நரோவல் மாவட்டம்
நரோவல்
ضِلع نارووال | |
|---|---|
மாவட்டம் | |
தர்பார் சாகிப் குருத்துவார், கர்த்தார்பூர் | |
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நரோவல் மாவட்டத்தின் அமைவிடம் | |
| நாடு | |
| மாகாணம் | பஞ்சாப் |
| கோட்டம் | குஜ்ரன்வாலா |
| தலைமையிடம் | நரோவல் |
| அரசு | |
| • வகை | மாவட்டம் (நிர்வாகி-துணை ஆணையாளர்) |
| பரப்பளவு | |
| • மாவட்டம் | 2,337 km2 (902 sq mi) |
| • பரப்பளவு தரவரிசை | 13வது |
| ஏற்றம் | 238 m (781 ft) |
| மக்கள்தொகை (2023)[1] | |
| • மாவட்டம் | 19,50,954 |
| • தரவரிசை | 42 |
| • அடர்த்தி | 830/km2 (2,200/sq mi) |
| அடர்த்தி தரவரிசை | 29 |
| • நகர்ப்புறம் | 3,49,095 (17.89%) |
| • நாட்டுப்புறம் | 16,01,859 (82.11%) |
| எழுத்தறிவு | |
| • எழுத்தறிவு % |
|
| நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
| இடக் குறியீடு | 0542 |
| வருவாய் வட்டங்கள் | 3 |
| பல்கலைக்கழகங்கள் | 4 |
| மருத்துவக் கல்லூரிகள் | 2 (150 + 100 Seats) |
| இணையதளம் | narowal |
நரோவல் மாவட்டம் (Narowal District), பாக்கித்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் 41 மாவட்டங்களில் ஒன்றாகும். பஞ்சாப் மாகாணத்தின் வடகிழக்கில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நரோவல் நகரம் ஆகும். நரோவல் நகரமானது, பஞ்சாப் மாகாணத் தலைநகரான லாகூருக்கு வடகிழக்கே 109 கிலோமீட்டர் தொலைவிலும், நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தென்கிழக்கே 295 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. 1991ஆம் ஆண்டில் சியால்கோட் மாவட்டத்தின் 3 வருவாய் வட்டங்களைக் கொண்டு இம்மாவட்டம் நிறுவப்பட்டது.[3]
சிறப்பு
[தொகு]இம்மாவட்டத்தின் சாகர்கர் வட்டத்தில் கர்த்தார்பூரில் உள்ள சீக்கியர்கள் போற்றும் தர்பார் சாகிப் குருத்துவாருக்குச் செல்ல இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் தேரா பாபா நானக் எனுமிடத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட எல்லைகள்
[தொகு]இம்மாவட்டத்தின் வடக்கிலும், கிழக்கிலும், தெற்கிலும் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களும், தென்மேற்கில் சேய்க்குப்புரா மாவட்டம் மற்றும் மேற்கில் சியால்கோட் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்ட மக்கள் தொகை 1,950,954 ஆகும். பாலின விகிதம் 100 பெண்களுக்கு 104.40 ஆண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 75.28% ஆகும்.[1][4]இதன் மக்கள் தொகையில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 494,799 (25.36%) உள்ளனர்.[5]நகர்புறங்களில் 349,095 (17.89%) மக்கள் வாழ்கின்றனர்.[1]
சமயங்கள்
[தொகு]இம்மாவட்டத்தில் இசுலாம் சமயத்தை 97.48% மக்களும், கிறித்துவத்தை 2.23% மக்களும், அகமதியா, இந்து மற்றும் சீக்கிய சமயங்களை 0.29% மக்களும் பின்பற்றுகின்றனர்.
மொழிகள்
[தொகு]இம்மாவட்டத்தில் பஞ்சாபி மொழியை 94.26% மக்களும், உருது மொழியை 3.05% மக்களும், மேவாதி மொழியை 2.28% மக்களும் மற்றும் பிற மொழிகளை 0.38% மக்கள் தாய் மொழியாகப் பேசுகின்றனர்.[6]
கல்வி
[தொகு]- கலை, அறிவியல் & வணிகவியல் கல்லூரிகள் 12
- நரோவால் பல்கலைக்கழகம்
- நரோவால் மருத்துவக் கல்லூரி
- லாகூர் பல்கலைக்கழகம், நரோவால் வளாகம்
- லாகூர் பொறியியல் & தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், நரோவால் வளாகம்
- லாகூர் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம், நரோவால் வளாகம்
அரசியல்
[தொகு]இம்மாவட்டம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு 4 தொகுதிகளைக் கொண்டுள்ளது.
மாவாட்ட நிர்வாகம்
[தொகு]இம்மாவட்டம் 3 வருவாய் வட்டங்களையும், 74 ஒன்றியக் குழுக்களையும் கொண்டுள்ளது.[7]
| வருவாய் வட்டம் | பரப்பளவு
(km²)[8] |
மக்கள் தொகை
(2023) |
மக்கள்தொகை அடர்த்தி
(ppl/km²) (2023) |
எழுத்தறிவு %
(2023)[9] |
ஒன்றியக் குழுக்கள் |
|---|---|---|---|---|---|
| சாகர்கர் வட்டம் | 835 | 769,339 | 921.36 | 76.28% | 28 |
| நரோவல் வட்டம் | 1,065 | 680,402 | 638.88 | 76.78% | 28 |
| ஜாபர்வால் வட்டம் | 437 | 501,213 | 1,146.94 | 71.72% | 26 |
நகர்புறங்கள்
[தொகு]இம்மாவட்டம் 6 நகர்புறப் பகுதிகளைக் கொண்டுள்ளது.
| நகரம் | பரப்பளவு
(km²) |
மக்கள் தொகை
(2023) |
மக்கள்தொகை அடரத்தி
(ppl/km²) (2023) |
எழுத்தறிவு %
(2023) |
|---|---|---|---|---|
| நரோவல் | 200 | 130,692 | ... | ... |
| சாகர்கர் | ... | 126,742 | ... | ... |
| ஜாபர்வால் | 10 | 52,639 | ... | ... |
| கிலா சோபா சிங் | ... | 19,671 | ... | ... |
| பத்தோமதி | ... | 19,351 | ... | ... |
| தல்வண்டி பிந்தரன் | ... | 13,000 | ... | ... |

மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 "7th Population and Housing Census - Detailed Results: Table 1" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023" (PDF).
- ↑ "Narowal - Punjab Portal". Archived from the original on 20 December 2016. Retrieved 15 December 2016.
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 12" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 5" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "District Wise Tables: Population by Mother Tongue" (PDF). www.pbscensus.gov.pk. Pakistan Bureau of Statistics.
- ↑ "Tehsils & Unions in the District of Narowal". National Reconstruction Bureau, Government of Pakistan. Archived from the original on 2008-04-01.
- ↑ "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, PUNJAB" (PDF).
- ↑ "LITERACY RATE, ENROLMENT AND OUT OF SCHOOL POPULATION BY SEX AND RURAL/URBAN, CENSUS-2023, PUNJAB" (PDF).