நரம்புத்திசு புற்றுநோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நரம்புத்திசு புற்றுநோய்
Neuroblastoma
Neuroblastoma rosettes.jpg
ரோசா வடிவில் உருவாகும் நரம்புத்திசு புற்றுநோய் செல்லின் நுண்ணோக்கி தோற்றம்
சிறப்புபுற்றுநோயியல்
அறிகுறிகள்எலும்பு வலி, அடிவயிறு, கழுத்து அல்லது மார்பில் அல்லது தோலின் கீழ் வலியற்ற நீல நிற கட்டி[1]
வழமையான தொடக்கம்5 வயதுக்கு குறைவான குழந்தைகள்[1]
காரணங்கள்மரபியல் சந்ததிமாற்றம்[1]
நோயறிதல்உயிரகச்செதுக்கு[1]
சிகிச்சைகவனிப்பு, அறுவை சிகிச்சை, கதிர் மருத்துவம், வேதிச்சிகிச்சை, வேர்ச்செல் மாற்றம்[1]
முன்கணிப்புஅமெரிக்காவில் உயிர்பிழைக்கும் சதவீதம் ~95% (< 1 வயது), 68% (1–14 வயது)[2]
நிகழும் வீதம்7,000 இல் ஒரு குழந்தை[2]
இறப்புகள்குழந்தைகளின் புற்றுநோய் இறப்பில் 15% மரணத்திற்கு நரம்புத்திசு புற்று காரணமாகிறது[3]

நரம்புத்திசு புற்றுநோய் (Neuroblastoma) என்பது குறிப்பிட்ட வகை நரம்புத்திசுக்களில் உருவாகும் வகையான புற்றுநோயாகும். நியூரோபிளாசுடோமா, நரம்புமூலச்செல் புற்றுநோய், என்.பி என்ற பெயர்களாலும் இந்நோய் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் அட்ரீனல் சுரப்பி ஒன்றிலிருந்து நரம்புத்திசு புற்றுநோய் தொடங்குகிறது. ஆனால் கழுத்து, மார்பு, வயிறு அல்லது முதுகெலும்புகளிலும் உருவாகலாம். எலும்பு வலி, அடிவயிறு, கழுத்து அல்லது மார்பில் அல்லது தோலின் கீழ் வலியற்ற நீல நிற கட்டி ஆகியன அறிகுறிகளாகத் தோன்றும்[1]. பொதுவாக மனித வளர்ச்சியின் போது ஏற்படும் மரபணு மாற்றத்தால் நரம்புத்திசு புற்றுநோய் ஏற்படுகிறது. அரிதாக, இது ஒரு நபரின் பெற்றோரிடமிருந்து மரபுவழியாகப் பெறப்பட்ட பிறழ்வு காரணமாகவும் இருக்கலாம். [1]. நோய் தோன்றுவதற்கான சுற்றுச்சூழல் காரணிகளின் தொடர்புகள் இருப்பதாக எதுவும் கண்டறியப்படவில்லை. [2]. திசுப் பரிசோதனை மூலம் நோயறிதல் காணப்படுகிறது. கர்ப்ப கால குழந்தைக்கு இந்நோய் இருப்பதை மீயொலி நோட்டம் மூலம் சிலநேரங்களில் கண்டறியலாம். பொதுவாக நோயறிதல் நிகழும்போது மாற்றிடம் புகல் முறையில் புற்றுநோய் ஏற்கனவே பல உறுப்புகளுக்கு பரவியிருக்கும் ஒரு குழந்தையின் வயது, புற்றுநோயின் நிலை மற்றும் புற்றுநோயின் தோற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் குறைந்த ஆபத்துள்ள இடைநிலை, அதிக ஆபத்துள்ள குழுநிலை என இரண்டு வகைகளாக நரம்புத்திசு புற்றுநோய் வகைப்படுத்தப்படுகிறது.

சிகிச்சையும் விளைவுகளும் நோயாளி இருக்கும் ஆபத்து குழுவைப் பொறுத்தது. [1]. அவதானிப்பு, அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு, கீமோதெரபி அல்லது குருத்தணு மாற்று ஆகியவை நோய்க்கான சிகிச்சைகளில் அடங்கும். குழந்தைகளில் காணப்படும் குறைந்த ஆபத்து வகை நோய் பொதுவாக அறுவை சிகிச்சை அல்லது வெறுமனே கவனிப்பு மூலம் ஒரு நல்ல விளைவைக் ஏற்படுத்தும். அதிக ஆபத்துள்ள வகை நோய்க்கு கடுமையான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டாலும் நீண்டகாலம் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகள் 40 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.[4]

நரம்புத்திசு புற்றுநோய் குழந்தைகளுக்கு ஏற்படும் மிகவும் பொதுவான புற்றுநோயாகும். லுகேமியா எனப்படும் இரத்தப் புற்றுநோய், மூளை புற்றுநோய் ஆகிய புற்றுநோய்களுக்கு அடுத்து குழந்தைகளுக்கு ஏற்படும் மூன்றாவது பொதுவான புற்று நோய் நரம்புத் திசு புற்றுநோயாகும்.[4] ஒவ்வொரு 7,000 குழந்தைகளில் ஒரு குழந்தை சில நேரங்களில் இந்நோயால் பாதிக்கப்படுகிறார். [2]. நோயால் பாதிக்கப்படும் நபர்களில் 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் மட்டும் 90 சதவீதம் உள்ளனர். பெரியவர்களுக்கு அரிதாகவே நரம்புத்திசு புற்றுநோய் ஏற்படுகிறது. புற்றுநோயால் இறக்கும் குழந்தைகளில், சுமார் 15% குழந்தைகள் நரம்புத்திசு புற்றுநோய் காரணமாக இறக்கிறார்கள்[3]. நரம்புத்திசு புற்றுநோய் முதன்முதலில் 1800 ஆம் ஆண்டுகளில் கண்டறியப்பட்டு விவரிக்கப்பட்டது[5].

அறிகுறிகள்[தொகு]

நரம்புத்திசு புற்றுநோயின் முதல் அறிகுறிகள் பெரும்பாலும் தெளிவற்றவை என்பதால் அவை நோயறிதலை கடினமாக்குகின்றன. சோர்வு, பசியின்மை, காய்ச்சல், மூட்டு வலி ஆகியவை பொதுவான அறிகுறிகள் ஆகும். இந்த அறிகுறிகள் முதன்மை கட்டி தோன்றியுள்ள இடங்கள் மற்றும் மாற்றிடம் புகல் எனப்படும் புற்றுநோய் உடலில் பரவுதல் ஆகியவற்றைச் சார்ந்துள்ளது[6].

 • அடிவயிற்றில் ஏற்படும் கட்டி வயிறு வீக்கம் மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.
 • மார்பில் ஏற்படும் ஒரு கட்டி சுவாசப்பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும்.
 • முதுகெலும்பில் ஏற்படும் கட்டு முள்ளந்தண்டு வடத்தை அழுத்தினால் பலவீனம் ஏற்படக்கூடும், இதனால் நிற்கவோ, நடக்கவோ இயலாமை ஏற்படலாம்.
 • கால்கள் மற்றும் இடுப்புகளில் ஏற்படும் எலும்புப் புண்கள் வலி மற்றும் தாங்கித் தாங்கி நடத்தலை ஏற்படுத்தக்கூடும்.
 • கண்கள் அல்லது அதைச்சுற்றியுள்ள எலும்புகளில் உள்ள ஒரு கட்டி தனித்துவமான சிராய்ப்பு மற்றும் கண் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
 • எலும்பு மச்சையின் ஊடுறுவல் காரணமாக இரத்தசோகையும் அதைத் தொடர்ந்து நிறமிழப்பும் ஏற்படக்கூடும்.

எந்தவொரு அறிகுறிகளும் வெளிப்படுவதற்கு முன்பே நரம்புத்திசு புற்றுநோய் பெரும்பாலும் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகிறது, மேலும் 50 முதல் 60% நரம்புத்திசு புற்றுநோய் நோயாளிகளில் மாற்றிடப்புகல் முறையில் நோய் பரவல் காணப்படுகிறது [7].

நரம்புத்திசு புற்றுநோய் தோன்றுவதற்கான பொதுவான இடம் அட்ரீனல் சுரப்பியாகும். 40% உட்புற கட்டிகளிலும் 60% நோய் பரவல் மூலமாகவும் ஏற்படுகிறது. கழுத்து முதல் இடுப்பு வரையுள்ள நரம்பு மண்டல சங்கிலியில் எங்கும் இந்நோய் உருவாகலாம். கழுத்து (1%), மார்பு (19%), அடிவயிறு (30%), அல்லது இடுப்பு (1%). அரிதான சந்தர்ப்பங்களில் முதன்மைக் கட்டியைக் கண்டறிய முடியாது [8].

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 "Neuroblastoma Treatment" (20 January 2016). மூல முகவரியிலிருந்து 10 November 2016 அன்று பரணிடப்பட்டது.
 2. 2.0 2.1 2.2 2.3 "Neuroblastoma Treatment" (25 August 2016). மூல முகவரியிலிருந்து 10 November 2016 அன்று பரணிடப்பட்டது.
 3. 3.0 3.1 World Cancer Report 2014. http://publications.iarc.fr/Non-Series-Publications/World-Cancer-Reports/World-Cancer-Report-2014. 
 4. 4.0 4.1 Neuroblastoma. 
 5. The History of Cancer: An Annotated Bibliography. https://books.google.com/books?id=oAX8jOJ9uO0C&pg=PA177. 
 6. Wheeler, Kate (January 1, 2013). "Neuroblastoma in children". Macmillan. மூல முகவரியிலிருந்து October 5, 2015 அன்று பரணிடப்பட்டது.
 7. "Neuroblastoma: Pediatric Cancers: Merck Manual Professional". மூல முகவரியிலிருந்து 2007-12-18 அன்று பரணிடப்பட்டது.
 8. "Changing trends of research and treatment in infant neuroblastoma". Pediatric Blood & Cancer 49 (7 Suppl): 1060–5. December 2007. doi:10.1002/pbc.21354. பப்மெட்:17943963. 

புற இணைப்புகள்[தொகு]

வகைப்பாடு
வெளி இணைப்புகள்