நரசிங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நரசிங்கர் என்றும் நரசிங்கமுனையரைய நாயானார் என்றும் அறிப்படுபவர் திருமுனைப்பாடி நாட்டின் அரசரும், சிவனடியாரும் ஆவார். நரசிங்கர் என்பது இவரது இயற்பெயராகும்.

இவர் சுந்தரமூர்த்தி நாயனரை மகனாக வளர்த்தவர். திருவாதிரை நாளில் இவர் சிவபெருமானை வணங்கி வழிபடும் வழக்கமுடையவர். அந்நாளில் திருநீறு அணிந்து வரும் அடியார்கள் அனைவருக்கும் நூறு பொன் தருவதை வழமையாகக் கொண்டிருந்தார், ஒரு முறை திருவாதிரையன்று காமத்துடன் வந்த ஒருவனைக் கண்டு அனைவரும் வெறுத்தனர். ஆனால் நரசிங்கர் மட்டும் அவரையும் சிவனடியாராகக் கொண்டு அவருக்கும் பொருள் தந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நரசிங்கர்&oldid=1837672" இலிருந்து மீள்விக்கப்பட்டது