நறுவி மருத்துவமனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நறுவி மருத்துவமனை
வகைகூட்டு நிறுவனம்
வர்த்தகப் பெயர்Naruvi Hospitals
முதன்மை நபர்கள்ஜி. வி. சம்பத் (தலைவர்)
தொழில்துறைநலம் பேணல்
உற்பத்திகள்மருத்துவமனை, மருந்தகம்,நோய் கண்டறியும் மையம்
பணியாளர்1000 (2023, மார்ச்)

நறுவி மருத்துவமனை என்பது தமிழ்நாட்டின் வேலூரில் செயல்படும் ஒரு பல்நோக்கு மருத்துவமனை ஆகும்.[1]   

விரிவான தகவல்[தொகு]

ஹென்றி ஃபோர்ட் 1915 ஆம் ஆண்டு அமெரிக்காவில் துவக்கிய ஹென்றி போர்டு மருத்துவ தொழில்நுட்ப நிறுவனத்ததின் கூட்டு முயற்சியுடன் வேலூர் நறுவி மருத்துவமனை துவக்கப்பட்டது.[2] இந்த மருத்துவமனை 14 தளங்களுடன், ஐந்து இலட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இது 500 படுக்கைகளை வசதி கொண்டுள்ளது. இங்கு 150 மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுனர்கள், ஏறக்குறைய 300 செவிலியர்கள், பல துணை மருத்துவப் பணியாளர்கள் என மொத்தம் சுமார் 1000 பேர் பணிபுரிகின்றனர்.

சிறப்பு மருத்தவங்கள்[தொகு]

மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் மருத்துவம், உட்சுரப்பியலுக்கான மருத்துவம், குழந்தைகளுக்கான தீவிர மருத்துவம், எலும்பு நோயியல் மற்றும் அறுவை சிகிச்சை, நரம்பியல் நோய் மற்றும் அறுவை சிகிச்சை, நுரையீரல் நோய் மற்றும் இடையீட்டு நுரையீரலியல், கல்லீரல் நோய், கல்லீரல் அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம், சிறுநீரகவியல் மருத்துவம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, இரையகக் குடலியவியல் நோய்கள் மற்றும் அறுவை சிகிச்சை, ஊடுகதிரியல், மூட்டு வலி சிகிச்சை, பல் மருத்துவம், தோல் மருத்துவம், கண் மருதுவம், மாற்று மருத்துவம், முதியோர் சிறப்பு சிகிச்சை போன்ற சிறப்பு மருத்துவ வசதிகள் இங்கு உள்ளன. 24 மணிநேர விபத்து மற்றும் அவசர சிகிச்சை, நெஞ்சுவலி, பக்கவாதம் உள்ளிடவைகளுக்கான அவசர சிகிச்சை போன்ற வசதிகள் இங்கு உள்ளன.

எம்.ஆர்.ஐ ஸ்கேன், சி.டி. ஸ்கேன், உள்நோக்கியியல் பிரிவு, ரோபட் மூலமாக மூளை அறிவை சிகிச்சை, வலிப்பு நோயின் தன்மையைக் கண்காணித்து சிகிச்சை அளிக்கும் வசதி, எலும்பு ஸ்திரத் தன்மையை சோதிக்கும் டெக்சா ஸ்கேன் வசதி, மார்பக புற்றுநோயைக் கண்டறியும் மோனோகிராம் கருவி பரிசோதனை வசதிகள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "வேலூரில் அதி நவீன வசதிகளுடன் 'நறுவீ' மருத்துவமனை திறப்பு: காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்". Hindu Tamil Thisai. 2021-02-06. பார்க்கப்பட்ட நாள் 2023-05-22.
  2. "நறுவீ மருத்துவமனையில் இருவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2023-05-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நறுவி_மருத்துவமனை&oldid=3721932" இலிருந்து மீள்விக்கப்பட்டது