நலமாத பத்மாவதி ரெட்டி
நலமாத பத்மாவதி ரெட்டி | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2 ஜுன் 2014-11 டிசம்பர் 2018 | |
தொகுதி | கோதாட் சட்டமன்றத் தொகுதி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | கட்வால், தெலுங்கானா |
வாழ்க்கை துணைவர்(கள்) | நளமதா உத்தம் குமார் ரெட்டி |
நலமாத பத்மாவதி ரெட்டி (Nalamada Padmavathi Reddy) தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கோதாட் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர்.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]
இவர் கட்டிடக்கலை பட்டதாரி ஆவார். மேலும் இவர், ஐதராபாத்தின் இரிஷி வேலி பள்ளியிலும், ஜவகர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திலும் மாணவியாகவும் இருந்தார். சில ஆண்டுகள் பெங்களூரில் உள்அலங்கார வடிவமைப்பையும் பயின்றார்.[1][2]
அரசியல் வாழ்க்கை[தொகு]
பத்மாவதி, கோதாட் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட முதல் பெண் போட்டியாளராக இருந்தார்.[3] 2014 ஆம் ஆண்டு தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலின் போது தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரை 13,374 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [4]
தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]
தெலுங்கானா காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவரும் முன்னாள் அமைச்சருமான நளமதா உத்தம்குமார் ரெட்டியினை இவர் திருமணம் செய்து கொண்டார்.[5]