நற்றாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அகத்திணை மாந்தர்களில் தாய் என இருவரைக் குறிப்பிடுவது வழக்கம். ஒருவர் பெற்றடுத்த தாய். இவரை அக இலக்கியங்கள் நற்றாய் எனக் குறிப்பிடுகின்றன. பொதுவாகத் தாய் எனக் குறிப்பிட்டால் அது பெற்ற தாயையும், சிறப்பு வகையால் தலைவியை வளர்த்த செவிலியையும் குறிக்கும். [1]

நற்றாய்

இவரை யாய் (என் தாய்), ஞாய் (உன் தாய்) என்று பாகுபடுத்தி அழைப்பது வழக்கம். குறுந்தொகை 40 அக வாழ்க்கையில் பெற்ற தாயின் பங்கு பற்றித் தொல்காப்பியம் குறிக்கிடுகிறது.

  • தலைவன் தலைவியைக் கொண்டுதலைக்கழிந்தபோது நற்றாய் புலம்புவாள். [2]
  • களவு வாழ்க்கை பற்றி நற்றாய் தன் மகளோடும், மகளின் கிழவோனோடும் நேருக்கு நேர் பேசும் வழக்கம் இல்லை. [3]

அடிக்குறிப்பு[தொகு]

  1. ஆய் பெருஞ் சிறப்பின் அரு மறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும். தொல்காப்பியம், களவியல் 34
  2. தொல்காப்பியம் அகத்திணையியல் 39
  3. கிழவன் தன்னொடும் கிழத்தி தன்னொடும் நற்றாய் கூறல் முற்றத் தோன்றாது. – தொல்காப்பியம் செய்யுளியல் 184

காண்க[தொகு]

தொகு அகத்திணை மாந்தர்
அகத்திணைத் தலைவர்கள் தலைவன் | தலைவி | காமக்கிழத்தியர்
அகத்திணை வாயில்கள் தோழி | நற்றாய் | செவிலி | பார்ப்பான் | பாங்கன் | பாணன் | பாட்டி | இளையர் | விருந்தினர் | கூத்தர் | விறலியர் | அறிவர் | கண்டோர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நற்றாய்&oldid=1244746" இருந்து மீள்விக்கப்பட்டது