நற்பிட்டிமுனை
நற்பிட்டிமுனை | |
|---|---|
கிராமம் | |
| நாடு | இலங்கை |
| மாகாணம் | கிழக்கு |
| மாவட்டம் | அம்பாறை |
| பிசெ பிரிவு | கல்முனை |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்) |
| • கோடை (பசேநே) | ஒசநே+6 (Summer time) |
நற்பிட்டிமுனை (Natpiddimunai) இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு கிராமம் ஆகும். இங்கு தமிழ், முசுலிம் மக்கள் இணைந்து வாழ்கின்றனர்.
இவ்வூர் எட்டு கிராம சேவையாளர் பிரிவுகளில் சுமார் 8000 இக்கும் மேற்பட்ட மக்கள் தொகையையும் கொண்டிருக்கின்றது.[1][2].
பெயர் வழக்கு
[தொகு]இக் கிராமத்தைக் குறிக்கப் பல்வேறுபட்ட பெயர்கள் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பது முக்கிய அம்சமாகும். பட்டிப்பளை ஆற்றின் கிளை மற்றும் வயல்காணிகளை ஊடறுத்து “நா” வடிவில் நீண்டிருக்கும் முனை என்பதாக “நாப்புட்டிமுனை” என்ற பெயர் வழங்கப்பட்டது எனவும் அதுவே “நாப்புட்டி” என்று வழங்கப்பட்டு வந்துள்ளதாகவும்[3],[4]வரலாற்று ரீதியிலும் நாட்டார் வழக்கிலும் உள்ள கதைகளின் அடிப்படையில் ஆரம்ப காலத்தில் இவ்வூர் 'நாற்படைமுனை' என அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.[5] ஆங்கிலேயர் காலத்தில் நாய்ப்பட்டிமுனை என இது அரச ஆவணங்களில் பதிவாகியிருந்தது.[6] பல்வேறு திரிபுகளின் ஊடாக இவ்வூர் அழைக்கப்பட்ட போதிலும் நற்பிட்டிமுனை என்பதே தற்காலத்தில் பயன்படுத்தப்படுகின்றது.[7]
வணக்கத் தலங்கள்
[தொகு]- நற்பிட்டிமுனை அம்பலத்தடிப் பிள்ளையார் ஆலயம்
- நற்பிட்டிமுனை சிறி கணேசராலயம்
- நற்பிட்டிமுனை ஜும்மாப் பள்ளிவாயல்
- நற்பிட்டிமுனை கந்தசுவாமி கோயில்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kalmunai Muslim Division - Kalmunai". Kalmunai Muslim Division - Kalmunai.
- ↑ "Kalmunai Tamil Division - Kalmunai". Kalmunai Tamil Division - Kalmunai.
- ↑ கமலாம்பிகை லோகிதராசா,"பத்தும் பதியமும்", 2012
- ↑ நடராசா எவ். எக்ஸ் சி, "மட்டக்களப்பு மான்மியம்", 1998
- ↑ அரசரெத்தினம் எஸ், “கல்முனையில் தமிழர் ..”, .2022
- ↑ ""நாய்பட்டிமுனை" உப அஞ்சல் அலுவலக பெயர் "நற்பிட்டிமுனை" உப அஞ்சல் அலுவலகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது". Battimedia.lk.
- ↑ சஞ்சீவி சிவகுமார்,"நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள்", 2024