நரசிம்மன் (காலச்சூரி வம்சம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நரசிம்மன்
தஹாலாவின் மன்னன்
ஆட்சிக்காலம்சுமார் பொ.ச. 1153-1163
முன்னையவர்கயகர்ணன்
பின்னையவர்செயசிம்மன்
அரசமரபுதிரிபுரியின் காலச்சூரிகள்
தந்தைகயகர்ணன்

நரசிம்மன் (Narasimha; ஆட்சி. பொ.ச. 1153-1163 ) திரிபுரியின் காலச்சூரி வம்சத்தின் மன்னனாவான். மத்திய இந்தியாவில் திரிபுரியை ஆண்ட திரிபுரி காலச்சூரி வம்சத்தின் ஆட்சியாளனாவான். இவனது இராச்சியம் சேதி நாடு அல்லது தஹாலா பகுதியை (இன்றைய மத்தியப் பிரதேசம்) மையமாகக் கொண்டிருந்தது. நரசிம்மன் காலச்சூரி மன்னன் கயகர்ணனின் மகனாவான். நரசிம்மனின் இராஜகுரு (அரச ஆசான்) கீர்த்தி-சிவன் என்பவராவார். [1]

கைமூர் மலைத்தொடரின் வடக்கே நரசிம்மனின் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சந்தேல மன்னன் மதனவர்மனிடம் தன் தந்தை இழந்த பகுதியை இவன் மீட்டெடுத்தான் என்பதை இது உணர்த்துகிறது. [2] நரசிம்மன் ஒரு ஆண் வாரிசில்லாமல் இறந்துவிட்டதாகத் தெரிகிறது. இவனுக்குப் பிறகு இவனது சகோதரன் செயசிம்மன் ஆட்சிக்கு வந்தான். [2]

சான்றுகள்[தொகு]

  1. R. K. Sharma 1980, ப. 84.
  2. 2.0 2.1 V. V. Mirashi 1957, ப. 495.

உசாத்துணை[தொகு]