நரபலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நரபலி என்பது இறைவனுக்கு மனிதர்களை பலி கொடுக்கும் சடங்காகும். இம்முறை தொன்மையான மதங்களில் இருந்து வந்துள்ளது. போர்களில் வெல்லவும், கள்ளத்தில் வெற்றிபெறவும் என பல்வேறு காரணங்களுக்காக பலியிடுதல் நடந்து வந்துள்ளது.

சொல்லிலக்கணம்[தொகு]

நரபலி என்பதில் நர- நரன்- மனிதன் எனும் பொருளும், பலி - தியாகம் எனும் பொருளைத் தரும்.

இந்து சமயம்[தொகு]

பெண் கடவுளான காளி மனித பலியை ஏற்றுக் கொண்டிருக்கும் சிற்பம்

இந்து சமயத்தில் நரபலி கொடுப்பது ஒரு வழிபாட்டு சடங்காக இருந்து வந்துள்ளது. சாக்த மத பிரிவிலும் நாட்டாறியல் வழிபாட்டிலும் இந்த பலி கொடுத்தல் போற்றப்பட்டுள்ளது.

தன்னுடைய வேண்டுதலுக்காக பிற மனிர்தர்களையோ அல்லது தன்னையோ பலியாக கொடுப்பது பற்றி இந்து சமய நூல்களில் குறிப்பிடப் பட்டுள்ளன. விக்ரமாதித்தன் தொன்ம கதையில் மன்னர்களை பலிகொடுக்கும் சாமியாரின் சூழ்ச்சி பிரதானமானது. காளியிடம் வரம் பெற விக்ரமாதித்தன் சுய பலி கொடுப்பது பற்றி கிளைக் கதையில் கூறப்பட்டுள்ளது.

கன்னி பலி[தொகு]

பெண்களில் கன்னிப் பெண்களை பலியிடும் சடங்குகளும் தொன்ம காலத்தில் இருந்துள்ளன.

சூல் பெண் பலி[தொகு]

பெண்களில் கருவுற்ற பெண்ணை (சூல் பெண்) பலி கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது. இப்பலியிடும் முறையில் கருவுற்ற பெண்ணின் வயிற்றை கிழித்து உள்ளிருக்கும் பிண்டத்தினை எடுத்து பலியிடுதலும், பின் வெற்று வயிற்றில் திரியிட்டு விளக்கேற்றுவதும் இருந்துள்ளது. [1]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

  1. பொண்ணிறத்தாள் அம்மன் நாட்டார் கதை

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நரபலி&oldid=2920018" இருந்து மீள்விக்கப்பட்டது