நரசிங்கபுரம், திருவண்ணாமலை மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர்வட்டம் தேவிகாபுரம் ஆரணி சாலையின் இடையில் அமைந்துள்ளது. இவ்வூரின் மக்களின் முக்கியத்தொழில் வேளாண்மையாகும். இவ்வூர் 15 ஆம் நுற்றாண்டி கல்வெட்டின்படி நரசிங்கநல்லுர், நரசிங்கப்பாடி என்று குறிப்பிடப்படுகிறது. இவ்வூரில் பல அரிய தொன்மைச் சின்னங்களைக்கொண்டு விளங்குகிறது. ஊரின் மேற்கே உள்ள கற்பலகையில் சதாசிவமகராயர் காலத்து (சக ஆண்டு 1482) அரிய கல்வெட்டு ஒன்று உள்ளது. இதில் முத்து லிங்கப்ப நாயக்கர் மகன் திருமலை நாயக்கர் என்பவர் நரசிங்கநல்லுரை ஒரு பாளையமாக உருவாக்கப்பட்டதைப் பற்றிய தகவல் குறிப்டப்பட்டுள்ளது. அதன் பல்குன்றக்கோட்டத்து முருகமங்கலம் பற்றைச் சார்ந்த தச்சூர் நாட்டில் உள்ள நரசிங்க நல்லுர் ஒரு பாளையமாக அறிவிக்கப்படுகிறது. இப்பாளையம் அனைத்து சாதியினரும் எந்தவிதமான வரியும் செலுத்தாமல் தங்கியிருக்கலாம் எனினும் 3 ஆண்டுகளுக்குப்பிறகு ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு 3 பணம் வரியாக தரவேண்டும் என்றும் சதாசிவ மகாராயருக்கு திருபுவனராயக்குழி என்றும் சம்புவராயஸ்பஞ்சாரியா என்ற பட்டமும் வழங்கிய செய்திகள் காணப்படுகின்றன. இவ்வூரில் சுமார் 500 வருட பழமை வாய்ந்த நரசிங்க பெருமாள் கோயில் ஒன்றும், சிவன் கோயில் ஒன்றும் உள்ளது. இவ்விரு கோயில்களிலும் சிலையின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது. ஊரின் நடுவே ஒரு பெரிய மண்டபம் சிலதமடைந்து காணப்படுகிறது. இது அக்காலத்தில் மக்களால் பெரிதும் பயன்படுத்தப்பட்ட இடமாக தெரிகிறது. இவ்வூரின் மேற்கே உள்ள சிறிய குன்று ஒன்றில் வடக்கு நோக்கிய விநாயர் ஆலயம் உள்ளது. இதன் எதிரே உள்ள படிக்கட்டு கல்லில் உள்ள கல்வெட்டு 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இதில் இக்கோயிலுக்கு 3000 குழி தானம் விடப்பட்ட செய்தி உள்ளது. நரசிங்கபுரம் மதுரா குப்பம் கிராமத்தில் 12 மற்றும் 14 ஆம் நுற்றாண்டைச் சேர்ந்த் 2 வீரக்கற்கள் காணப்படுகின்றன. நரசிங்கபுரம் பீரங்கி நரசிங்கபுரம் நடுகல்