உள்ளடக்கத்துக்குச் செல்

நரேன் சந்து பரசார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நரேன் சந்து பரசார் (Narain Chand Parashar, ஜூலை 2 1934- பிப்ரவரி 21, 2001) ஓர் இந்திய பேராசிரியரும், மொழியியலாளரும் எழுத்தாளரும் ஆவார். பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோசுபூரில் பிறந்தார். ஆங்கில மொழியில் உயர்நிலைப் பட்டம் பெற்றார். வங்காளம், சீனம், ஜப்பானியம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். தமிழ், ஜெர்மன், பஞ்சாபி ஆகிய மொழிகளைப் பற்றியும் அறிந்தவர். மொழியியலாளர் என்னும் நோக்கில் பகாரிய மொழியையும் இந்திய ஆட்சி மொழிகளுள் ஒன்றாக ஏற்கப் போராடியவர். இக்கோரிக்கை இந்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. ஆங்கிலம், இந்தி, பகாரி ஆகிய மொழிகளில் எழுதும் இவர், பௌத்தம், மலைப்பகுதி மக்களின் சமூக-அரசியல் பிரச்சனைகள் குறித்து எழுதுபவர். இந்திய அரசின் மக்களவை (கீழவை)) உறுப்பினராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். இமாச்சலப் பிரதேசத்தின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டு, 21 பிப்பிரவரி 2001 அன்று இறந்தார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Obituary References". Archived from the original on 2012-02-12. பார்க்கப்பட்ட நாள் 2012-12-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரேன்_சந்து_பரசார்&oldid=3946895" இலிருந்து மீள்விக்கப்பட்டது