பதற்காக, நலியா கன்டோன்மென்ட்டில் 1980-ஆம் ஆண்டில் ஒரு மீட்டர் கேஜ் இரயில் பாதை அமைக்கப்பட்டது. பின்னர், காந்திதாம்–புஜ் பகுதி அகல இரயில் பாதையாக மாற்றப்பட்டதால், இந்த 101.24 கி.மீ நீளமுள்ள இந்தப் பாதை தனிமைப்படுத்தப்பட்டது.எனவே, இப்பாதை பின்னர் கைவிடப்பட்டது. சமீபத்தில், ஜூன் 2016-ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் அகலப் பாதையாக மாற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இது பொது, இராணுவ அல்லது சரக்கு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம். [1] [2] [3] [4] [5] 2018 -ஆம் ஆண்டில் புஜ் மற்றும் தேசல்பூர் கிராமத்திற்கு இடையிலான (28 கி.மீ) இரயில் பாதைப்பகுதி பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. தேசல்பூர்–நலியா பகுதி (74 கி.மீ) மட்டும் அகலப்பாதை மாற்றப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் உள்ளது.

புஜ் - நலியா இரயில் பாதை, பாகித்தான் எல்லை மற்றும் நலியா விமானப்படை நிலையத்திற்கு அருகாமையில் இருப்பதால், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. [6]

நலியாவிற்கு வடமேற்கே 25 கி.மீ. தொலைவில் உள்ள வயோர் கிராமம் வரை பாதையை நீட்டிப்பதற்கான ஒரு திட்டம் உள்ளது. [7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "NLY/Naliya". India Rail Info.
  2. "Suresh Prabhu lays foundation stone for 8 rail projects in Gujarat". DNA India. Retrieved 2019-12-23.
  3. "Surge by 300 per cent in allocation for Gujarat railways in 2 years, says Suresh Prabhu". The Indian Express. Retrieved 2019-12-23.
  4. "Rs 17,073 crore worth Railway projects in progress in state | Cities News". The Indian Express. Retrieved 2019-12-23.
  5. "Bhuj–Naliya broad gauge rail line sanctioned". DeshGujarat. Retrieved 2019-12-23.
  6. "STRUCTURE OF RAILWAY ACCOUNTS" (PDF). Indian Railways.
  7. "Bhuj–Naliya Railway Track on Ahmedabad Division under final Testing Phase". RailNews.in.