நரசிங்கபுரம் (இராணிப்பேட்டை மாவட்டம்)
நரசிங்கபுரம் Narasingapuram | |
|---|---|
| ஆள்கூறுகள்: 12°58′20″N 79°17′44″E / 12.97222°N 79.29556°E | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | இராணிப்பேட்டை |
| மக்கள்தொகை (2001) | |
| • மொத்தம் | 10,555 |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், தெலுங்கு |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
நரசிங்கபுரம் (Narasingapuram) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள கணக்கெடுப்பில் உள்ள நகரமாகும்.
மக்கள் தொகையியல்
[தொகு]2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,[1] நரசிங்கபுரத்தின் மக்கள் தொகை 10,555 ஆகும். இம்மக்கள் தொகையில் ஆண்கள் 50% மற்றும் பெண்கள் 50% இருந்தனர். நரசிங்கபுரத்தின் சராசரி எழுத்தறிவு விகிதம் 76% ஆகும். இது தேசிய சராசரியான 59.5%-என்பதை விட அதிகமாகும். இத்தொகையில் ஆண்களின் எழுத்தறிவு 82% மற்றும் பெண்களின் எழுத்தறிவு 71% ஆகும். நரசிங்கபுரத்தில், மக்கள் தொகையில் 9% பேர் 6 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தனர்.
2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நரசிங்கபுரத்தின் மக்கள் தொகை 11,454 ஆகும். இம்மக்கள் தொகையில் ஆண்கள் எண்ணிக்கை 5753 ஆகவும் பெண்கள் எண்ணிக்கை 5701 ஆகவும் இருந்தது. நரசிங்கபுரத்தின் சராசரி எழுத்தறிவு விகிதம் 86.52% ஆகும். இது தேசிய சராசரியான 80.09%-என்பதை விட அதிகமாகும். இத்தொகையில் ஆண்களின் எழுத்தறிவு 92.11% மற்றும் பெண்களின் எழுத்தறிவு 80.91% ஆகும். நரசிங்கபுரத்தில், மக்கள் தொகையில் 8.64% பேர் 6 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தனர்.[2]
2025 ஆம் ஆண்டில் நரசிங்கபுரம் கணக்கெடுப்பு நகரத்தின் தற்போதைய மதிப்பிடப்பட்ட மக்கள் தொகை தோராயமாக 16,400 ஆகும். கோவிட் 2019 காரணமாக நரசிங்கபுரம் நகரத்திற்கான 2021 ஆம் ஆண்டுக்கான திட்டமிடப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.
- ↑ "Narasingapuram Census Town City Population Census 2011-2025 | Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2025-12-26.