உள்ளடக்கத்துக்குச் செல்

நரந்தம் புல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நரந்தம் புல் (Cymbopogon citratus, பொதுவாக West Indian lemon grass அல்லது பொதுவாக lemon grass என அழைக்கப்படுவது) என்பது கடல்சார் தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு வெப்பமண்டல தாவரமாகும், அங்கிருந்து மேலும் பல வெப்பமண்டல பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.[1]

இது பெரும்பாலும் தண்டு வடிவத்தில் விற்கப்படுகிறது. இங்கிலாந்து போன்ற மித வெப்பமான பகுதிகளில் இதை வளர்க்க முடியும் என்றாலும், உறைபனியை இது தாங்காது.

பரவல்

[தொகு]

நரந்தம் புல்லானது கடல்சார் தென்கிழக்காசியாவை ( மலேசியா ) பூர்வீகமாகக் கொண்டது. இது காலனித்துவ காலத்திலிருந்து தெற்கு ஆசியாவில் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டது. முதலாம் முதலாம் உலகப் போருக்குப் பிறகு, மடகாசுகர், தென் அமெரிக்கா மற்றும் நடு அமெரிக்காவிற்கு இது அறிமுகப்படுத்தப்பட்டது. இது இப்போது உலகளவில் வெப்பமண்டலங்கள் மற்றும் துணை வெப்பமண்டலப் பகுதிகள் முழுவதும் இயல்பாக்கம் செய்யப்பட்டுள்ளது.[2]

இதன் தாயகப் பகுதியான இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் செரே, செராய் அல்லது செராய் டாபூர் என்று அழைக்கப்படுகிறது; மேலும் டாங்கலட், சாலை, மற்றும் பலியோகோ என்று பிலிப்பைன்சில் அழைக்கப்படுகிறது.[2]

விளக்கம்

[தொகு]

இது சங்க இலக்கியங்களில் நரத்தம், கற்பூரப்புல், வாசனைப்புல் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது. இத்தாவரம் இரண்டடி உயரம் வரை கலித்துத் தழைத்து வளரும் புல் ஆகும். இதில் நறுமணம் உண்டு. புல்லின் தண்டு இலையிலெல்லாம் சுரப்பிகள் உள்ளன பெரிதும் வறண்ட நிலப் பகுதிகளிலும் மலைப் பாங்கான பகுதிகளிலும் தாமாகவே செழித்துப் பல்லாண்டு வளரும். குத்துக்குத்தாகத் தோன்றும். இதன் இலைகள் தட்டையானது: நீளமானது: சொரசொரப்பானது.[3]

சமையல் பயன்கள்

[தொகு]
நரத்தம் புல்லின் இலைகளின் முடிச்சுகள் பிலிப்பைன்சில் ஒரு பேரங்காடியியல் விற்கப்படுகின்றன.

நரந்தம் புல்லானது பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவில் ஏராளமாக உள்ளது, அங்கு இது டாங்லாட் அல்லது செரே என்று அழைக்கப்படுகிறது . அதன் மணம் கொண்ட இலைகள் பாரம்பரியமாக சமையலில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக லெச்சான் மற்றும் வறுத்த கோழிக்கு பயன்படுத்தப்படுகின்றன.[4]

இதன் காய்ந்த இலைகளை மட்டுமே கொண்டோ அல்லது தேயிலையோடு சுவைக்காக சிறிது சேர்த்தோ தேநீர் தயாரிக்கலாம். இது எலுமிச்சை சாற்றைப் போன்று சுவையை அளிக்கிறது. என்றாலும் இதன் சுவையானது கணிசமான புளிப்பு அல்லது கடும்புளிப்பில் லேசான இனிப்பு கலந்தது போன்று இருக்கும்.

மருத்துவ பயன்கள்

[தொகு]

நரத்தம் புல்லின் இலைகள் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இவை பெரும்பாலும் மூலிகை துணை உணவுகள் மற்றும் தேநீரில் பயன்படுத்தப்படுகின்றன.

பிரேசிலின் க்ராஹ் மக்களின் நாட்டுப்புற மருத்துவத்தில், இது ஏக்க அடக்கி, உறக்க ஊக்கி மற்றும் வலிப்படக்கி ஆகிய பண்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.[5][6]

இந்தியாவின் பாரம்பரிய மருத்துவத்திலும் இத்தாவர இலைகள் ஊக்கியாகவும், வியர்வைதள்ளியாகவும், நோய் முறைப்படி அடுத்தடுத்து வருவததடுக்கும் மருந்தாகவும், ஆன்டிகாடர்ஹால் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதன் எண்ணையானது இரைப்பைக் குடல் வலி நீக்கி, கால்நடைகளின் மூளைத்திறன் குறைப்பி, வலி நிவாரணி, காய்ச்சலடக்கி, பக்ட்டீரியப்பகை, மற்றும் காளான் நீக்கி என பயன்படுத்தப்படுகிறது .

ஆய்வக ஆய்வுகளில் செயற்கைக் கல முறையில், ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் [7][8][9] மற்றும் காளான் நீக்கி பண்புகள் [10] காணப்பட்டன. ( சிம்போபோகன் மார்டினி அந்த ஆய்வில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது).

நரந்தம் புல் எண்ணெயில் மைர்சீன், சிட்ரோனெல்லா, சிட்ரோனெல்லால் மற்றும் ஜெரானியோல் ஆகியவற்றுடன் 65-85% சிட்ரலும் உள்ளது. நீரிலிருந்து எண்ணெயைப் பிரிக்க ஹைட்ரோஸ்டீம் வடிகட்டுதல், ஒடுக்கம் மற்றும் குளிரூட்டல் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். நீர்த்திரவக்கூழ், ஒரு பக்க விளைபொருள் செயல்முறையின் துணை தயாரிப்பாக, லோஷன்கள், கிரீம்கள் மற்றும் முக சுத்தப்படுத்திகள் போன்ற தோல் பராமரிப்பு பொருட்களின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த தயாரிப்புகளில் முக்கிய பொருட்கள் நறுமண சிகிச்சையில் பயன்படுத்தப்படும் நரந்தம் புல் எண்ணெய் மற்றும் "நீக்ரோஸ் எண்ணெய்" ( தேங்காய் எண்ணெய்யுடன் எலுமிச்சை புல் எண்ணெயின் கலவை) ஆகும்.[11]

பூச்சிகள் மீதான விளைவு

[தொகு]

தேனீ வளர்ப்பவர்கள் சில நேரங்களில் தேனீக் கூட்டங்களை ஈர்க்க பொறிகளில் நரந்தம் புல் எண்ணெய் பயன்படுத்துவர். வீட்டு விலங்குகளை கடிக்கும் ஒருவகை ஈயை [12] விரட்டும் திறனுக்காக நரந்தம் புல் எண்ணெயைக் கொண்டு சோதிக்கப்பட்டது.

குறிப்புகள்

[தொகு]
  1. "Cymbopogon citratus". Plants of the World Online. Royal Botanic Gardens, Kew. பார்க்கப்பட்ட நாள் March 4, 2019.
  2. 2.0 2.1 Oyen, L.P.A. "Cymbopogon citratus (PROSEA)". Pl@ntUse. Archived from the original on 30 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 30 June 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. சங்க இலக்கியத் தாவரங்கள், டாக்டர் கு. சீநிவாசன், பக்கம். 770-771
  4. "Tanglad / Lemongrass". Market Manila. August 21, 2006. பார்க்கப்பட்ட நாள் July 27, 2011.
  5. "Neurobehavioral effect of essential oil of Cymbopogon citratus in mice". Phytomedicine 16 (2–3): 265–70. March 2009. doi:10.1016/j.phymed.2007.04.007. பப்மெட்:17561386. 
  6. Rodrigues, Eliana & Carlini, E.A. (2006): Plants with possible psychoactive effects used by the Krahô Indians, Brazil. Revista Brasileira de Psiquiatria 28(4): 277-282. PDF fulltext பரணிடப்பட்டது 2020-08-01 at the வந்தவழி இயந்திரம்
  7. Figueirinha A. Cruz MT. Francisco V. Lopes MC. Batista MT.. Anti-inflammatory activity of Cymbopogon citratus leaf infusion in lipopolysaccharide-stimulated dendritic cells: contribution of the polyphenols. 
  8. Lee HJ. Jeong HS. Kim DJ. Noh YH. Yuk DY. Hong JT.. Inhibitory effect of citral on NO production by suppression of iNOS expression and NF-kappa B activation in RAW264.7 cells. 
  9. Tiwari M, Dwivedi UN, Kakkar P. Suppression of oxidative stress and pro-inflammatory mediators by Cymbopogon citratus D. Stapf extract in lipopolysaccharide stimulated murine alveolar macrophages. 
  10. Sunita Bansod (2008). Antifungal Activity of Essential Oils from Indian Medicinal Plants Against Human Pathogenic Aspergillus fumigatus and A. niger. 
  11. Inquirer.net, ‘Tanglad’ goes mainstream, yields essential oils பரணிடப்பட்டது 2008-06-29 at the வந்தவழி இயந்திரம்
  12. The repellency of lemongrass oil against stable flies, tested using video tracking. http://www.parasite-journal.org/articles/parasite/full_html/2013/01/parasite130015/parasite130015.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரந்தம்_புல்&oldid=3560109" இலிருந்து மீள்விக்கப்பட்டது