நர நாராயணர் கூடுகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நர நாராயண் கூடுகை, [1] அல்லது பக்கஞ்சோர் கூடுகை என்றும் அழைக்கப்படும் இந்த விழா சத்தீஸ்கரில் உள்ள காங்கர் மாவட்டத்தில் உள்ள பரல்கோட்டில் (தற்போதைய பக்கஞ்சோர்) ஆண்டுதோறும்  நடந்து வரும் ஒரு கூடுகையாகும். முதலில் மகர சங்கராந்தி பண்டிகை அன்று ஒரு நாள் மட்டுமே கொண்டாடப்பட்ட இந்த நர நாராயண் கூடுகை தற்போது மகர சங்கராந்தி அன்று தொடங்கி எட்டு முதல் பத்து நாட்கள் வரை நீடிக்கும். சராசரியாக நான்கு முதல் ஐந்து இலட்சம் வரை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து மக்கள் வந்து இந்த விழாவில் கலந்துகொள்கிறார்கள். அந்த நாட்களில் சுற்று வட்டாரத்தில் நடக்கும் வணிக மதிப்பே கோடிக்கணக்கில் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  சுவாமி சத்யானந்த பரமஹன்சாவை கடவுளின் அவதாரம் என்று நம்பிய அவரது பக்தர்கள் இந்த நிகழ்வைத் தொடங்கி சிறப்பாக நடத்தி வருகிறார்கள்.

நர நாராயணர் கோவில்

சத்யானந்த சேவாஷ்ரம் சங்கம்[தொகு]

நர நாராயண் ஆசிரமத்தின் வாசல்

ஸ்ரீமத் ஸ்வாமி சத்யானந்த பரமஹன்சதேப்,என்பவராலேயே பக்கஞ்சோர்பக்கஞ்சோரில் உள்ள நர நாராயண கோவில் மற்றும் சத்யானந்த சேவாஷ்ரம் சங்கம் ஆகியவை நிறுவபட்டது. [2]

சுவாமி சத்யானந்த் பங்களாதேஷில் உள்ள ஃபரித்பூர் மாவட்டத்தில் உள்ள கலியாவில் பிறந்தார் (இந்தியப் பிரிவினைக்கு முன் வங்காள மாகாணமாக அறியப்பட்டது). சிறுவயதில் இருந்தே கடவுள் நம்பிக்கை அதிகமாக இருந்த. அவர் தனது இளமை பருவத்திலேயே தனது குடும்பத்தை விட்டு, துறவு பாதையை ஏற்றுக்கொண்டார். மதத்தின் மீதான அவரது நாட்டம் மற்றும் அவரது திறமையான பிரசங்கத்தின் காரணமாக, ஏராளமான பக்தர்கள் அவரைப் பின்பற்றத் தொடங்கினர்.  இந்திய நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த இவரின் சீடர்கள் இவரை கடவுளின் தூதராக வணங்கத் தொடங்கினர். [3]

முதல் ஆசிரமம்[தொகு]

ஆசிரமத்தின் காட்சி

பங்களாதேஷில் உள்ள மதன்பாதியில்  தனது வீட்டையே  மாற்றியமைத்து தனது முதல் ஆசிரமமாக சுவாமி சத்யானந்தா கட்டி ஆரம்பித்தார். பல ஆண்டுகளாக அங்கேயேஅவரை பின்பற்றுபவர்களுடன் இணைந்து மக்களுக்கு சேவை செய்து வந்தார். 1947 இந்தியப் பிரிவினைக்குப் பிறகு சுவாமி சத்யானந்தா தனது சீடருடன் இந்தியாவுக்கு அகதிகளாக வந்து பரல்கோட்டில் (தற்போதைய பக்கஞ்சோர்) குடியேறினார். பக்கஞ்சோரில் உள்ள நர நாராயண் சேவாஸ்ரமத்தை தொடங்கி மக்களுக்கு சேவை செய்துள்ளார்.  

சுவாமியின் சமாதி[தொகு]

சுவாமி சத்யானந்தா தனது மனித வாழ்க்கை காலத்தில் நர நாராயண் சேவாகிராம் மூலம் மக்களுக்கு ஆன்மீக சேவைகளை செய்தார், மேலும் உள்ளூர் மக்கள் அவரை ஒரு கடவுளின் அவதாரம் என்று நம்பினர். 1974 ம் ஆண்டில் சுவாமி சத்யானந்தா சமாதி நிலையை அடைந்தார். அவரது கல்லறை இப்பகுதியில் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ள கோயில் ஆகும். அவரது பூத உடல் அவரது சிலைக்கு கீழே ஒரு சிறப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. [4]

சுவாமியின் சமாதி

முதல் தனியார் மேல்நிலைப்பள்ளி[தொகு]

1947 இந்தியப் பிரிவினைக்குப் பிறகு அகதிகளாக வந்த மக்கள் அந்தப் பகுதியின் மிகப் பெரிய பிரச்சனையாக அவர்களின் குழந்தைகளின் கல்வியை எதிர்கொண்டனர். முறையான கல்வி கிடைக்காமல் துன்பப்படுவதைக் கண்ட அவரது சீடர்கள் மற்றும் நர நாராயண் சேவாகிராம் நிறுவனத்தின் ஆதரவுடன், சுவாமி சத்யானந்தா  குழந்தைகளுக்காக முதல் தனியார் மேல்நிலைப் பள்ளியை அங்கே நிறுவினார். 1979 இல் பதிவு செய்யப்பட்ட இந்தப் பள்ளி தற்போது '''சத்யானந்தா மேல்நிலைப் பள்ளி''' என்று அவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது. [5]

பக்கஞ்சோர் கூடுகையின் கருப்பொருள் பாடல்[தொகு]

2023 ஆம் ஆண்டில், நடைபெற்ற கூடுகையை மேலும் பிரபலமாகும் வகையில் மாற்ற, அதற்காகவே கருப்பொருள் பாடலை பிரசென்ஜித் ஹல்தார் (ஜீத்) உருவாக்கினார். [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Pakhanjore mela. "News in Naiduniya". பார்க்கப்பட்ட நாள் 11 April 2015.
  2. Nara narayan sevashram sanga. "SATYANANDA SEVASHRAM SANGHA Pakhanjore". Archived from the original on 25 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 26 May 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Festival, Celebration starts on 14 January (13 January 2020). "Biggest fair to attract many". Swarajdigital.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  4. Pakhanjore Mela, Life of swami Satyananda (15 January 2019). "Mela for 7 Days". பார்க்கப்பட்ட நாள் 15 January 2019.
  5. school. "satyanand higher secondary school". பார்க்கப்பட்ட நாள் 11 April 2015.
  6. Close to Pakhanjore, Anthem (14 January 2023). "Pakhanjore Mela Anthem". Reverbnation. பார்க்கப்பட்ட நாள் 14 January 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நர_நாராயணர்_கூடுகை&oldid=3699215" இலிருந்து மீள்விக்கப்பட்டது